என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tree Planting"

    • மரங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது.
    • இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிக்கிறது.

    லக்னோ:

    பல்வேறு தேவைகளுக்காகவும், வசதிகளுக்காகவும் மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் வெப்பநிலை 45 முதல் 50 டிகிரி செல்சியசை தொட்டு சுட்டெரித்து வருகிறது.

    இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மரங்கள் நடுவதை ஊக்குவிக்க உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேணும் என்றால் 10 மரத்தை நடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    விண்ணப்பதாரர்கள் மாவட்டத்திற்குள் எங்கும் தனியார் நிலத்திலோ அல்லது பொது நிலத்திலோ 10 மரங்களை நடவேண்டும். விண்ணப்பத்தை தோட்டத்திற்கான புவி-குறியிடப்பட்ட சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆயுத உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் இருந்த அனைத்து நிபந்தனைகளுக்கும் கூடுதலாக புதிய நிபந்தனை பொருந்தும்.

    இந்த நடவடிக்கை குடிமக்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த மரங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது. நடப்பட்ட மரக்கன்றுகளின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இது ஒரு முக்கியமான படியாகும். இந்த முயற்சி நிர்வாகப் பொறுப்புகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பேணுவதில் குடிமக்களின் கூட்டுக் கடமையையும் வலுப்படுத்துகிறது என தெரிவித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    • சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் வளாகத்தில் தென்னை மரக்கன்றினை நடவு செய்தனர்.
    • சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி முகமது சாலிஹாபுரம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் வளாகத்தில் தென்னை மரக்கன்றினை நடவு செய்தனர்.

    விழாவிற்கு ஜெயக் கொடி சங்கரேஸ்வரி தம்பதியினர் தலைமை தாங்கினர். சூடாமணி பார்வதி, சுடலைமுத்து ஹரிலாதேவி, 9-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மெஹபூப்ஜெரினா, பொன்னுப்பாண்டி ராஜேஸ்வரி, தம்பதியர்கள் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி பேசினார்.

    விழாவில் ஜமாத் தலைவர் முகமது உசேன், செயலாளர் நல்ல முகமது, துணைச் செயலாளர் பீர்முகைதீன், தொழிலதிபர் நடராஜன், நகர்மன்ற உறுப்பினர் சண்முகவேல், ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளையின் நிறுவனர் ராஜேந்திரன், மிலிட்டரி சந்திரன், ரியல் பேமிலி பவுண்டேஷன் தலைவர் ராஜேந்திரன், சிவமூர்த்தி உட்பட ஏராளமானோர் குடும்ப சகிதம் விழாவில் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்ட அனைத்து குடும்பங்க ளுக்கும் இறையருள் கிடைக்க வேண்டுமென ஷேக் மீரான் வாழ்த்தி துஆ செய்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ராகவேந்திரா சேவா பொதுநல அறக்கட்டளை யின் நிறுவனத் தலைவர் சீனிவாசன் ஆனந்தவல்லி தம்பதியினர் செய்திருந்தனர்.

    • திண்டுக்கல்லில் பசுமை தினம் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.
    • விழாவில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் எஸ்.எஸ்.எம் (அகாடமி மற்றும் மெட்ரிக்) பள்ளிகளின் சார்பில் பசுமை தினம் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பச்சை நிற உடையில் வந்து இருந்தனர்.

    பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பேச்சு மற்றும் பாடல்கள் மூலம் இயற்கையை பாதுகாப்பதின் முக்கியத்துவதையும் பல்வேறு காய்கறி பழவகைகளின் சிறப்புகள் பற்றி விளக்கப்பட்டது. முன்னதாக காமராஜர் பிறந்த நாளை ஒட்டி கல்வி தினம் கொண்டாடப்பட்டது.

    காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். விழாவிற்கு கல்வி ஆலோசகர் முனைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    அனைத்து ஆசிரிையகளும் கலந்து கொண்டனர். பொறுப்பாளர்கள் மதுமிதா , ஜெயா, குளோரி மற்றும் கலைவாணி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.
    • முதல் கட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஏர்வாடி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, மருதம், பூவரசு போன்ற பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் இசக்கிதாய், துணைத்தலைவர் மோலி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருக்குறுங்குடி பேரூராட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது முதல் கட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் அடுத்த கட்டமாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. என பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் கூறினார்.

    • கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணமூர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா, அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மற்றும் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×