search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishwa Hindu Parishad"

    • வாகனத்தில் முருகன் சிலையை வைத்து, யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.

    திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலாளர் பரத் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் ஏராளமான பேரணிகள், கூட்டங்கள், கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி வாகனத்தில் முருகன் சிலையை வைத்து, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பூசாரிகள் சிலரோடு யாத்திரையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ந் தேதி, திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இந்த யாத்திரையை தொடங்கி சமயபுரம், சுவாமிமலை, திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், திருமங்கலம், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக மீண்டும் திருச்சி விராலிமலையில் 17-ந் தேதி யாத்திரையை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக அனுமதி கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படஅனுமதி கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை. எனவே ஜனவரி 1 முதல் 17-ந் தேதி வரை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கு தனக்கு வழங்கப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்திற்குள் இல்லை என்று கூறி வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தர விட்டார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்து கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபடும் பீட்டா அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கிடசாமி தலைமை வகித்தார். திருக்கோவில்கள் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை தென் பாரத அமைப்பாளர் பாலு சரவண கார்த்திக் பேசினார். இதில் ஜல்லிக்கட்டு மற்றும் கோவில் யானை உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து இந்து கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபடும் பீட்டா அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயகணேஷ், விஎச்பி ஒன்றிய தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகர தலைவர் அருண், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர்‌ சரவண துரை‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் முன்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால் போலீசாருடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தென் பாரத அமைப்பு செயலாளர் ஸ்ரீ கேசவராஜ் என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தென்காசி பகுதியைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை நடத்த முற்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார், எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் முன்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால் அவர்களுடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு போலீசார் ஸ்ரீ கேசவராஜ் உட்பட விஸ்வ ஹிந்து பரிசத் நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • விஸ்வ இந்து பரிஷத்தில் இணைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • நிகழ்ச்சிக்கு நகர மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    விஸ்வ இந்து பரிஷத்தில் இணைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதன்படி நாடு முழுவதும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஆதரவாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் 8 ஆயிரம் பேர் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா புதுவை ஈஸ்வன் கோவில் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். புதுவை மாநில தலைவர் ரவிக்குமார் மற்றும் மாநில செயலாளர் ரவிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலிட பொறுப்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணைத்தலைவர் இளங்கோ, இணை செயலாளர் தினகரன், பொருளாளர் கோவிந்தன், பஜ்ரங்தள் பொறுப்பாளர் சதீஷ், சம்பர்க் பிரமுகர் கார்த்திக்ராஜா, துர்கா வாகினி பொறுப்பாளர் சரஸ்வதி, இணை பொறுப்பா ளர் கோமலவள்ளி, மத மாற்ற தடுப்பு பிரிவு பொறுப்பாளர் சக்தி, கோரக்‌ஷா பொறுப்பாளர் சரவணக்குமார், புனித யாத்திரைகள் பொறுப்பாளர் ஜவகர் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆகஸ்டு 14-ந் தேதி முதல், 16-ந் தேதி வரை நிர்வாகிகள் அனைவரும் தனது வீட்டின் முன் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.
    • ஆலயங்களை இடிக்கும் திட்டங்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் பூஜாரிகள் மற்றும் பூ கட்டுவோர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார்.

    செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் வெள்ளமுத்து வரவேற்றார். மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், கோட்ட அமைப்பாளர் குமரவேல் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஆகஸ்டு 14-ந்தேதி முதல், 16ந்தேதி வரை நிர்வாகிகள் அனைவரும் தனது வீட்டின் முன் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூரில் 75 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது, சாலை விரிவாக்கம் என்ற பெயரில்இந்து ஆலயங்களை இடிக்கும் திட்டங்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் சர்வதேச தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான விஷ்ணு சதாசிவ கோக்ஜே வலியுறுத்தி உள்ளார். #VHP #RamTemple
    இந்தூர்:

    விசுவ இந்து பரிஷத் சர்வதேச தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான விஷ்ணு சதாசிவ கோக்ஜே, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அயோத்தி வழக்கு, நீண்டுகொண்டே செல்லும் என்று கருதுகிறோம். இப்போதைக்கு தீர்வு ஏற்படாது. மத நம்பிக்கைகள், கோர்ட்டின் ஆய்வுக்கு உட்பட்டது அல்ல. ராமர் அயோத்தியில் பிறந்தாரா? இல்லையா? என்பதை கோர்ட்டு தீர்மானிக்க முடியாது.



    எனவேதான், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அரசியல்தான் ராமர் கோவில் கட்ட முட்டுக்கட்டையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #VHP #RamTemple

    ×