search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijay hazare trophy"

    • முதல் அரையிறுதியில் தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்தது. தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். இவர் இந்த போட்டியில் காயத்துடன் விளையாடியுள்ளார். கழிவறையில் தவறி விழுந்ததால் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாயில் பிளாஸ்திரி போட்டு விளையாடினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 293 ரன்கள் எடுத்தது.
    • தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    இந்நிலையில், இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் ஹிமான்ஷு ராணா சதமடித்து அசத்தினார்.

    தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அவுட்டாகினர்.

    பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். தினேஷ கார்த்திக் 31 ரன்னும், ஜெகதீசன் 30 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தமிழக அணி ரன்களுக்கு 230 ஆல் அவுட்டானது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரியானா சார்பில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் மோத உள்ளன.

    • மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் குவித்தார்.
    • சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்தார். 

    அசிம் காசி 37 ரன்னும், சத்யஜீத் பச்சாவ் 27 ரன்னும் அடித்தனர். நவ்ஷாத் ஷேக் 31 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது.

    இதையடுத்து 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சவுராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். சிராக் ஜானி 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 46.3 ஓவர் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதுடன் விஜய் ஹசாரே கோப்பையை 2வது முறையாக தட்டிச் சென்றது.

    விஜய் ஹசாரே டிராபியின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக், கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
     
    இந்நிலையில் பெங்களூருவில் நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின.
     
    டாஸ் ஜெயித்த மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணி களமிறங்கியது.

    அந்த அணியின் ஹிம்மத் சிங் 41 ரன்களும், துருவ் ஷோரே 31 ரன்களும், சுபோத் பாதி 25 ரன்களும், பவன் நெகி 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், டெல்லி அணி 45.4 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    மும்பை அணி சார்பில் தவால் குல்கர்னி, ஷிவம் துபே 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தத்தளித்தது.
    அதன்பின் ஜோடி சேர்ந்த சித்தேஷ் லால் மற்றும் ஆதித்யா தரே ஆகியோர் 100 ரன்கள் ஜோடி சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

    ஆதித்யா தரே 71 ரன்களும், சித்தேஷ் லால் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், மும்பை அணி 35 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், விஜய் ஹசரே கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக ஆதித்ய தரே தேர்வு செய்யப்பட்டார். #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக் மற்றும் கால் இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
     
    இந்நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில் டெல்லி ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஜார்கண்ட் அணி களமிறங்கியது. அந்த அணியின் விகாஸ் சிங் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 71 ரன்கள் எடுத்தார். ஆனந்த் சிங் 36 ரன்களும், ஷாபாச் நதிம் 29 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    டெல்லி அணி சார்பில் நவ்தீப் சைனி 4 விக்கெட்டும், குல்வந்த் கெஜ்ரோலியா, பிரான்ஷு விஜய்ரன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.   

    இதைத்தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஜார்க்கண்ட் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கியது. அதனால் டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    டெல்லி அணியின் நிதிஷ் ரானா மற்றும் பவன் நெகி ஆகியோர் 39 ரன்கள் எடுத்தனர். கவுதம் க ம்பீர் 27 ரன்களும் எடுத்தார்.

    இறுதியில், டெல்லி அணி 49.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதி போட்டியில் நுழைந்தது.

    நேற்று முன் தினம் நடந்த மற்றொரு அரை இறுதியில், ஐதராபாத் அணியை மும்பை அணி வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது. 

    பெங்களூருவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி, மராட்டியத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி, ஜார்கண்ட் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ரோஹித் மோத்வானி 52 ரன்னும், கேப்டன் ராகுல் திரிபாதி 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் அன்குல் ராய் 4 விக்கெட்டும், ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், வருண் ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலக்கை நோக்கி ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்கையில் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஜார்கண்ட் அணிக்கு 34 ஓவர்களில் 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜார்கண்ட் அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனந்த் சிங் 12 ரன்னிலும், கேப்டன் இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷஷீம் ரதோர் 53 ரன்னுடனும், சவுரப் திவாரி 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பெங்களூருவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சந்தீப் 96 ரன்கள் எடுத்தார். கேப்டன் அம்பத்தி ராயுடு 28 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆந்திர அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 95 ரன்னும், ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூருவில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்போது ரோகித் சர்மாவிற்கு ரசிகர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். #RohitSharma
    இந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஒன்றில் மும்பை - பீகார் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பீகார் 69 ரன்னில் சுருண்டது. பின்னர் 70 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா இடம்பெறாததால் மும்பை அணிக்காக விளையாடினார்.

    அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடிவந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்து அவரது காலை தொட்டு கும்பிட்டார். அத்துடன் அல்லாமல் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தார்.

    மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சித்தார். அப்போது ரோகித் சர்மா விலகிவிட்டார். அதனால் அந்த ரசிகர் மீண்டும் காலில் விழுந்து கும்பிட்டு, அப்பாடா... ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்து விட்டேன் என் குஷியில் துள்ளிக்குதித்து கேலரிக்கு சென்றார்.

    இந்த காட்சியை ஒருவர் படம்பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் மும்பை 12.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் கவுதம் காம்பிர் சதம் அடிக்க ஹரியானாவிற்கு எதிராக டெல்லி எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒரு ஆட்டத்தில் பீகாரை மும்பை அணி எளிதில் வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹரியானா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் பிஷ்னோய் 117 பந்தில் 85 ரன்களும், சண்டிலா 88 பந்தில் 59 ரன்களும் சேர்க்க 49.1 ஓவரில் 229 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது ஹரியானா. டெல்லி அணி சார்பில் சைனி 3 விக்கெட்டும், கெஜ்ரோலியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக கவுதம் காம்பிர் களம் இறங்கினார். நேற்று அவருக்கு பிறந்த நாளாகும். 37 வயது முடிவடைந்து 38-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கும் காம்பிர் பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு வேடிக்கை நிகழ்த்துவாரா? என்ற எதிர்பார்த்து இருந்தது.

    இந்த எதிர்பார்ப்பை சற்று கூட வீணடிக்காமல் காம்பீர் 72 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது சதத்தால் டெல்லி அணி 39.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் ஜார்க்கண்ட் அணிக்காக எம்எஸ் டோனி ஏன் விளையாடவில்லை என்பதற்கு பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார். #VijayHazareTrophy #MSDhoni
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆசிய கோப்பையில் டோனியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

    ஆனாலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோனி இடம் பெற்றுள்ளார். உள்ளூரில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டியின் நாக்அவுட் சுற்றில் அவர் ஆடுவார் என்று கூறப்பட்டது. தற்போது டோனி விளையாடவில்லை என்ற கூறப்பட்டுள்ளது.



    விஜய் ஹசாரே போட்டியில் அவர் ஆடவில்லை. இதுகுறித்து ஜார்க்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறியதாவது:-

    ஜார்க்கண்ட் அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த நேரத்தில் அணிக்குள் நுழைந்து சீர்குலைவு ஏற்படுத்த டோனி விரும்பவில்லை. அணி நல்ல நிலையில் இருப்பதால் அது அப்படியே நீடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதனால் டோனி விஜய் ஹசாரே போட்டியில் ஆடவில்லை. அவர் ஆடுவதும், ஆடாமல் இருப்பதும் அவரது முடிவே.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விஜய் ஹசாரே டிராபி காலிறுதி ஒன்றில் பீகாரை 69 ரன்னில் சுருட்டி 12.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மும்பை. #INDvWI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி. 37 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இன்று காலிறுதி தொடங்கியது.

    ஒரு ஆட்டத்தில் பீகார் - மும்பை அணிகள் மோதின. மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பீகார் அணி களம் இறங்கியது. மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 28.2 ஓவரில் 69 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பபுல் குமார் (16), ரஹ்மதுல்லா (18) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். மும்பை அணி சார்பில் தேஷ்பாண்டே 5 விக்கெட்டும், முலானி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. மும்பை அணி 12.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெர்வாத்கர் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. ஒரு ஆட்டத்தில் மும்பை - பீகார் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #VijayHazareTrophy
    உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடைபெற்று வருகிறது வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து மும்பை, மராட்டியம், ‘பி’ பிரிவில் டெல்லி, ஆந்திரா, ஐதராபாத், ‘சி’ பிரிவில் அரியானா, ஜார்க்கண்ட், கீழ்நிலை பிரிவான பிளேட் பிரிவில் பீகார் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    கால் இறுதி ஆட்டங்கள் நாளை பெங்களூரில் தொடங்குகின்றன. நாளை இரண்டு ஆட்டம் நடக்கிறது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை - பீகார் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி - அரியானா பலப்பரீட்சை நடத்துகின்றன.

    15-ந்தேதி நடக்கும் கால் இறுதி ஆட்டங்களில் மராட்டியம்- ஜார்க்கண்ட், ஆந்திரா - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி கடைசி லீக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. #VijayHazareTrophy
    சென்னை:

    37 அணிகள் இடையிலான விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக அணி தனது கடைசி லீக்கில் நேற்று அரியானாவை, சென்னையில் சந்தித்தது. முதலில் பேட் செய்த அரியானா அணி 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் திவேதியா 91 ரன்களும் (8 பவுண்டரி, 5 சிக்சர்) ஹிமான்ஷூ ராணா 89 ரன்களும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய தமிழக அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 233 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் அரியானா 77 ரன்கள் வித்தியாசத்தில் 6-வது வெற்றியை பதிவு செய்து கால்இறுதியை உறுதி செய்தது. தமிழக அணியில் அபினவ் முகுந்த் (47 ரன்), கேப்டன் விஜய் சங்கர் (44 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. முரளிவிஜய் 24 ரன்னில் கேட்ச் ஆனார்.

    இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கால்இறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில், தோல்வியை தழுவியதன் மூலம் தமிழக அணி வெளியேற்றப்பட்டது. 9 ஆட்டங்களில் விளையாடிய தமிழக அணி 5 வெற்றி, 4 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் தனது பிரிவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ‘ஏ’ பிரிவில் மும்பை (28 புள்ளி), மராட்டியம் (26), ‘பி’ பிரிவில் டெல்லி (26) , ஆந்திரா (26), ஐதராபாத் (22), ‘சி’ பிரிவில் அரியானா (28) ஜார்கண்ட் (28), கீழ்நிலை பிரிவான ‘பிளேட்’ பிரிவில் பீகார் (30) ஆகிய அணிகள் கால்இறுதியை எட்டின. ‘சி’ பிரிவில் மட்டும் இன்னும் மூன்று சம்பிரதாய லீக் ஆட்டங்கள் நாளை நடக்க உள்ளன. அதன் பிறகு 14-ந்தேதியில் இருந்து கால்இறுதி சுற்று தொடங்கும்.

    இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் ஓய்வில் இருக்கும் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, இந்த தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார். அவர் மும்பை அணிக்காக கால்இறுதியில் ஆடுவார்.  #VijayHazareTrophy
    ×