என் மலர்
நீங்கள் தேடியது "vallalar"
- வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
- அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கையில் தனிப்பெரும் கருணை வள்ளலாரின் 200-வது முப்பெரும்விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில்அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 45 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
இந்த விழாவில் வள்ள லாரின் கொள்கைகளை வலியுறுத்தும் தலைப்பு களில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் கவிதைப் போட்டி போன்றவை மன்னர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 177 பேர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மூத்த சன்மார்க்கிகள் 12 பேருக்கு வெள்ளி டாலர்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்கவர்களை கவுரவிக்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி மற்ற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ்,காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழா நடந்தது.
- தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடந்தது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ராமநாதபுரம் அரண்மனை மேற்குத்தெரு பகுதியில் உள்ள திருமண அரங்கத்தில் வள்ளலார் என்ற ராமலிங்க சுவாமிகள் இந்த உலகத்திற்கு வந்து 200-வது ஆண்டு தொடக்கம், தர்மச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் தந்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். வள்ளலார் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவராம்குமார், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சுப்புராயலு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், வள்ளலார் உயர்மட்ட குழுவினர்கள் உமாபதி சிவம், அருள்நந்தி சிவம், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் அடுத்த வள்ளலார் கல்வி நிலையத்தில் சொற்பொழிவு நடைபெற்றது
- சன்மார்க்க சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி புகழாரம்
அரியலூர்,
வள்ளலாரின் 201-வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் அடுத்த வள்ளலார் கல்வி நிலையத்தில் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி நிலையத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வெங்கிடகிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் வள்ளியம்மை ராமசாமி முன்னிலை வைத்தார் . பள்ளிச் செயலர் புகழேந்தி வரவேற்றார். இதில் சன்மார்க்க சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அவர் பேசியதாவது:-
உயரிய ஆன்மீக நெறிகளையும் சமூக சீர்திருத்தங்களையும் தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் வள்ளலார். அவர் உலக மக்களையும் அவ்வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதற்கென மக்களுக்கு அருளுரைகளும் அருட்பாக்களும் அருளியதோடு நிற்காமல், அக்கொள்கைகளுக்கு அடித்தளமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை ஆகிய முப்பெரும் அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றின் வழி ஜீவகாருண்ய ஒழுக்கம், பசிப்போக்கும் அறம், அருட்பெருஞ்ஜோதி இறைவன் என்னும் மகத்தான ஆன்மீக சமூக சீர்திருத்தங்களை மக்கள் பின்பற்றி உய்வதற்கு வழி செய்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
சொற்பொழிவாளர் சாந்தி பாலசுப்ரமணியன், புலவர் சி.இளங்கோ, நல்லப்பன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிவகுமார் , ராமஜெயவேல் ஆகியோர் மாணவர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகளை வழங்கினர்.முடிவில் தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.
- ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தைப்பூசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ் ஜோதியை தரிசிக்க தன்னெழுச்சியாகக் கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதைக் கண்டு, வள்ளலாரின் பொதுமை நோக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்ட வடலூர் பார்வதி புரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்த நிலம்தான் 100 ஏக்கர் வடலூர் பெரு வெளியாகும்.
இவ்வளவு பெரிய நிலம் இருப்பதால்தான் தைப்பூசத் தன்று வடலூரில் கூடும் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.
தைப்பூசத் திருநாளில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் ஜோதி வழிபாட்டிற்காக கூடுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அடுத்த நாள் அதிகாலை, 6-வது 'ஜோதி வழிபாட்டின்' போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். அதற்கு அடுத்த நாள் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் 'திரு அறைக் காட்சி நாள்' என்பதால், மேலும் பல லட்சம் பக்தர்கள் 'திரு அறை தரிசனம்' காண கூடுவார்கள்.
இப்படி வருடத்தில் 4 முக்கிய நாட்களும் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டு மல்லாது, பிற மாவட்டங்கள், வெளி மாநிலம், வெளிநாடு என்று சன்மார்க்க அன்பர்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடும் இடமாக வடலூர் பெருவெளி உள்ளது. இப்படி, விழாக் காலங்களில் கூடும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இப்படி லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' கட்டுவதற்கு தி.மு.க. அரசு முனைந்துள்ளதை அறிந்து இப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெரு வெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.
இப்படி, இப்பெருவெளி நிலத்தை கையகப்படுத்தினால் 'மாத பூச வழிபாடும், தைப்பூச சிறப்பு வழிபாடும்' தடைபடும். தைப்பூசத் திரு நாளன்று பக்தர்கள் எந்த வித சிரமுமின்றி அருட்பெரும் ஜோதியை தரிசிக்க அப்பகுதி கிராம மக்கள் மனமுவந்து அளித்த நிலத்தை தி.மு.க. அரசு வேறொரு பணிக்காக கையகப்படுத்த நினைப்பது, நிலத்தை தானம் செய்த மக்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான பக்தர்களின் மனதையும் வேதனைப்படுத்தி உள்ளது.
தி.மு.க. அரசு வடலூர் பெருவெளியில் 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டுவதை விடுத்து, வேறொரு இடத்தைத் தேர்வு செய்து இம்மையத்தைக் கட்ட இந்த அரசுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தும், அவர்களது வேண்டுகோளை தி.மு.க. அரசு புறக்கணித்து, வடலூர் பெருவெளியிலேயே சர்வதேச மையம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரி உள்ளதாகத் தெரிகிறது.
'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார், தைப்பூசத் திரு நாளில் அருட்பெருஞ் ஜோதியைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி காத்திருப்பதற்கு பொது வெளியை ஏற்படுத்தினார். அந்த பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
- தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பெருவெளி அமைக்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகள் வள்ளலார் உயிருடன் வாழ்ந்தார். அப்போது பெருவெளியில் கட்டிடங்களைக் கட்டலாம் என்றும், வேளாண்மை செய்யலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்க வள்ளலார் மறுத்துவிட்டார். அதற்காக அவர் கூறிய காரணம், இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்; அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பது தான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். பெருவெளியின் தேவை 15 நாட்களுக்கு முன்பு கூட நிரூபிக்கப்பட்ட நிலையில், அதை உணராமல் அங்கு பன்னாட்டு மையத்தை கட்டி பெருவெளியை சிதைக்கத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. அடிக்கல் நாட்டுவதை அரசு ஒத்தி வைக்க வேண்டும்.
அதற்கு மாறாக, வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே பசிப்பிணியை போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தவர்.
- ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை.
வடலூர்:
தமிழ்பேரரசு கட்சியின் நிறுவனத்தலைவர் திரைப் பட டைரக்டர் கவுதமன் வடலூரில் சத்தியஞான சபை, சத்திய தருமச்சாலை ஆகிய இடங்களில் வழி பாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
பசியை தீ என்றும், பிணி என்றும் கூறிய மகான் வள்ளலார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே பசிப்பிணியை போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தவர். அந்த அணையா அடுப்பு இதுநாள் வரையில் 3 வேளையும், வடலூர் வருபவர்களுக்கு பசியாற்றி வருகிறது. வள்ளலாரின் கோட்பாடுகளை உள்வாங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினர்கள்.
அதில் தற்பொழுது 60 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இதில்46 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை. எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் அக்கோவிலில் இருந்து 100 அடி தூரம் தள்ளிதான் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆனால் வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில் ஞான சபையின் அருகே 20 அடி அருகில் அரசு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளது. வள்ளலார் தெய்வ நிலையத்தை பார்த்திராத, தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கோட்டையில் இருந்தவாறு அடிக்கல் நாட்டுவது அறமா? நேர்மையா?.
தமிழக அரசு முதலில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு இடம் 46 ஏக்கரை பறிமுதல் செய்து அங்கு சர்வதேச மையம் அமைக்கலாம். வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் வருவது பிரச்சனை இல்லை. "இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆனால் வள்ளலார் பெருவெளியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இதையே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.
இவ்வாறு டைரக்டர் கவுதமன் கூறினார்.
- சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார்.
- ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வள்ளுவன் சிலையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், "வள்ளுவர், வள்ளலார் என சமூக நீதி பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது. வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் சிலை திறந்த 25-ம் ஆண்டில் இங்கும் சிலை திறப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செங்கல்பட்டில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட பார்க்கிறார்கள் என்ற முதல்வரின் கருத்து தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எச். ராஜா. "சனாதன இந்து தர்மத்தில் தர்மம் என்றால் அறம், அர்த்தம் என்றால் பொருள், காமம் என்றால் இன்பம். இந்த மூன்றில் உங்கள் வாழ்க்கை அமையுமானால் மோட்சம் கிடைக்கும்.
சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார். ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.
திருக்குறளை மலம் என்று கூறியவரை நீங்கள் அப்பா என்று சொல்கிறீர்கள். தந்தை என்றால் அப்பாதானே. சிலப்பதிகாரத்தை விபச்சாரியின் கதைன்னு ஈவெரா சொல்லவில்லையா? இந்து மதத்தின் தமிழ் மொழியில் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிட இயக்கத்தவர்கள்.
என் தாய் மொழி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவெராவை தந்தை என்று சொல்கிறவர்கள் எல்லாம் தமிழ் மொழியின் விரோதிகள்.
திருவள்ளுவருக்கு இது தான் உடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது. நீங்க வெள்ளை உடை அணியலாம் நான் காவி போடக்கூடாதா? என் இஷ்டம்" என்று தெரிவித்தார்.
- தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-
வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் உள்பட அனைத்து பார்களும் கண்டிப்பாக மூடப்பட்டு 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கருணை இல்லம் பெயர் பலகையை திறந்து வைத்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
- இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கினர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை டி.வி.பட்டிணம் யூனியன் ஆபீஸ் அருகில் ஸ்ரீ வள்ளலார் ஜி.டி.கருணை இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.
கருணை இல்லத்தின் நிறுவனரும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவருமான தனலட்சுமி முன்னிலையில், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டஅ.தி.மு.க.செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கருணை இல்லம் பெயர் பலகையை திறந்து வைத்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் கருணை இல்லம் நிறுவனர்தனலட்சுமி ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதயகுமார், சசி ஆகியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
- இதில் அகவல் பாராயணம் ஓதப்பட்டது.
சேலம்:
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஜோதிகண்ணன் மற்றும் குழுவினரால் அகவல் பாராயணம் ஓதப்பட்டது. சன்மார்க்க கொடியை கோல்டன் பி.தங்கவேல் ஏற்றி வைத்தார்.
சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலை, மதியழகன் ஆகியோர் வரவேற்றனர். தாரை குமரவேலு, ஹரிகிருஷ்ணன் ராமலிங்கம், ஓம்சக்தி கணபதி, குணசேகரன், சீனிவாசன், சவுந்திரராஜன், மகா பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் வள்ளலார் கொள்கைகள் குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட சன்மார்க்க தலைவர் அங்கப்பன், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம் தலைவர் ஸ்ரீராமன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். லோகநாதன் நன்றி கூறினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
- வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நித்திய சத்திய தர்மச்சாலை சார்பில், திரு வருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது பெருநிலைப் பெருவிழா நடந்தது.
- இவ்விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நித்திய சத்திய தர்மச்சாலை சார்பில், திரு வருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது பெருநிலைப் பெருவிழா, வாழப்பாடி வாசவி மஹால் மண்டபத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சாது செல்வராஜ் தலை மையில் அகவல் பாராயணத்துடன் தொடங்கிய இவ்விழாவில், திருவிளக்கு பூஜை, மகா மந்திர வேள்வி மற்றும் ஆயில்பட்டி சன்மார்க்க சான்றோர்கள் கந்தசாமி, சண்முகம் மற்றும் வைத்தியகவுண்டன்புதுார் அங்கமுத்து ஆகியோரது திருவருட்பா இசைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை சாது ஜானகிராமனின், சன்மார்க்க நெறி வாழ்வு முறை, உடல், உள்ளம் பேணி காக்கும் முறைகள் குறித்த சொற்பொழிவும், இறையருள் பெறும் நெறி முறை குறித்து சென்னை கொளப்பாக்கம் சாது சந்தானம் அறவுரை நிகழ்வும் நடைபெற்றது. இவ்விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதா னம், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. நிறைவாக, சாது கலாவதி நன்றி கூறினார்.
- திருப்பத்தூர் தர்மசாலாவில் வள்ளலார் பிறந்த தினவிழா நடந்தது.
- வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருட்பெருஞ்ஜோதி தர்மசாலாவில் வள்ளலாரின் 200-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனையடுத்து திருப்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். 1500 பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மசாலா நிர்வாகிகள் செய்திருந்தனர்.