என் மலர்
நீங்கள் தேடியது "Volleyball Tournament"
- தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
- ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது.
அரவேணு,
கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி அங்குள்ள ஜுட்ஷ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநில அணிகள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது. இதனை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவுத்தர் மற்றும் பள்ளி தாளாளர் தன்ராஜன் தொடங்கி வைத்தனர். இதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட இறுதி போட்டியில் தமிழ்நாடு, பீகார் விளையாடியது. இதில் முதல் சுற்றில் தமிழ்நாடு அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 2-வது சுற்றில் 25-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் ெவன்றது. வெற்றி பெற்ற தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
- தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பாலமேடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- இதில் 10-ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
அலங்காநல்லூர்
சென்னையில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தென் மாவட்ட அணியில் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அவர்கள் சிறப்பாக விளையாடி அந்த அணி தங்கப்பதக்கம் பெற்றது. இதையடுத்து 6 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, உதவி தலைமை ஆசிரியர்கள் விஜித்ரா, முருகன், முதுநிலை ஆசிரியர் செந்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் மதுசிங், சத்தியசீலன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளமாறன், பயிற்சியாளர் சதீஷ்ராஜா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். இதில் 10-ம் வகுப்பு பயிலும் ஆறுமுகம், கவிபாலன் ஆகிய இருவரும் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
- இந்தக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
- பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் குறுமையம், கல்வி மாவட்டம் என அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெறும் அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள். அந்த வகையில் இந்தக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காலிறுதியில் தென்காசி மாவட்ட அணிக்கு எதிராகவும், அரையறுதியில் கரூர் மாவட்ட அணிக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெற்றனர். நிறைவாக நாமக்கல்லில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்ட அணியுடன் விளையாடி வெற்றி பெற்று மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப் பள்ளி அணியினர் தொடர்ந்து 2-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நிரேஷ் , சுகுணா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபால், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
- இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
மேலூர்
மேலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் தாலுகா அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
முதல் பரிசை அருண், பிரேம் நசீர் அணியும், 2-ம் பரிசை அசோக், அயூப்கான் அணியும், 3-ம் பரிசை ரபிக், பாண்டி அணியும், 4-ம் பரிசை துரை, முத்து நாச்சியப்பன் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் மணி, பொருளாளர் நீதிபதி, கூடுதல் பொருளாளர் செல்வம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சேவுகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
- ஜெயலலிதா பிறந்தநாள் கைப்பந்து போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
- அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் சந்தனமூர்த்தி ஏற்பாட்டில் காளை யார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அரசு மேல்நி லைப்பள்ளி மைதானத்தில் கைபந்து போட்டி நடந்தது.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி ேபாட்டியை தொடங்கி வைத்தார்.
காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, ஸ்டீபன்அருள்சாமி, இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாநில அளவிலான எறிபந்து போட்டியில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் பாராட்டினர்.
சங்கரன்கோவில்:
மாநில அளவிலான எறிபந்து போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மிக மூத்தோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்.
- மதுரை காமராசர் பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.
- இந்த கல்லூரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் அமெரிக்கன் கல்லூரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2 வெற்றிகளை பெற்ற திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி 2-ம் இடத்தையும், ஒரு வெற்றி பெற்ற விருதுநகர் வி.எச்.என். எஸ்.என். கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது.
சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்ட்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன், மதுரை காமராசர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.
- இளையான்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது.
- போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. ஆண்கள் மற்றும் மகளிருக்கான இருபிரிவிலும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. ஆண்கள் பிரிவில் இளையான்குடி, சாகிர் உசேன் கல்லூரி அணி 2-ம் இடமும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி அணி3-ம் இடமும், காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது.
மகளிர் பிரிவில் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 2-ம் இடமும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணி 3-ம் இடமும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது. நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அகமது, ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், முதல்வர் அப்பாஸ் மந்திரி, சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினர். இதில் அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் அசோக் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- அரசுப் பெண் ஊழியா்களுக்கான பொதுப்பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன.
- கணக்கம்பாளையம் ஸ்டாா் வாலிபால் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
திருப்பூர் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மாணவிகளுக்கான பிரிவில் 15 அணிகளும், கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் 7 அணிகளும், அரசுப் பெண் ஊழியா்களுக்கான பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பொதுப்பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன.
இதில் பள்ளி மாணவிகளுக்கான பிரிவில் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாவது இடத்தையும், இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. அதேபோல, கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரி முதலிடத்தையும், காங்கயம் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
அரசுப் பெண் ஊழியா்களுக்கான பிரிவில் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியைகள் அணி முதலிடத்தையும், ஜெய்வாபாய் ஆசிரியைகள் அணி இரண்டாவது இடத்தையும், தாராபுரம் ஆசிரியைகள் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. பெண்களுக்கான பொதுப் பிரிவில் அா்ஜூா அவாா்டிஸ் வாலிபால் கிளப் முதலிடத்தையும், டைமண்ட் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அணி இரண்டாவது இடத்தையும், கணக்கம்பாளையம் ஸ்டாா் வாலிபால் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
- உத்ரபிரதேசம், வாரணாசியில் மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் சார்பில் 5-வது தேசிய மாஸ்டர் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
- இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் பொதுச்செயலாளர் வினோத்குமார் வழங்கினார்.
புதுச்சேரி:
உத்ரபிரதேசம், வாரணாசியில் மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் சார்பில் 5-வது தேசிய மாஸ்டர் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
புதுவையில் இருந்து ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி ஊழியர் சுந்தரராமன், புதுவையை சேர்ந்த ஜெயமணி ஆகியோர் 35 வயது உடையவர்களுக்கான இறகு பந்துபோட்டியில் இரட்டையர் பிரிவில் விளையாடினர்.
இறுதியில் மத்திய பிரதேசம், புதுவை அணிகள் மோதின.
இதில் புதுவை அணி போராடி தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாஸ்டர் கேம்ஸ் பேடரேஷன் பொதுச்செய லாளர் வினோத்குமார் வழங்கினார்.
வெள்ளி பதக்கம் பெற்ற சுந்தரராமனை ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி டீன். டாக்டர் கொட்டூர், துணை முதல்வர் டாக்டர் ராஜன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
- முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.
- மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
பல்லடம் :
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். குறுமையம், கல்வி மாவட்டம் என அனைத்திலும் முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.
அந்தவகையில் இந்த 2022 - 2023-ம் கல்வி ஆண்டின் 14 வயதிற்கு உட்பட்ட மாநில அளவிலான எறிபந்துப் போட்டி திருச்சி மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர், பொ.வெ.க. மேல்நிலைப்பள்ளி வீரர்கள் காலிறுதியில் திருவள்ளூர் மாவட்ட அணிக்கு எதிராகவும், அரையிறுதியில் தருமபுரி மாவட்ட அணிக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியுடன் விளையாடி அதிலும் வெற்றி பெற்று மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
இந்த பள்ளி அணியினர் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நிரேஷ்குமார், சுகுணா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாலன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.
- வாலிபால் போட்டி திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ந் தேதி தொடங்கி மாா்ச் 26 ந் தேதி வரையில் நடைபெறுகிறது.
- மாா்ச் 20 -ந் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.
திருப்பூர் :
சென்னையில் நடை பெறும் மாநில அளவிலான வாலிபால் தோ்வு போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட அரசு ஊழியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எம்.ராஜகோபால் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மாநில அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ந் தேதி தொடங்கி மாா்ச் 26 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான தோ்வு போட்டி சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாா்ச் 20 -ந் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பங்கேற்க பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியா்கள் மாநில அளவிலான தோ்வு போட்டியில் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017-03515 என்ற செல்போன் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.