என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "transfer"
- கால்நடை, பால்வளம், மீன்வளம், மீனவர்கள் நலத்துறை செயலாளராக சத்யபிரதா சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், சுற்றுலாத்துறை ஆணையராக இருந்த சமயமூர்த்தி, மனித வள மேலாண்மை துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத் துறை இருயக்குனராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
துணை முதலமைச்சரின் துணைச் செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.
சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறை செயலாளராக அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கால்நடை, பால்வளம், மீன்வளம், மீனவர்கள் நலத்துறை செயலாளராக சத்யபிரதா சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 2 பேரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
- பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பாரதி அண்ணாநகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக இருப்பவர் வனிதா. உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் சேதுமுருகன். இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
வாரத்தில் 1 நாள் கூட தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களின் கோரிக்கை குறித்து ஆசிரியர்களோ, பெற்றோர்களோ புகார் அளிக்கச் சென்றால் அங்கு யாரும் இருப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தலைமை ஆசிரியைக்கு உடந்தையாக உதவி தலைமை ஆசிரியரும் செயல்பட்டதால் அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த மாதம் 20-ந் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தபோது பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானலில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகாருக்கு உள்ளான வில்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து தலைமை ஆசிரியை வனிதாவையும், உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகனையும் பணி இடமாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியை வனிதா அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டு பள்ளம் பகுதியில் உள்ள பள்ளிக்கும், உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகன் பூண்டி பகுதியில் உள்ள பள்ளிக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை காவல் மாவட்ட ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையராக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மதுவிலக்குப் பிரிவு இயக்குனராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கள்ளச்சாராய சம்பவங்களைத் தடுக்க மதுவிலக்குப் பிரிவு இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஸ்ரீதர் நியமனம்.
மதுவிலக்குப் பிரிவு இயக்குனராக கார்த்திகா நியமனம்.
ஜவுளித்துறை இயக்குனராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கள்ளச்சாராய சம்பவங்களைத் தடுக்க மதுவிலக்குப் பிரிவு இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்த உத்தரவிட்ட தமிழக அரசு முக்கிய துறைகளின் செயலாளர்களை மாற்றியுள்ளது.
- சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் பணியிட மாற்றம்.
- தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம்.
தமிழ்நாடு முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்குத்துறை கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அபின் தினேஷ் மோடக் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.
இதற்கு முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
- மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும்
சென்னை:
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைத்து பணி நிரவல் கலந்தாய்வை பள்ளிக் கல்வி துறை நடத்துகிறது.
பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு அவசியமாக உள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பயிற்சி களமாக பள்ளி மைதானங்கள் விளங்கி வருகின்றன.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 700 மாணவர்களாக அரசு உயர்த்தி உள்ளது.
1997-ம் ஆண்டு அரசாணையின்படி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 250-ஐ தாண்டும்போது ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார்.
ஒவ்வொரு கூடுதல் 300 மாணவர்களுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர். அதிகபட்சமாக 3 பேர் வரை நியமிக்கப்படுவார்கள். மேல் நிலைப்பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.
அரசு பள்ளிகளில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்த நிலையில் அந்த இடங்களுக்கு புதிய உத்தரவின் படி கூடுதலாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இடமாற்றம செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது 700 மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் கொண்ட உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
700-க்கும் அதிகமாக மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 வரை உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 என இரண்டு பேருக்கு அனுமதி.
1500-க்கும் மேல் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் 2 உடற் கல்வி ஆசிரியர்கள் ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 அல்லது நிலை-1 என மொத்தம் 3 பேர் அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டுள்ளது.
தற்போது மாணவர்கள் இடையே போதைப்பொருள், புகையிலை பயன்பாடு இருக்கின்ற நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைப்பதன் மூலம் வகுப்புகள் குறையக் கூடும். இது மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- இளைஞர் ராஜ்குமாருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்து ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜ்குமாருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோட்டக்கரையில் இளைஞர் தீக்குளித்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் 3 பேரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
- பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
- வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
- நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
- பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலாஜி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சதீஷ்பாபு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் சிவக்குமார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) துரைசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவராகவும் (கி.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உமாசங்கர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேடியப்பன், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சையத் பயாஸ் அகமது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஹேமலதா, கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி), கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராக (வளர்ச்சி) இருந்த முகமது சிராஜிதீன், தளி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ), சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவப்பிரகாசம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மகேஸ்வரன், கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவல வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.
- 6 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
- அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட கலெக்டர்: பிருந்தா தேவி
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்: தட்பகராஜ்
தென்காசி மாவட்ட கலெக்டர்: கமல் கிஷோர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்: அருண் ராஜ்
வேலூர் மாவட்ட கலெக்டர்: சுப்புலட்சுமி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பாஸ்கர பாண்டியன்
வேளாண்மைத்துறை இயக்குனர்: பி. முருகேஷ்
தோட்டக்கலை இயக்குனர்: பி.குமாரவேல் பாண்டியன்
அரசு துணைச் செயலாளர்: டி.ரவிச்சந்திரன்
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர்: எம். லட்சுமி
வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனர்: ஜி. பிரகாஷ்
வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்.
- சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்.
தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐ.ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதகிாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
சென்னை:
புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கல்யாண சுந்தரம் . இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார் இந்த தேர்வில் தனித் தேர்வலராக அவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.
இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தார்.
போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
சண்முகசுந்தரம் அமைச்சராக இருந்த போது என்.ஆர்.காங்கிரசில் இருந்தார். தற்போது காலாபட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்