என் மலர்
நீங்கள் தேடியது "Vaikasi Festival"
- வைகாசி விசாக திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- இந்த திருவிழா ஜூன் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்குகிறது. 10-ம் திருவிழாவான 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கோவில் மேல்சாந்திகள் பத்மநாபன், விட்டல், சீனிவாசன், நிதின் சங்கர், கண்ணன் மற்றும் கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் கால்நாட்டு வைபவத்தை நடத்தினர்.
இதேபோல் கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும், கன்னியம்பலம் மண்டபத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 3-ந்தேதி பூக்குழி இறங்குதல் நடக்கிறது.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான இந்த விழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 24-ந்தேதி மாலை அனுக்கை மற்றும் விக்னேஸ்வர பூஜை, சாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 11.20 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், மாலை 6.10 மணிக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு வெள்ளி கேடகத்தில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை 9 மணிக்கு வெள்ளி கேடகத்திலும், இரவு 7 மணிக்கு சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷபம், வெள்ளி குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 31-ந்தேதி காலை சயன அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தங்க ரதத்தில் உள் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 1-ந்தேதி அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் காலையில் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந்தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், 4-ந்தேதி உற்சவ சாந்தியும், மாலையில் வெள்ளி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் மெ.ராம.முருகப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- ஜூன் 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- ஜூன் 2-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து முதல் நாள் விழாவான 24-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.
விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம்(ஜூன்)1-ந்தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம், கஞ்சிதர்மம், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதல் நடக்கிறது.
10-ம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
- 29-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் -சவுந்தரவல்லி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.
விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
- மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
திருவாரூர்:
திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே உள்ள, மணக்கரையில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.
இதில், அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக, பக்தர்கள் பால்குடம் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இந்த திருவிழா ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது
- மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார்.
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் டிரஸ்டி முருகபெருமாள் முன்னிலையில் கொடிப்பட்டம் மரபுபடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி ரட்சகர்தெரு கைலியார் குடும்பத்தை சேர்ந்த கெனி என்பவர் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் மேவாளர் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு இன்று காலை 9 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இந்த கொடிமர பூஜைகளை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் கோவில் வேல்சாந்திகள் விட்டால் போற்றி, பத்மநாபன் போற்றி, சீனிவாசன் போற்றி, கண்ணன் போற்றி, நிதின் சங்கர் போற்றி,கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி ஆகியோர் நடத்தினார்கள்.
மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், கணக்கர் கண்ணதாசன், பொருளாளர் முருகையா உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த திருவிழா அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமயஉரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- இந்தாண்டு வைகாசி திருவிழா இன்று (புதன் கிழமை) தொடங்கியது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம், களக்காட்டில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீசத்திய வாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பும், புராண சிறப்பும் மிகுந்த இந்த கோவில் பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ள பஞ்ச சிவ ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேரோட்டத் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்தாண்டு வை காசி திருவிழா இன்று (புதன் கிழமை) தொடங்கி யது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்த ப்பட்டது. அதன் பின் சத்திய வாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் விஷேச அலங்காரத்தில் கொடி மர மண்ட பத்தில் எழுந்தரு ளினர். அதனைதொடர்ந்து அதிகாலை 6.35 மணிக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க கோவில் கொடி மரத்தில் நந்தி பகவான் உருவம் பொறித்த கொடி ஏற்றப்ப ட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கும் விஷேச அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா வை முன்னிட்டு தினசரி காலையில் சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனம் வாகனத்தில் திருவீதி உலா வருதலும், கும்பாபி ஷேகமும், இரவில் சிறப்பு அலங்கார தீபாரா தனைகளுக்கு பின்னர் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சி 8-ம் நாளான 31-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்ப டுகிறது. மதியம் 12 மணிக்கு அன்ன தானம் வழங்கப்ப டுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு நடராஜர் பச்சை பட்டு உடுத்தி, முழுவதும் பச்சை சாத்தி வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
அதன் பின் கங்காள நாதர், சந்திரசேகர் சுவாமி களும், சத்தியவாகீ ஸ்வரர் பூங்கோவில் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்தி லும் திருவீதி உலா வருகின்றனர். சிகர நிகழ்ச்சி யான தேரோட்டத் திருவிழா 9-ம் நாளான 1-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் ஊழிய ர்கள், விழா மண்டக ப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
பிச்சாண்டர் கோலத்தில் கங்காளநாதர் ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி திருவிழாவின் 8-ம் நாள் மட்டுமே கங்காளநாதர் பிச்சாண்டர் கோலத்தில் எழுந்தருளுவது குறிப்பிட த்தக்கதாகும். சிவனின் அம்சமான அவருக்கு பக்தர்கள் பச்சரிசி வழங்கி தரிசனம் செய்வது சிறப்புமி க்கதாகும். வருகிற 31-ந் தேதி மாலை 6 மணிக்கு கங்களாநாதர் திருவீதி உலா நடக்கிறது.
- இன்று திருக்கல்யாணம், பரிவேட்டை நடக்கிறது.
- 2-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. நேற்று முன்தினம் அதிகாரநந்தி கோபுர தரிசனமும், இரவு தெருவடைச்சான் உற்சவமும் நடந்தது. இந்நிலையில் நேற்று வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா நடந்தது.
இதற்காக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா காரணமாக வெள்ளி தேர் ஓடாததால் சக்கரம் பழுதாகி கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளி ரதம் ஓடவில்லை.
இந்த ஆண்டு ரூ.5 லட்சம் செலவில் வெள்ளி ரதம் புதுப்பிக்கப்பட்டு, நேற்று வெள்ளி ரதத்தில் சாமிகள் வீதி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) திருக்கல்யாணம் பரிவேட்டை, நாளை (வியாழக்கிழமை) குதிரை வாகனம், இரவு பிச்சாண்டவர் புறப்பாடு தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது.
- 3-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்
- 5, 6, 7 ஆகிய தேதிகளில் தசாவதார சேவை நடைபெறுகிறது.
பரமக்குடி பகுதி எமனேசுவரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்திமான பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். கடந்த 23-ந் தேதி முதல் காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. தினமும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு மண்டகப் படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 4-ந் தேதி காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேலச்சத்திரம் வழியாக பெரிய கடை பஜார் உள்பட முக்கிய பகுதிகளுக்கு சென்று வண்டியூர் சென்றடைவார்.
5, 6, 7 ஆகிய தேதிகளில் வைகை ஆற்றில் தசாவதார சேவை நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு வைகை ஆற்றில் இருந்து எழுந்தருளி விதிஉலா வந்து 9-ந் தேதி காலை கோவிலுக்கு சென்றடைவார். இரவு கண்ணாடி சேவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், எமனேசுவரம் சவுராஷ்ட்ர சபை நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் செய்து வருகின்றனர்.
+2
- ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- இன்று இரவு சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுயம்புலிங்கசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.
திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பக்தர்கள் சுவாமியை அருகில் நின்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி நீண்ட வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சாயரட்சய பூஜை நடந்தது. தொடர்ந்து தென்னாடுடைய சிவன், முழுமுதற்கடவுள் என்ற தலைப்புகளில் சமய சொற்பொழிவு, சுயம்புலிங்க சுவாமி வரலாறு, வில்லிசை, நகைச்சுவை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேச்சை கடன் செலுத்தினர். அது கடற்கரையில் குன்றுபோல் காட்சியளித்தது ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
இன்று இரவு விழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார். விசாகத் திருவிழாவில் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி. முருகேசன், துணைத்தலைவர் கனகலிங்கம், உறுப்பினர்கள் ராஜாமணி, ஜீவரத்தினம், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்துள்ளார்.
- நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிஉலா நடைபெறும்.
- கொடிமரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள்.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் வைகாசி விசாக திருவிழா தனித் தன்மை கொண்டது. இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.
அன்றைய காலத்தில் கூண்டு வண்டிகளில் கட்டுச் சோற்றினை கட்டித்தொங்க விட்டு கூண்டின் மேல் சமையலுக்குத் தேவையான விறகு, பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றி வைத்திருப்பார்கள். அவல், மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், அரிசிமாவு போன்றவற்றை பைகளில் வைத்திருப்பார்கள், வண்டியின் மேலும், உள்ளும் அடியிலும் வைக்கோலைக்கட்டி வைத் திருப்பார்கள்.
அரிக்கேன் விளக்கு வண்டியின் அடியில் தொங்கும் அந்த விளக்கொளியில் குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் முப்பது, நாற்பது வண்டிகள் முற்காலத்தில் உவரி விசாகத்திற்கு வந்து செல்வார்கள்.
வழியில் கூடன்குளம் சிரட்டைப் பிள்ளையார் கோவி லுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர். ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர்.
விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள். அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும். வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள். குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள்.
முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடு கின்றனர்.
உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங் களும் ஏராளம். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.
கடலில் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள். தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடிமரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள்.
குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவ தற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிஉலா நடைபெறும்.
இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர். விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும். பெரும் பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம். பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர். தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர். வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண் ணியத்தை ஒரே நாளில் உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.
- விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.
- பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும். வைகாசி பவுர்ணமியில் விளகேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிக்கப்பட்டு திருமணம் கைகூடும்.
ஆனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தையில்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.
புரட்டாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் அதி கரிக்கும். லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.
கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.
மார்கழி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தேக ஆரோக்கியம் ஏற்பட்டு உடல் பலம் பெறும்.
மாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும்.
பங்குனி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.
பவுர்ணமி அன்று பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை போட்டு நமது பிரார்த்தனையை மனத்தில் நினைத்து அல்லது ஒரு தாளில் எழுதி ஐஸ்வர்ய கோலத்தில் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.
உலகத்தை படைத்த உலக நாயகியான அம்பிகையை பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபட வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி ஒளிமாயமான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம். வைகாசி மாத பவுர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி அம்பிகையை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பாயாசம் நைவேத்தியம் படைத்து பவுர்ணமியை வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
பவுர்ணமியில் முருகன் வழிபாடு
திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதராகக் காட்சி அளிக்கும் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரா பவுர்ணமி அன்று சங்காபிஷேகமும், வைகாசி விசாக விழாவும் பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பானது. பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறுவதுடன் இங்குள்ள மூலிகையான விராலிச் செடியின் மனத்தைச் சுவாசிக்கும் பொழுது உடலில் உள்ள நோய்கள் மறைந்து ஆரோக்கியமான வாழ்வும் கிட்டும்.
பவுர்ணமியில் காமாட்சி தேர்
சிவனின் சொல்லை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்ற பார்வதியைத் தட்சன் அவமதித்ததால் அந்த யாகத்தில் குதித்து விடுகிறாள். யாகத்தில் எரிந்து கொண்டிருந்த பார்வதியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதைக்கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் நாரதன் முதலானோர் பிரம்மனிடம் முறையிட இந்தப் பிரச்சினையை மகாவிஷ்ணுவால்தான் தீர்க்க முடியும் என்று விஷ்ணுவை வேண்ட, அவரும் தனது சக்ராயுதத்தால் அன்னையின் உடலை ஐம்பத்தோரு துண்டுகளாக வெட்டி வீச, அதில் பார்வதியின் தொப்புள் வீழ்ந்த இடம் காஞ்சி சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பவுர்ணமி தினங்களில் காமாட்சி தங்கத்தேரில் உலா வருவது சிறப்பான ஒன்று. ஆடிப்பூர பவுர்ணமி அன்று, அன்னைக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ளும் பக்தர் களுக்குக் காமாட்சியின் அருட்கடாட்சம் பூரணமாகக் கிட்டும். சகல நன்மைகளும் ஏற்படும்.