search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Treasure Island International School"

    • மாணவ-மாணவிகள் மூச்சுப் பயிற்சி, பத்மாசனம், சூரிய நமஸ்காரம் போன்ற ஆசனங்களை செய்தனர்.
    • யோகா பயிற்சி செய்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சியாளர் மாதவி மூலம் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மூச்சுப் பயிற்சி, பத்மாசனம், சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், சசங்காசனம், தனுராசனம், தடாசனம், சக்கராசனம், யோகமுத்திரா, புஜங்காசனம் போன்ற ஆசனங்களை செய்தனர்.

    உலக யோகா தினத்தில் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் யோகா செய்வதின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா செய்திருந்தார்.

    • தேசிய அளவில் நடைபெற்ற லீட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தேசிய அளவில் நடைபெற்ற இரண்டாம் சுற்றில் கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை தட்டிச் சென்றனர்.

    தென்காசி:

    தேசிய அளவில் நடைபெற்ற லீட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ட்ரஷர் ஐலேண்ட் இன்டர்நேஷனல் பள்ளி யு.கே.ஜி. மாணவன் முகமது ஷாபிண் மற்றும் 4-ம் வகுப்பு மாணவன் முகமது ராஹித் தேசிய அளவில் நடைபெற்ற தகுதி சுற்றில் வெற்றி பெற்று 2-ம் சுற்றுக்கு முன்னேறினர்.

    தேசிய அளவில் நடைபெற்ற இரண்டாம் சுற்றில் கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
    • வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவுத், மாணவ-மாணவிகளிடையே போதைப் பொருளின் தீமை குறித்து உரையாற்றினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. மாவட்ட பொருளாளருமான ஷேக் தாவுத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே போதைப் பொருளின் தீமை குறித்து உரையாற்றினார்.

    விழாவிற்கு கம்பீரம் பாலசுப்பிரமணியம், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலையில் மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்றனர்.

    ×