என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikunda ekadasi"

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்
    • வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கும்

    திருச்சி:

    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது.பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. மறுநாள் (23-ந்தேதி) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்குகிறது. அன்றைய தினம் நம்பெருமாள் காலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 7.15 மணி முதல் மதியம் 11.30 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும். இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான ஜனவரி 1-ந்தேதி, நம்பெருமாள் நாச்சி யார் திருக்கோலம் எனப்ப டும் மோகினி அலங்காரத் தில் எழுந்தருளி பக்தர்க ளுக்கு சேவை சாதிப்பார். அன்று நம்பெருமாள் நாச் சியார் கோலத்தில் மூலஸ் தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல் பத்து அர்ச்சுன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலுக்கு வருகிறார். பின்னர் திருக்கொட்டார பிரதட்சணம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் சேருகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மறுநாள் (2-ந்தேதி) ராப் பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள் வார். இதையொட்டி நம்பெ ருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் திறப்பு தினமான 2-ந்தேதி முதல் ராப்பத்து எனப்படும் திரு வாய்மொழித் திருநாள் தொடங்குகிறது. அதன் பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 8-ந்தேதி நம் பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திரு நாளான 9-ந்தேதி திரு மங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திரு நாளான 11-ந்தேதி தீர்த்த வாரியும், 12-ந்தேதி நம்மாழ் வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திரு விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரி முத்து, இணை ஆணையர் சீ.செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    • ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்
    • இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது

    திருச்சி :ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆத்யயன உத்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிகழ்ச்சியே சப்த பிரகார பிரதட்சிணை நிகழ்ச்சி ஆகும். தற்போதைய நிகழ்வு 6-வது நிகழ்ச்சியாகும். ெரங்கநாத சுவாமி கோவிலின் சப்த பிரகாரத்தை சுற்றி வருவது ஒரு ஜீவாத்மாவை உயர்த்துவதாக கருதப்படுகிறது. திருவிழாவின் போது தினமும் அதிகாலையில் பக்தர்களின் இந்த பிரதட்சிணை நடைபெறும். இந்நிகழ்ச்சியானது இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை 7 நாட்கள் நடத்தப்படுகிறது.இதில் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். முதல் நாளான இன்று மாலை 5.30 மணிக்கு வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீமதி மைதிலி ஜெகந்நாதன், வயலின் வித்துவான் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன், மிருதங்க வித்துவான் ஸ்ரீ ரங்கராஜன், கடம் வித்துவான் ஸ்ரீ ரங்கநாதன் ஆகியோர் இசை அமைக்கிறார்கள்.இரண்டாம் நாளான நாளை (24-ந்தேதி, சனிக்கிழமை) மாலை வீணை வித்துவான் முடிகொண்டான் ஸ்ரீ ரமேஷ், மிருதங்க வித்துவான் ஸ்ரீ சேலம் சீனிவாசன், கடம் வித்துவான் ஸ்ரீ விஷ்ணுபுரம் ரகு ஆகியோர் இசை அமைக்கிறார்கள். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (25-ந்தேதி) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீமதி மாதங்கி சத்தியமூர்த்தி, வயலின் வித்துவான் குமாரி ஸ்ருதி ரஞ்சனி, மிருதங்க வித்துவான் ஸ்ரீ எஸ் விஜயராகவன், கஞ்சிரா வித்துவான் ஸ்ரீ சேகர் ஆகியோர் இசை அமைக்கிறார்கள்.நான்காம் நாளான 26-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீ மகேஷ் காஷ்யப், வயலின் வித்துவான் ஸ்ரீ ஆனந்த், மிருதங்க வித்துவான் ஸ்ரீ ஹரிபிரசாத், மோர்சிங் வித்துவான் கலைமாமணி தீன தயாளு ஆகியோர் இசை அமைக்கிறார்கள். ஐந்தாம் நாளான 27-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீ திருச்சி ரமேஷ், வயலின் வித்துவான் ஸ்ரீ என்.சி.மாதவ், மிருதங்க வித்துவான் ஸ்ரீ மதுசூதனன், கடம் வித்துவான் ஸ்ரீ ரவிகிருஷ்ணன் ஆகியோர் இசை கச்சேரி நடத்துகிறார்கள்.6-ம் நாளான 28-ந்தேதி (புதன்கிழமை) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீமதி ஷியாமளா ரங்கராஜன், வயலின் வித்துவான் ஸ்ரீ திருச்சி கோவிந்தராஜன், மிருதங்க வித்துவான் ஸ்ரீ பாலாஜி, கஞ்சிரா வித்துவான் ஸ்ரீ பரமசிவம் ஆகியோர் இசை அமைக்கிறார்கள். ஏழாம் நாளான 29-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை வாய்ப்பாட்டு வித்துவான் ஸ்ரீமதி வி.ஜெயஸ்ரீ, வயலின் வித்துவான் ஸ்ரீ ஆதித்ய சீனிவாசன், மிருதங்க வித்துவான் திருச்சி ஸ்ரீ பி சுவாமிநாதன், கஞ்சிரா வித்துவான் ஸ்ரீ கிரீஷ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இசை விருந்து அளிக்கிறார்கள்.நிகழ்ச்சி தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் டாக்டர். கே.சீனிவாசன் கூறுகையில், இருமுடி கட்டி விரதம் இருந்து அய்யப்பனை காண செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் ெரங்கநாதரை தினமும் வழிபட வருகிறார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தகோடிகள் ெரங்கநாதர் அருளுடன் இனிமையான இசையையும் கேட்டு மகிழ்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள், ரசிகர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

    • நாமக்கலில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது.
    • குடைவறை கோயிலான இந்த கோவிலில் உள்ள சுவாமி ஸ்ரீரங்கத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கலில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது .குடைவறை கோயிலான இந்த கோவிலில் உள்ள சுவாமி ஸ்ரீரங்கத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டில் ஜனவரி 2-ந் தேதி நடைபெறும் ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நெரிசலின்றி செல்லவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக கோவிலுக்கு முன்பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க மேற்கூரையும் பொருத்தப்பட்டுள்ளன. சுவாமி தரிசனத்துக்கு இலவச கட்டண முறையில் அனுமதி உண்டு. மேலும் பக்தர்கள் தடுப்புகள் வழியாக செல்லாமல் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு பாதையின் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வைகுண்ட ஏகாதசி நாள் அன்று கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
    • புத்திரதோஷம் உள்ளவர்கள் வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்

    மதுரையில் எத்தனையோ கிருஷ்ணன் கோவில்கள் இருந்தாலும் பந்தடி 5-வது தெருவில் (விளக்குத்தூண் அருகே) உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு தனி சிறப்பு உண்டு.

    சுமார் 500 வருடங்களுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் மூலவர் நவநீதகிருஷ்ணன் ஆவார். மகாலட்சுமி அம்மனும் இங்கு உள்ளது. எத்தனையோ திருவிழாக்கள் நடந்தாலும் இந்த கோவிலில் கோகிலாஷ்டமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிகவும் பிரசித்தம். இவற்றையெல்லாம் பின்பற்றும் வகையில் நடக்கும் விழா கிருஷ்ணஜெயந்தி விழா என்றால் மிகையில்லை.

    இக்கோவிலின் முன்பு மண்டபத்தில் மகா கணபதி உள்ளார். சன்னதி முன்பக்கம் இடது புறம் ஆஞ்நேயரும், வலதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். இங்கு அருள்பாலிக்கும் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் பாலகனாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவநீதகிருஷ்ணன் வீதி உலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகினி நட்சத்திரத்திலும் சாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

    கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. புத்திரதோஷம் உள்ளவர்கள் இவருக்கு வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசா மீது தொடர்ந்து 3 மாதங்கள் சூரிய ஒளி விழுவது சிறப்பு அம்சமாகும். தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது 27 நட்சத்திர தீபம் மற்றும் 108 தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர்.

    இந்த கோவிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக்கின்றன. சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனம் காண்போருக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பொதுவாக பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னதி வைக்கப்படுவதில்லை. கண்ணன், காளிங்கன் என்ற நாகத்திற்கு முக்தி கொடுத்து அதன் மீது நின்று ஆடியவர் என்பதால் இங்கு ராகு, கேது கிரகங்கள் மட்டும் சிலை வடிவில் உள்ளன.

    • மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.
    • குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடுகிறார்கள்.

    நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. மருதூர் அணைக்கட்டின் அருகே தாமிரபரணி கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் அடைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப்போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தப்படி சென்றான்.

    அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளகூபன், மணிக்ரீவன் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.

    எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வர தயாராக நிற்கிறார். குறிப்பாக ஏகாதசி விரதம் இருந்து மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரம் அளித்திடுவார் என்பது ஐதீகம்.

    விட்டிலாபுரம் பாண்டுரங்கன்

    நெல்லை மாவட்டம் விட்டிலாபுரத்தில் பாண்டுரங்கன் ஆலயம் உள்ளது.இங்கு சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் முன்பக்கம் 16 கால் மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளது. கோபுரத்தை விட உயரமாக காட்சிதருகிறது இக்கொடிமரம். மேற்கு நோக்கிய கருடாழ்வார் சன்னதியைத் தாண்டி சென்றால் கருவறை உள்ளது.

    அதில் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் இடுப்பில் கை வைத்தபடி, கருணைப்பார் வையால் காத்து ரட்சிக்கும் பாண்டுரங்க விட்டலேஸ்வரர், அருகே பாமா, ருக்மணி காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு முன்னால் உற்சவர் நான்கு திருக்கரத்துடன் பாமா, ருக்மணி, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் பாமா, ருக்மணி, சேனை முதல்வர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

    ருக்மணி சன்னதியில் அற்புதமாக வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்திற்கு முன் இங்குள்ள பாண்டுரங்கனை வழிபடுகிறார்கள். திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடு செய்கிறார்கள்.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பால்பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள்.16ம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசின் தமிழகப்பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது.

    இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடு,'' எனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றில் இருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது.

    ஆற்றில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி `வேண்டிய வரம் கேள்,' என்றார்.

    விட்டலராயனும், `பெருமாளே! தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண்டும்,' என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றில் இருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து வருகிறார்.

    • நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.
    • தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு விநாயகர் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் நவநீதகிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. `நவநீதம்' என்றால் "வெண்ணெய்" எனப்பொருள். கிருஷ்ணருக்கு பிடித்தது வெண்ணை. இதனால் அவர் நவநீத கிருஷ்ணர் என பெயர் பெற்றார்.

    இந்த கோவில் கர்ப்பகிரஹத்தில் "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    கற்பூர ஆரத்தியின்போது அவரது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். கர்ப்ப கிரஹத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் "ஸ்ரீ தேவி, பூமாதேவி நாச்சியார்கள்" சமேதராக "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" அருள்பாலித்து வருகிறார்.

    கர்ப்பகிரஹத்தின் மேலே செப்புக்கலசத்துடன் கூடிய விமானம் உள்ளது. இவ்விமானத்தில் "கிழக்கு முகமாக ஸ்ரீநவநித கிருஷ்ணனும், தெற்கு முகமாக ஸ்ரீ தட்சிணா மூர்த்தியும், மேற்கு முகமாக ஸ்ரீ யோக நரசிம்மரும்,வடக்கு முகமாக ஸ்ரீ பிரம்மாவும்" எழுந்தருளியுள்ளனர்.

    இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சி அளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லன்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.

    கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் ஏந்தியிருக்கிறது. இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் தன்வந்திரி ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம் , தசாவதாரத்திற்குள் சேருவதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி (தனிக்கோயிலில்) காணப்படுகிறார்.

    இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

    இங்கு இத்திருக்கோயிலின் தன்வந்திரி பகவான் தனி சன்னதியில் உள்ளார். பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தில் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.வைணவத்தை வாழவைத்த ராமானுஜர் தனி சன்னதியில் உள்ளார். உற்சவமூர்த்திக்கு எதிரில் "பெரிய திருவடி"என்றழைக்கப்படும் "ஸ்ரீ கருடாழ்வார்" பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார்.

    உற்சவர் எழுந்தருளி உள்ள மண்டபத்தின் வடக்குத் தூணில் "சிறிய திருவடி" என்று போற்றப்படும் "ஸ்ரீ ஆஞ்சநேயர்" அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றமும் உத்திரம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும்.

    தை பொங்கல் மறுநாள் பாரிவேட்டையும்,தசராவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் ,வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் ,கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தமிழ் மாதம் கடைசி சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து அருகில் உள்ள சிற்றாற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலில் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.

    • பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனில் இருந்து 180 டிகிரியில் இருக்கிறது.
    • வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது.

    வைகுண்ட ஏகாதசியன்று முக்கியமாக உபவாசம் இருப்பது ஏன்? துவாதசியன்று அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் சாப்பிடவேண்டும் என்பது எதற்காக தெரியுமா?

    சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்தொன்பரை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன.

    அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம் (வளர்பிறை) எனப்படும். பவுர்ணமியில் இருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன.

    அதில் இருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து செல்லுகிறது. நான்காவது நாள் -அதாவது, சதுர்த்தசியன்று சந்திரன் சூரியனில் இருந்து 36 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது.

    பதினொன்றாவது நாள் ஏகாதசியன்று சூரியனில் இருந்து 132 டிகிரி பின்னால் இருக்கிறது. பௌர்ணமியன்று சந்திரன் சூரியனில் இருந்து 180 டிகிரியில் இருக்கிறது. மேற்கூறிய நாட்களில் சூரியனில் இருந்து சந்திரன் தொலைவில் விலகிச்செல்லுவதில் புவிஈர்ப்பு சக்தி அதிகமாகிறது.

    அந்த சமயத்தில் எப்போதும்போல உணவு அருந்தினால் அது சரியாக செரிக்காது. ஆகையால் நமது முன்னோர்கள் அந்த நாட்களில் விரதம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

    வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தூரத்தில் இருக்கிறான். அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் உபவாசம் இருக்கிறோம்.

    ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது.

    அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் "ஏ" யும், "சி" யும் தேவைப்படும். ஆகவேதான், துவாதசியன்று வைட்டமின் "ஏ" சத்து நிறைந்த அகத்திக்கீரையையும், வைட்டமின் "சி" சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுகிறோம்.

    ஒவ்வொரு நாளும் நாம் செய்யவேண்டிய சூரிய நமஸ்காரமும், இருமுறை ஏகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும், நம்முடைய கண்ணொளியைக் காத்து உடல் நலத்தை பேணி வருகின்றன.

    • ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.
    • சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாக கருதப்படுகிறது.

    விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும். ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.

    பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக விளையாட்டு இது!

    ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆக இந்த பதினொன்றையும் பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

    இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் இந்த ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்!

    எனவே சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்வோம்.

    • ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது.
    • வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும்.

    பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர், தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை உலகில் இருக்கும் அனைவரும் பெறவேண்டும் என விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்குவாசல் வழியாக தாங்கள்அர்ச்சாவதாரத்தில் வெளியே வரும்போது தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின் தொடர்ந்து வருபவர் களுக்கும் அவர்கள் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி தந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    பெருமாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். எனவே தான் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கபட்டு சாமி பவனிவரும் நிகழ்ச்சி உருவானது.

    பகல்பத்து - இராபத்து

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் தலங் களில் 21 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து என்றும், பிந்தைய 10 நாட்கள் இராபத்து என்றும் அழைக்கப்படுகிறது.

    ஏகாதசி அன்று செய்யக்கூடாதது

    ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வான்.

    ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

    கோவிலில் வழிபடுவது எப்படி?

    வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும். அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.

    வீட்டில் வழிபடுவது எப்படி?

    திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் திருமாலின் படத்தின் முன் அமர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும். பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

    அன்று, பசுக்களுக்கு அகத்திக்கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கி செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    • மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
    • குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.

    1. ராவணனை அம்பெய்து கொன்ற ராமனைப் பள்ளி கொண்ட கோலத்தில் காண விரும்புபவர்கள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

    2. எவ்வளவு கொடிய பிணியையும் தீர்க்க வீரராகவனைச் சிந்தையில் வைத்துப் பொய்கையில் நீராடி வணங்கினால் எத்தகைய நோயும் தீரும்.

    3. இப்பெருமாளை உண்மையான அன்போடும், பக்தியோடும் வணங்குபர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள தொழிலில் மேன்மை அடைவார்கள். உலகை ஆளும் தகுதியும் பெறுவார்கள்.

    4. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும், குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.

    5. தை அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

    6. கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.

    7. ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் ஈக்காடு வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு.

    8. வீரராகவப் பெருமானை போற்றிப் பாடும் பாட்டுக்கள் வீரராகவர் போற்றி பஞ்சகம் எனப்படும். இப்பாட்டுக்கள் ஐந்தும் வீரராகவப் பெருமானை அருச்சிப்பதற்கு ஏற்றவை.

    நேர்த்திக் கடன்கள்

    இத்தலத்தில் இந்த நேர்த்திக்கடன் மிகவும் விசேஷமானது. உருவத் தகடுகளை (வெள்ளி, தங்கம்) செய்து போடுதல், தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப்புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.

    உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோவில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

    அபிஷேகம் இல்லை

    மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை கார்த்திகை மாதம் மட்டும் சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    தலபெருமை:

    தொண்டை மண்டலத்தில் உள்ள வைணவத் தலங்களில் இத்தலம் மிக முக்கிய திவ்ய தேசமாகும். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.

    ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது.

    மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

    • 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம்.
    • 29-ந் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந் தேதி இரவு 7-05 மணிக்கு நடை சாத்தப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம்.

    மலையில் உள்ள ஓட்டல்களில் பக்தர்களுக்கு அதிக விலையில் உணவு வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.

    பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க அன்னமைய்யா மாளிகை மற்றும் நாராயணகிரி பகுதியில் ஓட்டல்கள் அமைக்க சுற்றுலாத் துறைக்கு கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும்.

    வரும் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழாவை பிரமாண்ட முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    கருட சேவை நடைபெறும் 19-ந் தேதி மலை பாதையில் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருமலையில் பக்தர்களுக்கு அறை வாடகை விடுவது நிறுத்தப்படும். வரும் 29-ந் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந் தேதி இரவு 7-05 மணிக்கு நடை சாத்தப்படும்.

    மறுநாள் அதிகாலை 3 .15 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏழுமலையான் கோவிலில் 3-வது சனிக்கிழமையை யொட்டி நேற்று முதலே ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். 30 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 72, 104 பேர் தரிசனம் செய்தனர். 25,044 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    கடந்த மாதம் ஏழுமலையான் கோவிலில் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ரூ 110 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    • வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது.
    • ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியான 1 மணி நேரத்திற்குள் தீர்ந்து விடுகின்றன. இதில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது :-

    வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

    பக்தர்கள் சிரமம் இன்றி விரைவாக தரிசனம் செய்வதற்காக 2.25 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

    சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சாமியை தரிசிக்க டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மையங்களில் வழங்கப்பட உள்ளது.

    காலை 6 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நித்திய அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார், தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 67,198 பேர் தரிசனம் செய்தனர். 22,452 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியான 1 மணி நேரத்திற்குள் தீர்ந்து விடுகின்றன. இதில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    பக்தர்களுக்கு எளிதில் ஆன்லைன் டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×