என் மலர்
நீங்கள் தேடியது "vietnam"
- யாகி புயல் பாதிப்பால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
ஹனோய்:
வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை வியட்நாமை தாக்கியது.
வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டியது.
புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்புப் பணிகளில் ராணுவம், போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 176 பேர் காயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. புயல் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானோரை காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
வியட்நாம் நாட்டில் பல தசாப்தங்களாக இல்லாத வகையில் யாகி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிலிப்பைன்சில் யாகி புயல் உருவானது.
- இந்தப் புயல் வியட்நாமை கடுமையாக தாக்கியது.
புதுடெல்லி:
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதேபோல், யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகினர். புயலால் பாதிப்பு அடைந்த அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது.
இதற்கிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா நிவாரண பொருள்களை அனுப்பி வைத்தது.
இந்நிலையில், யாகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இரண்டாவது கட்டமாக 32 டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இதில் ஜெனரேட்டர், தற்காலிக டென்ட், சூரிய விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கும் என தெரிவித்துள்ளது.
- விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
- எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, விலங்கு சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
இருப்பினும், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் சுவாச அறிகுறிகள் எதுவும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு 2022 முதல், எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
எச்5என்1 நோய்த்தொற்றுகள் மனிதர்களுக்கு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம், மேலும் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.
- நாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார்
சினிமாக்களில் வருவதுபோல் வியட்நாமில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் மகள் இருந்துள்ளார். தனது மகள் வளர வளர அவள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் போலும் இல்லாமல் மிகவும் அழகாக இருந்ததால் அவள் உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.
எனவே மகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். இதில் அவள் தனது மகள் இல்லை என்று அவருக்கு தெரியவந்தது. இதற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை தனது மனைவியிடம் குழந்தைப்பேறு இல்லாதவள் என்று கூறி தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.
ஆனால் தான் குழந்தை பெற்றதாக சிறுமியின் தாய் உறுதியாக இருந்துள்ளார். சண்டை முற்றிய நிலையில் தனது கணவனை பிரிந்து மகளை அழைத்துக்கொண்டுநாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார். அங்கு மகளை புதிய பள்ளியில் சேர்த்தார்.
இந்நிலையில் பள்ளியில் மகளின் பிறந்தநாள் விழாவில் அதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அவளது தோழியான லான் என்ற சிறுமியை தாய் பார்த்துள்ளார். லான் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருப்பதை இந்த தாய் உணர்ந்துள்ளார். எனவே மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் அனைத்திற்கும் விடை கிடைத்துள்ளது.

டிஎன்ஏ பரிசோதனையில் லான் - தான் இவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு சிறுமிகளுக்கும் ஒரே மருத்துவமனையில் பிரசவம் ஆகியுள்ளது . மருத்துவமனையில் வைத்து இரண்டு பெண் குழந்தைகளும் இடம் மாறி இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
- வியட்நாம் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 17 ஆயிரம் ரூபாய் ஆகும்.
- 70 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் கடுமையாக விதி அமல்.
வியட்நாமில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. சாலையில் சிகப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் நிற்காமல் சென்றாலோ, செல்போன் பேசிக்கொண்டு சென்றாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் சிகப்பு விளக்கு விழுந்தபின், கோட்டை தாண்டி சென்றால் இந்திய பண மதிப்பிற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முந்தைய அபராதத்தை விட இது 6 மடங்கு அதிகமாகும். காரில் செல்லும்போது இதேபோன்று விதியை மீறினால் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் அபராதம் இரண்டு மடங்காகும்.
இதில் என்ன விஷேசம் என்றால் விதிமுறையை மீறும் வாகனங்கள் தொடர்பாக தகவல் கொடுத்தால், தகவல் கொடுக்கும் நபர்களுக்கு 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அத்துடன் அவர்கள் விவரம் ரசகியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் இந்த ரூல்ஸ் இந்தியாவில் இருந்தால் ஐ.டி. வேலையை உதறவிடுவோம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.
- கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.
கோவை
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டுமே தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகருக்கு தனியார் நிறுவனம் விமான சேவை தொடங்கியுள்ளது.
சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூர் சென்றவுடன், அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு செல்லும்.மறுதினம் வியட்நாமில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து. கோவைக்கு இரவு 7.55 மணிக்கு வந்தடையும்.
இதனால் கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.
இதேபோல் கோவையில் இருந்து துபாய்,கோலாலம்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலா செல்வோரும், தொழில்துறையினரும் பயன்பெறுவார்கள் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் செய்முறை வகுப்புகள் நடைபெற்றன.
- வியட்நாமின் ராணுவம் முதன்முதலாக இந்திய ராணுவத்துடன் பயிற்சி மேற்கொண்டது.
சந்திமந்திர்:
இந்தியா-வியட்நாம் இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள சந்திமந்திர் ராணுவ தளத்தில் தொடங்கியது.
வியட்நாமின் ராணுவம், இந்திய ராணுவத்துடன் மேற்கொண்ட முதல் பயிற்சி இதுவாகும். ஐநா அமைதி பாதுகாப்பு குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது.
வின்பேக்ஸ் என அழைக்கப்படும் இந்த பயிற்சியின் போது, பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப் படுத்தப்பட்டன.
இரு நாட்டு வீரர்களுக்கும் செய்முறை வகுப்புகள் நடைபெற்றன. இன்று நடந்த பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் நாவ் குமார் காந்துரி உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியட்நாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- இந்தியா, வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.
- இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
புதுடெல்லி:
இந்தியா, வியட்நாம் இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை எட்டியுள்ளது.
இந்நிலையில், வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி புய் தங் சன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
- இந்தியா-வியட்நாம் இடையே ராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த படகுகள் வழங்கப்பட்டுள்ளன.
- கொரோனா கால சவால்களுக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹாய் ஃபாங்:
மத்திய அரசு , வியட்நாம் நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் அதிவிரைவு பாதுகாப்பு படகுகளை வழங்குகிறது. இதற்காக முதல் ஐந்து படகுகள் இந்தியாவின் லார்சன் & டியூப்ரோ கப்பல் கட்டும் தளத்திலும், இதர 7 படகுகள் வியட்நாமின் ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்பட்டன.
வியட்நாம் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது இந்தியா சார்பில் வியட்நாமிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான இந்தியாவில் தயாரித்தல், உலகிற்காக தயாரித்தல் என்ற திட்டத்தின் கீழ் இந்த படகுகள் தயாரிப்பு திட்டம் சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டார்.
கொரோனா கால சவால்களுக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பது, இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் உறுதிப்பாட்டிற்கு சான்றாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே ஒத்துழைப்புடன் கூடிய ராணுவத் திட்டங்களுக்கான முன்னோடியாக இத்திட்டம் செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்திய பாதுகாப்புத் துறை தனது திறன்களை கணிசமாக உயர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
உள்நாட்டுத் தேவைகளோடு, சர்வதேச தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஓர் உள்நாட்டு தொழில்துறையை அமைப்பதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
