search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vote Counting"

    • அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.
    • தேர்தலில் வெற்றி பெற்ற வினேஷ் போகத்திற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். சமீபத்தில் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட வினேஷ் போகத்திற்கு அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சி வழங்கியது.

    ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6 ஆயிரத்து 15 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் தோல்வியை பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.



    தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்திற்கு தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மற்றும் அரியானாவின் ஜூலானா சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினேஷ் போகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்."

    "மக்கள் பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக செயல்பட அவரது ஆற்றல் அவருக்கு உந்து சக்தியாக தொடரட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.
    • பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.

    இதேபோன்று அரியானாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. அரியானாவில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

     


    ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 29 இடங்களிலும் பிற கட்சிகள் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 

    • ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது
    • துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது.

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பே துணை நிலை ஆளுநர் மூலம் 5 எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய பாஜக தலைமையிலான அரசு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இது ஜனநாயகத்தை மீறும் செயல் என்று காங்கிரஸ்- என்.சி.பி, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டங்களைத் தெரிவித்து வருகிறன.

    அதிகாரம் 

    ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநருக்கு சமீபத்தில் மத்திய அமைச்சகத்தால் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அதன்படி துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இவர்களில் இரு பெண்கள், மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோர் இட ஒதுக்கீடு படி நியமனம் செய்யப்படுகின்றனர்.

    இந்த 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகராக அதே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகரான அதிகாரத்தை பெரும் இவர்கள் சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர்.

    புதிதாக இயற்றப்படும் மசோதாக்களுக்கு வாக்களிக்கலாம்.எனவே இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அந்த சூழலை பயன்படுத்தி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்கும் இந்த 5 எம்.எல்..க்களை கைவசம் வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆளுநரின் இந்த அதிகாரத்துக்கு முன்பே எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

    பெரும்பான்மை 

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் - என்சிபி கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்ற முடிவுகளும் வெளியாகியுள்ளது சுயேட்ச்சைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் காங்கிரஸ் அவர்களை தங்கள் பக்கம் இழுத்து மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 46 தொகுதிகளைப் பிடித்துவிடக்கூடும்.

    இதைத் தடுப்பதற்காகவே துணை நிலை ஆளுநரின் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது பாஜக. ஆளுநர் 5 எம்.எல்.ஏக்களை நியமிக்கும் பட்சத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 46 இல் இருந்து 48 ஆக அதிகரிக்கும் இது தொங்கு சட்டசபை ஏற்பட வழிவகை செய்து பாஜகவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

    • அரியானா மாநிலத்தில் மெஜாரிட்டிக்கு 46 இடங்கள் தேவை.
    • ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் ஐந்து நியமன எம்.எல்.ஏ.-க்களை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.

    அரியானாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பா.ஜ.க. தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

    இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி.

    நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தேர்தல் வெற்றி கொடுத்துள்ளது.

    இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

    இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள்.

    இந்தப் புனித நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. மக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன்.

    ஒடிசா, அருணாசலப் பிரதேசத்தில் பாஜக வென்றுள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. கேரளாவில் பா.ஜ..க காலூன்றி உள்ளது என தெரிவித்தார்.

    • வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.
    • தற்போது வரை பா.ஜ.க. 110க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 110க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.

    இந்நிலையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. இந்த பாசத்திற்காக மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என உறுதி அளிக்கிறேன். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கும் நான் தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.
    • மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் உள்ளது என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 230-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

    அரசியல் அமைப்பு நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது. அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.

    அரசு எந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது. பா.ஜ.க. மட்டுமின்றி சி.பி.ஐ, அமலாக்கத் துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.

    இது அரசியல் சாசனத்தைக் காப்பதற்கான போராட்டம். அரசியல் சாசனத்தைக் காக்க மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

    அரசியல் கட்சிகளை உடைக்கும் வேலையை நாடு முழுவதும் பா.ஜ.க. செய்தது. தெளிவான பார்வையுடன் மக்கள் முன் எங்கள் கொள்கைகளை முன்வைத்தோம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

    மோடிக்கு எதிரான போரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் வேலையை விவசாயிகள், ஏழை எளிய மக்கள் செய்துள்ளனர். நாடு மோடியை புறக்கணித்து விட்டது. 10 ஆண்டாக ஆட்சி நடத்திய விதம் சரியல்ல என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது என தெரிவித்தார்.

    • தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 60க்கும், காங்கிரஸ் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இவர் 6,47,445 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும்.

    • திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை முதல் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உறுதியாகியுள்ள நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

     

    அந்த அறிக்கையில்,

    திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும். ஒளியும் காட்டக் கூடியவை.

    இந்தியா வாழ்க. தமிழ்நாடு ஓங்குக. தமிழ் வெல்க! என்று தெரிவித்துள்ளார். 

    • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார்.

    சிம்லா:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார். இவர் 5,37,022 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,62,267 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 74,755 ஆகும்.

    இதுதொடர்பாக கங்கனா ரணாவத் கூறுகையில், மண்டி தொகுதியில் பெற்ற வெற்றி பிரதமர் மோடியின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

    • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

    இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,52,513 ஆகும்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வாரணாசி தேர்தலில் பிரதமர் மோடி 5,81,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்றார்.

    போபால்:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி அபார வெற்றி பெற்றார்.

    இவர் 12,26,751 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் 51,659 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11,75,092 ஆகும்.

    இந்தத் தொகுதியில் நோட்டா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2,18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×