search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trick"

    • இளம்பெண்-கல்லூரி மாணவி மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் தும்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(வயது32). இவரது மனைவி மும்தாஜ் பேகம். இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்க ளாகிறது.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபித்துக் கொண்டு மும்தாஜ் பேகம் வீட்டை விட்டு சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும், உறவினர்களிடம் விசாரித்தும் எங்கு சென்றார்? என கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து பேரையூர் போலீஸ் நிலையத்தில் அப்துல் லத்தீப் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மும்தாஜ் பேகத்தை தேடி வருகின்ற னர்.

    பேரையூர் பி.தொட்டி யபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் இன்பா(20) விருதுநகர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகி றார். சம்பவ த்தன்று கல்லூ ரி க்கு சென்ற வர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடிப்பா ர்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு பேரையூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முத்துக்கூறு நாகராஜ்(வயது60) என்பவர் தனது உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தார். அப்போது நாகராஜ் கோவிலுக்குள் செல்லாமல் வடக்கு சித்திரை வீதியில் உள்ள காலணிகள் பாதுகாப்பு அறை அருகில் காத்திருப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சாமி கும்பிட சென்ற உறவினர்கள் திரும்பி வந்து பார்த்தபோது நாகராஜ் மாயமாகி இருந்தார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலைக்கனி. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மலைக்கனி வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மலைக்கனி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • பிளஸ்-2 மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது39). இவரது 17வயது மகள் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிவு வெளியானது. அதில் அந்த மாணவி 419 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து உறவினரின் வீட்டிற்கு தங்கையுடன் சென்று வருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால் உறவினர் வீட்டில் தங்கையை மட்டும் இறக்கி விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு அய்யனார் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே இளம்பெண் திடீரென மாயமானார்.
    • மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகலை பரும்பு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகள்கள் ராமலட்சுமி(வயது17), விஜயலட்சுமி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். திருவிழாவை முன்னிட்டு ஜோதி தனது மகள்களை பஸ்சில் ஊருக்கு அழைத்துச்சென்றார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது ராமலட்சுமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகரில் ஆசிரியை-கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
    • சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று பள்ளிக்கு சென்ற அவர் மதியம் விடுப்பு எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவிகள்

    வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவரது மகள் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். வீட்டு வேலைகளை செய்யவில்லை என குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த அவர் திடீரென மாயமானார். சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். #chandrasekhararao #chandrababunaidu #pmmodi #parliamentelection
    அமராவதி:

    2019 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக மூன்றாவது கூட்டணி என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். அவருக்கு ஆதரவு வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர பிரதேச எதிர்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியது கூட்டணி குறித்தான கேள்வியை எழுப்பியுள்ளது.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது.

    இந்நிலையில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அமராவதியில் உள்ள தெலுங்குதேசம் தொண்டர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியதை விமர்சனம் செய்தார். 

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் உண்மை நிலை இப்போது வெளிப்பட்டுள்ளது. அவர்கள் மோடியின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வருகிறார்கள். மூன்றாவது கூட்டணி என்பதற்கு பின்னால் பிரதமர் மோடியின் மூளை வேலை செய்கிறது, ஆந்திராவில் பா.ஜனதாவிற்கு எதிரான வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் மூன்றாவது கூட்டணிக்கு பிற கட்சிகளிடம் இருந்து வெளிப்படையான, ஸ்திரமான பதில் கிடைத்துள்ளது என கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு. #chandrasekhararao #chandrababunaidu #pmmodi #parliamentelection
    ×