என் மலர்
நீங்கள் தேடியது "wage"
- கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வேலை நாட்கள் எண்ணிக்கையை 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக தேக்கமடைந்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்
ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் உண்மையில் ரூ.4,000 கோடி குறைந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை அடைக்கப் பயன்படுத்தப்படும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறைக்கு மத்தியில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தத் திட்டத்தை மேம்படுத்துவது கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். திட்டத்தை நிலைநிறுத்தவும் விரிவுபடுத்தவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
விருதுநகர்
பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் விருதுநகர் மாவட்டம் மேலஆமத்தூர், தாயில்பட்டி மற்றும் மேட்ட மலையில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நடந்தது.
194-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிப்பதற்காக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின்படி தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது.
மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) செயலாளராகவும் கொண்ட இந்த குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மேல ஆமத்தூரில் அமைந்துள்ள ராஜரத்தினம் பயர் ஒர்க்ஸ் ஒர்க்ஸ் இன்டஸ்டீரீஸ், தாயில்பட்டியில் அமைந்துள்ள ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் மற்றும் மேட்டமலையில் அமைந்துள்ள சன்சைன் பயர் ஒர்க்சிலும் நடந்தது.
மேற்படி களப்பணியின் போது பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்களிடம் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.
கருத்துக் கேட்பு கூட்ட த்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர்-மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், செயலாளர் மற்றும் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ஜெ.காளிதாஸ், குழு உறுப்பினர்களான சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப். தொழிற்சங்கம் மாடசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. சமுத்திரம், சி.ஐ.டியூ.தேவா, டி.ஐ.எப்.எம்.ஏ. கண்ணன், சன் சைன் பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
- ஏற்காட்டிற்கு கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, லட்சுமி(32) என்பவர் திடீரென சாலையை கடந்தார்.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர், சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 42), டிரைவர். இவர், ஓமலூரில் இருந்து ஏற்காட்டிற்கு கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
இந்த செங்கல் பாரத்தின் மீது கூலி தொழிலாளிகளான ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (31), மாட்டுக்காரன் புதூரை சேர்ந்த மதியழகன் (22) ஆகிய அமர்ந்து சென்றனர்.
கருப்பூர் கரும்பாலை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, லட்சுமி(32) என்பவர் திடீரென சாலையை கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் முருகேசன் பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பிக்அப் வாகனம், டிப்பர் லாரி மீது மோதியது. இதில் செங்கல் மீது அமர்ந்திருந்த ராஜா, மதியழகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதியழகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் சாலையின் குறுக்கே சென்ற லட்சுமியும் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
- புதிய பஸ்நிலையத்திலிருந்து சட்டசபை நோக்கி தொழிலாளர்களின் மாபெரும் பேரணி சி.ஐ.டி.யூ. சார்பில் நடத்தப்படும்.
புதுச்சேரி:
புதுவை மாநில சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சி.ஐ.டி.யூ. பல கட்ட போராட்டங்களுக்கு பின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலச்சங்கம் அமைக்கப்பட்டது. இந்த நலச்சங்கத்தை வாரியமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். இன்று வரை அமைப்புசாரா நல வாரியத்தை அரசு அமைக்கவில்லை. புதுவையில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எனவே பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். 7 ஆண்டாக தொழிற்பேட்டைகளில் குறைந்தபட்ச சம்பளத்தை தொழிலாளர் துறை அறிவிக்க வில்லை. தொழிலாளர் துறையில் ஆணையர் பதவி பல ஆண்டாக நிரப்பவில்லை. பல தொழிற்சாலைகள், பஞ்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி புதிய பஸ்நிலையத்திலிருந்து சட்டசபை நோக்கி தொழிலாளர்களின் மாபெரும் பேரணி சி.ஐ.டி.யூ. சார்பில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
- அக்கம்பக்கத்வதினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் நேற்று தாரமங்கலம் வந்துவிட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.பவளத்தானுர் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அசோகன் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்வதினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அசோகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ.பி.சி. என பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.
கேப்டன் விராட்கோலிக்கு தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயண ஊதியம், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கான ஊக்க தொகை என ரூ.1.25 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், தவானுக்கு ரூ.2.8 கோடியும், ரோகித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு அதிகபட்சமாக ரூ.3.73 கோடி தரப்பட்டு இருக்கிறது.
இதேபோல பும்ராவுக்கு ரூ.1.73 கோடி, அஸ்வினுக்கு ரூ.2.7 கோடி, இஷாந்த்சர்மாவுக்கு ரூ.1.33, பாண்ட்யாவுக்கு ரூ.1.1 கோடி, சகாலுக்கு ரூ.1.1 கோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். #RaviShastri
சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தொழிலாளர் நலத்திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒருநாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் வங்கிகளை விரிவடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு பணி உத்திரவாதம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெயர்ந்து கேரளாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் விடுதி சேவைகளும் இந்த புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் காப்பீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை மந்திரி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #keralalabours #employeefriendly #labourpolicy