என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vasudevanallur"
- வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது.
- சித்தா மருத்துவர் ஆரோக்கியராஜ் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் மழைக்கால நோய்த்தொற்று தடுப்பு அலுவலர் (நெல்லை மற்றும் தென்காசி) டாக்டர் உஷா அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவர் ஆரோக்கியராஜ் விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சிலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் பூமாரி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- லெனின் தர்மராஜ், சண்முகவேல் ஆகியோர் ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது
- சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளனர்.
தென்காசி:
சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த லெனின் தர்மராஜ் மற்றும் ஆய்க்குடியை சேர்ந்த சண்முகவேல் ஆகியோர் கோவில் விழா காலங்களில் பொழுது போக்கிற்காக ராட்டினம் அமைத்து அதன் மூலம் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் வாசுதேவ நல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி பெற்று, முன்கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுப்பணி துறையை சேர்ந்த சில அதிகாரிகள் தங்களுக்கு பணம் மட்டுமே ராட்டினத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக ராட்டின உரிமையாளர் சண்முகவேல் கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்துள்ளார். அதில், ராட்டினம் அமைக்க அனுமதி வழங்குகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும், இதனால் சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- சரவணாபுரம் முதல் சண்முகநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சி சரவணாபுரத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் சரவணாபுரம் முதல் சண்முகநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி, முனியராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் விஜயகுமார், தளவாய்புரம் கிளை செயலாளர் வேல்பாண்டியன், சரவணாபுரம் கிளை நிர்வாகிகள் ஜெயராஜ், பெரியசாமி, வாசுதேவநல்லூர் ஒன்றிய உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர்கள் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
சிவகிரி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு வாசுதேவ நல்லூர் அருகே திருமலா புரம் என்ற அருளாட்சி இந்திரா காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தேவையான பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் ஆகியவை வழங்கும் விழா நடைபெற்றது.
யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், ஊராட்சிமன்ற தலைவர் மாப்பிள்ளைதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கிளை செய லாளர் சமுத்திரகனி, மகளிர் அணி பத்மாதேவி, அருளா ட்சி அக்கிகணேசன், அஜித் குமார், உள்ளார் விக்கி, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
- மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சக்கரை ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இரண்டு வயதுள்ள மான் ஒன்று தவறி விழுந்தது. 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு நிலைய குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மானை கயிறு மூலம் கட்டி உயிருடன் மீட்டனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா மானை வாசுதேவநல்லூர் ரேஞ்சர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.
- முகாமிற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், சரஸ்வதி, நெல்கட்டும்செவல் ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டியராஜா, விஸ்வ நாதபேரி ஊராட்சிமன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சரவணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய அலுவலர்கள், வேளா ண்மைத்துறை, வனத்துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிளை செயலாளர்கள், மகேந்திரன், ஸ்டாலின், மணிகண்டன், விக்கி, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார்.
- படுகாயமடைந்த மாரிச்சாமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 42). இவரும், கோட்டையூர் பசும்பொன் 2-வது தெருவை சேர்ந்த சண்முக ராஜ் (36) என்ப வரும் நண்பர்கள். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இருவரும் வாசுதேவநல்லூர் காமராஜ் சிலை பின்புறம் மது குடித்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார். இதில் மாரிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த மாரிச்சாமியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மருத்துவக் கல்லூரி உதவி முதல்வர் டாக்டர் பாரதி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
- கல்லீரல் நோய்க்கான உணவு முறைகள் குறித்து மாணவிகள் ஸ்வேதா, வைஷ்ணவி ஆகியோர் உரையாற்றினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் "உலக கல்லீரல் தினத்தை" முன்னிட்டு கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மருத்துவக் கல்லூரி உதவி முதல்வர் டாக்டர் பாரதி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லீரல் நோய்கள் பற்றியும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் பற்றியும் கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் ரத்தின பிரகாஷ் உரையாற்றினார். கல்லீரல் நோய்க்கான யோகா, உணவு முறைகள் குறித்து முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவிகள் ஸ்வேதா, வைஷ்ணவி ஆகியோர் உரையாற்றினர்.
இதில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
- நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் நெகிழியின் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பையின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக தீவிர தூய்மை பணி முகாம் பேரணியினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 32.60 லட்சம் மதிப்பீட்டில் புதுக்காலனியில் பூங்கா அமைக்கும் பணிகளையும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் செண்பகக்கால் ஓடைத் தெருவில் சிமெண்ட் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 161 லட்சம் மதிப்பீட்டில் பட்டா ஊரணியை மேம்பாடு செய்யும் பணிகளுக்கு தனுஷ்குமார் எம்.பி., வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ, சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள், கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார்.
- விழாவில் மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றன.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் செயல்படும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குறைந்தோர் சிறப்புப் பள்ளி 11-வது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழரசன், குருசாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் தவமணி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் தாசில்தார் பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, வக்கீல் செந்தில்குமார், டாக்டர் மயில்வாகனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளி மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றன.
வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பேரூராட்சிமன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தமிழ் ஆசிரியர் வாசு கணேசன், அம்ஜத்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, கவிதா, முத்துலட்சுமி, அருண், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியில் வளாகத்தேர்வு நடத்தப்பட்டது.
- வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் பெட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், சிவில் என்ஜினியரிங் மாணவர்களுக்கு கல்லூரியில் வளாகத்தேர்வு நடத்தப்பட்டது. தூத்துக்குடி ஸ்பிக் லிமிடெட் கலந்து கொண்டு தேர்வை நடத்தியது. வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி ஸ்பிக் லிமிடெட் பொதுமேலாளர் செந்தில்நாயகம், துணை பொதுமேலாளர் சண்முகம் ஆகியோர் மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். வளாகத் தேர்வு ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடத்தப்பட்டது.
- தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வளாக தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள இந்தியா பிஸ்டன் லிமிடெட் நிறுவனம் கலந்து கொண்டு, வளாக தேர்வை நடத்தியது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்விக்குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், கல்விக்குழும தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார்.
இந்தியா பிஸ்டன் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை தலைவர்கள் கோகுல், முகேஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்