என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vinayagar Chathurthi"
- விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இதையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயக சதுர்த்தியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான திருவிழா அறிவு, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் அதே வேளையில், பணிவு மற்றும் கடமையைத் தழுவுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோரியா என பதிவிட்டுள்ளார்.
- சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
- விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறப்பட்டுள்ளதாவது:-
களிமண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.
சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலைகள் தயாரிக்க அல்ல பந்தல்களை அலங்கரிக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாணவர்கள் விநாயகர் வேடமணிந்து பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.
- விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் விநாயகரை வழிபட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் விநாயகர் வேடமணிந்து பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் விநாயகர் சிலைக்கு மாைல அணிவித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் விநாயகரை வழிபட்டனர்.
இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோபாலசமுத்திர கரையில் அமைந்துள்ள 108 நன்மை தரும் விநாயர் கோவிலில் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
- விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பொரிகடலை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபாடு செய்தனர்.
குள்ளனம்பட்டி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் கோபாலசமுத்திர கரையில் அமைந்துள்ள 108 நன்மை தரும் விநாயர் கோவிலில் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இங்குள்ள 32 அடி உயர சங்கடஹரசதுர்த்தி விநாயகருக்கு தென்னஞ்சோலையில் வீற்றிருப்பது போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். மேலும் வெள்ளை விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் நாகல்நகர் சித்திவிநாயகர், நேருஜிநகர் நவசக்திவிநாயகர், ரவுண்டுரோடு கற்பக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
பழனி மலைக்கோவில் ஆனந்தவிநாயகருக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
வீடுகளில் விநாயகர் வைத்து வழிபடுவதற்காக களிமண்ணால் ஆன சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். இதேபோல பூஜைக்கு ேதவைப்படும் வாழைஇலை, பூக்கள், எலுமிச்சை, தேங்காய், வாழைப்பழம், கொய்யா, பேரிக்காய், பொரிகடலை போன்றவை விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.
குறிப்பாக பூைஜக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை விலை கடும் உயர்வை சந்தித்தது. 50 கிலோ எடைகொண்ட ஒரு மூடை ரூ.2500 முதல் ரூ.3500 வரை விற்கப்பட்டது. திண்டுக்கல் சிறுமலையில் இருந்து எலுமிச்சைகள் விற்பனைக்கு ெகாண்டு வரப்பட்டன. வழக்கமாக தேவை அதிகமாக உள்ள சமயத்தில் விளைச்சல் குறைவு காரணமாகவும், எடுப்பு கூலி, குதிரை வண்டி வாடகை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆயுத பூஜைவரை விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களாகவே பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்து விற்கப்பட்டது. இருந்தபோதும் பக்தர்கள் அதனை வாங்கிச்சென்று தங்கள் வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பொரிகடலை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபாடு செய்தனர்.
- ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம்.
- விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநயாகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஞானம் என்பது முக்தியை விரும்புபவருக்கு அறியாமையை அழிக்கிறது. செல்வம் பக்தனுக்குத் திருப்தி அளிக்கிறது. அதனால், ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம்.
யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை நாம் எப்போதும் கும்பிட்டு வணங்குவோம்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பல்வேறு கோவில்களிலும் விநயாகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
- புலியகுளம் முந்தி விநாயகருக்கு மாப்பிள்ளை ராஜா அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று விநாயாகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் எதிரொலியால் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கடும் கட்டுப்பாடுகளுடனே கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்தளவில் உள்ளதால் மக்கள் முழு மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர்.
பல்வேறு கோவில்களிலும் விநயாகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புலியகுளம் முந்தி விநாயகருக்கு மாப்பிள்ளை ராஜா அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
96 வகையான திரவியங்கள் கொண்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 4 டன் பூக்கள் கொண்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
- மல்லிகைப்பூ ஒரு கிலோ 800 ரூபாயிக்கு விற்பனை
கோவை:
இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக மக்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் கடைகளில் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. வியாபாரிகளும் பொதுமக்களும் அதிக அளவில் பூஜை பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர்.
இதேபோன்று மக்கள் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்து வருகின்றனர். பூக்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் நாளை மறுநாள் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ 800 ரூபாயாகவும், முல்லை ஒரு கிலோ 500 ரூபாயாகவும், ஜாதிமல்லி கிலோ 480 வரையும், ரோஜா 320 வரையும், செவ்வந்தி ரூ.320, வாடாமல்லி ரூ.80, தாமரை ஒன்று ரூ.15, அரளி ரூ.200, கொளுந்து ரூ.50,அருகம்புல் ஒரு கட்டு ரூ.20, எருகம்பூ ஒன்று ரூ.50, வாைழ இலை ரூ.30, தென்னங்குருத்து ரூ.5, மா இலை ரூ.20,வெற்றிலை பாக்கு ரூ.10, விநாயகர் குடை ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
- கோவை, திருப்பூரில் 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
திருப்பூர் :
வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.அதில், கோவை திருப்பூரில் 11 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் காப்பு கட்டி, விரதம் துவங்கினர்.
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் பங்கேற்று காப்பு கட்டி கொண்டனர்.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
வால்பாறை, செப்.18-
வால்பாறையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வால்பாறை நகர் பகுதியில் உள்ள கோவில்கள், எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு 44 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் இந்து முன்னணி கவுரவத்தலைவர் தாமோதரன் தலைமையில் விசர்ஜன விழா நடைபெற்றது. இந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலாளர் சபரீஸ்வரன், பா.ஜனதா பிரசார அணி மாவட்ட செயலாளர் செல்வக்குமார், ஒன்றிய தலைவர் ஜெயன், ஒன்றிய செயலாளர் அன்பரசு ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பிரபு வரவேற்றார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் விழாவை தொடங்கி வைத்தா. இந்துமுன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் பேசினார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு கொடியை அசைத்து விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.
இதனை தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நடுமலை ஆற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் (விசர்ஜனம்) கரைக்கப்பட்டன.
If #TNPolice which shot and killed protestors simply watches this rabid idiot @HRajaBJP as he abuses the High Court, police, minorities and most ironically Hinduism, then it shows what they stand for! This #HindutvaTerrorist should be shown the law and the constitution. #Shamehttps://t.co/vhYh7Cft7U
— Siddharth (@Actor_Siddharth) September 16, 2018
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 5 நாள் வரை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். அதன்படி கோவில் மற்றும் வீட்டுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் கரைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தன.
இந்நிலையில், சென்னையில் ஒரு சில பகுதிகள் வழியே விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்வதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து ஐஸ் அவுஸ் நோக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களில் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் இளம்பாரதி. ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஆதித்யன் (வயது 11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பூஜை நடந்தது.
அப்போது மின்விளக்குக்காக பொருத்தப்பட்டிருந்த மின்வயரை சிறுவன் ஆதித்யன் கையால் பிடித்துவிட்டான். இந்த நிலையில் மின்வயரில் கசிந்த மின்சாரம் ஆதித்யன் மீது பாய்ந்ததில் அவன் தூக்கி வீசப்பட்டான். உடனடியாக அவனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ஆதித்யன் இறந்து விட்டான். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் பிரதீப், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அப்பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. மின் இணைப்பு மூலம் ஜொலிக்கும் விளக்குகள், ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருந்தது.
அங்கு ஒலித்து கொண்டிருந்த பாடலுக்கு சிறுவன் பிரதீப் நடனமாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு அறுந்த கிடந்த மின்சார வயரை பிரதீப் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டான். இதில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர் அருகே அருந்ததிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 32). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகருக்கு வண்ண விளக்குகளால் மின்அலங்காரம் செய்ய வயர்களால் அலங்கரித்து கொண்டிருந்தார்.
அப்போது மின்வயர் புளியமரத்தின் மீது பட்டு திடீரென்று தெருவில் செல்லும் அதிக உயர் மின்அழுத்தம் கொண்ட கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி அன்பு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்