என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Uber"
- சம்பவத்தை பற்றி வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
- பதிவு வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
நகர பகுதிகளில் பஸ், ரெயில் நிலையம் அல்லது விமான நிலையம் செல்வோர் தற்போது ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு செல்வதற்கு கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.
அவ்வாறு முன்பதிவு செய்து விட்டால் வாகனங்கள் வாடிக்கையாளர்களை தேடி வந்து விடுவதால் எளிதில் பயணம் செய்ய முடிகிறது. சில பயணிகள் ஓலா, ஊபர் என இரண்டிலும் முன்பதிவு செய்து விட்டு எது முதலில் வருகிறதோ அதில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் ஓலா, ஊபர் இரண்டிலும் முன்பதிவு செய்திருந்தார். அப்போது இரண்டு வாகனங்களுக்குமே ஒரே டிரைவர் கிடைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சம்பவத்தை பற்றி வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஓலா மற்றும் ஊபர் இரண்டிலும் ஒரே சவாரி கிடைத்தது. இது எப்படி சாத்தியம்? என்று கூறியிருந்தார். அவரின் பதிவு வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
இது தொடர்பாக பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
Got the same ride on both Ola and Uber. How's this even possible? pic.twitter.com/GQmeaUsE4O
— shek (@shek_dev) April 4, 2024
- சம்பவம் தொடர்பாக வீடியோவை பதிவு செய்துள்ளார்.
- ஜி.எஸ்.டி. வரி எதுவும் சேர்க்கப்படாமல் இருந்துள்ளது.
நொய்டாவை சேர்ந்த தீபர் என்ற பயணி ஒருவர் உபெர் ஆட்டோ மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை மிக சிறிய தூரம் பயணிக்க உபெர் ஆட்டோ முன்பதிவு செய்து, பயணத்துள்ளார். பயணத்திற்கு முன்பு தோராயமாக ரூ. 60 முதல் அதிகபட்சம் ரூ. 75 வரை ஆட்டோ கட்டணமாக செலுத்துவோம் என்று தீபக் எதிர்பாத்திருந்தார்.
எனினும், ரைடை நிறைவு செய்த தீபக் தனக்கு வந்த கட்டணத்தை பார்த்து அதிர்ந்தார். பயணத்திற்கு பின் அவர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 7 கோடியே 66 லட்சம் என்று உபெர் செயலியில் காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த தீபக் அதிர்ச்சி அடைந்ததோடு, சம்பவம் தொடர்பாக வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.
வீடியோவின் படி தீபக் மேற்கொண்ட பயணத்திற்கான கட்டணம் ரூ. 1 கோடியே 67 லட்சத்து 74 ஆயிரத்து 647 என்றும் காத்திருப்பு கட்டணம் ரூ. 5 கோடியே 99 லட்சத்து 09 ஆயிரத்து 189 என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர விளம்பர கட்டணமாக ரூ. 75 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர் காத்திருக்கவில்லை எனினும், அதற்கான கட்டணம் சேர்க்கப்பட்டு இருப்பதாக தீபக் கூறுகிறார்.
அதிசயிக்கும் வகையில் இந்த கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரி எதுவும் சேர்க்கப்படாமல் இருந்துள்ளது. இதுவரை தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை எண்ணியதே இல்லை என்று தீபக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில், உபெர் இந்தியா சார்பில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
- ஓலா, உபேர் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
- போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.
சென்னை:
ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர். போராட்டத்திற்கு முன் சென்னையில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக 20 கிலோமீட்டர் தூரத்திற்கு இன்று ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
- வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
- ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.
- ஓலா, ஊபர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
- தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.
சென்னை:
ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலி பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொது மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிகி றது.
இந்த நிலையில் ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஆட்டோ, கால் டாக்சி, போர்ட்டர் சரக்கு வாகனங்கள் என 70 ஆயிரம் ஓடுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.
ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் ஆப் வழியாக தங்கள் செல்போன் மூலம் வாகனங்களை புக்கிங் செய்து பயணம் செய்கிறார்கள்.
இந்த போராட்டத்தால் அவர்கள் கார், ஆட்டோக்களை புக்கிங் செய்ய முடியவில்லை. ஆட்டோ நிலையங்கள், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களை பயன்படுத்தினர். இதனால் வீடுகளில் இருந்து பஸ், ஆட்டோ நிறுத்தங்களுக்கு வந்து பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இதனால் ஆப் பயன்படுத்தாத ஆட்டோக்களுக்கு இன்று தேவை அதிகரித்தது. வழக்கமாக கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதில் தீவிர மாக இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் இன்று அதை விட அதிகமாக வசூலித்தனர்.
கோயம்பேடு, பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு கிராக்கி கூடியது. பயணிகள்-டிரைவர்கள் இடையே கட்டண பேரம் நடந்தது.
இதற்கிடையே இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஓலா, ஊபர் போர்ட்டர் டிரைவர்கள் சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், உரிமைக்குரல், உரிமை கரங்கள், சிகரம், அக்னி சிறகுகள், தமிழக கால் டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
வேலைநிறுத்தம் குறித்து ஜாகீர் உசேன் கூறியதாவது:-
ஓலா, உபேர் செயலி மூலம் புக்கிங் செய்யப்படும் ஆட்டோ, கார் வாகனங்கள் இன்று முதல் 3 நாட்கள் ஓடாது. புக்கிங் எடுக்க மாட்டோம். 2 வருடமாக இந்த அரசு முறைப்படுத்தவில்லை. எங்கள் தொழிலை முறைப்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் சேவையை தொடங்கி ஊபர் 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது
- ஆரம்ப கல்வியிலிருந்து முதுநிலை வரை ஆகும் செலவை ஊபர் ஏற்கிறது
அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம், ஊபர் (Uber). உலகின் 70 நாடுகளில் 11 ஆயிரம் நகரங்களில் வாடகை கார் சேவையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், இச்சேவை தவிர உணவு வினியோகத்திலும், சரக்கு போக்குவரத்திலும் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம், இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனையொட்டி, அந்நிறுவனம் தங்களின் கட்டமைப்புடன் இணைந்துள்ள டிரைவர்களின் குழந்தைகளில் 1000 பேருக்கு ஆரம்பகல்வியிலிருந்து முதுநிலை கல்வி வரை ஆகும் செலவை ஏற்று கொள்கிறது. இதில் பள்ளிக்கல்வி கட்டணம், உபகரணங்கள், இணைய சேவை உட்பட அக்குழந்தைகளின் கல்விக்கு தேவைப்படும் அனைத்து செலவினங்களும் இதில் அடங்கும்.
மேலும், தங்களுடன் நீண்டகாலமாக இணைந்துள்ள 100 டிரைவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழாவையும் ஊபர் நடத்தியது.
இது குறித்து ஊபர் இந்தியா நிறுவன தலைவர் பிரப்ஜீத் சிங் (Prabhjeet Singh) தெரிவித்ததாவது:
மக்கள் சேவையில் டிரைவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஊபர் 10 ஆண்டுகாலம் நிலைத்து நின்றிருக்க முடியாது. எங்களின் சாதனைகளை நினைத்து பார்க்கும் இவ்வேளையில் எங்களுடன் இணைந்து மக்கள் சேவையாற்ற இணைந்திருப்பவர்களுக்கு நாங்கள் திருப்பி அளிக்க வேண்டிய பங்கை முறையாக வழங்க கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான வாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். இந்த சிறு முயற்சி மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதற்கு எங்களின் பங்களிப்பும் உறுதி செய்யும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊபரின் இச்செயல் சமூக வலைதளங்களில் பயனர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
- ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
- தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி சேவைகளை போக்குவரத்து துறை தடை செய்துள்ளது.
வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும், தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பைக் டாக்சிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரமும் செய்ய முடியாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்