என் மலர்
நீங்கள் தேடியது "Waqf Board"
- மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?.
வக்பு திருத்த சடடத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ரிட் மனு தாக்கல் செய்துள்ளன. இது தெடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. வக்பு விசயத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நீதித்துறையில் முறையிடுவதற்கு எதிராக அரசியல சாயம் பூசக்கூடாது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
எல்லா அமைப்புகளுக்கும் (institution) பங்கு உள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?. வக்பு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வது இது முதல் முறை கிடையாது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைமைய பிரகடனம் செய்தபோது, நீதிமன்றத்தில் முறையிடவில்லையா?.
இன்று யாராவது உச்ச நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்றால், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. நீதிமன்றத்திற்கு அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது. சட்டமன்றத்திற்கும் அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
- இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்.
வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
- திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.
- மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
ஒரு கும்பல், அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. மேலும் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. நிம்ரிட்டா ரெயில் நிலையமும் சூறையாடப்பட்டது. ஜாங்கிபூர் பகுதியில் ஒரு கும்பல் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான கலிலுர் ரகுமான் அலுவலகத்தை சூறையாடியது.
முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. வன்முறையில் 2 பேர் பலியானதாகவும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஜாவேத் ஷமிம் தெரிவித்தார்.
ஜாங்கிபூரி ல் அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில் போராட்டம் பரவியது.
மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று 5 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (சுமார் 500 பேர்) மேற்கு வங்காளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம்.
- அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன போராட்டம்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன கோஷமிட்டனர்.
- சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன்.
- வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும்.
கொல்கத்தா:
வக்பு திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதை தொடர்ந்து இது சட்டமானது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இன்று நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன். வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள் மேற்கு வங்காளத்தில் பிரித்து ஆட்சி செய்யக்கூடிய எதுவும் நடக்காது. வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வக்பு திருத்த சட்டம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
- சிறுபான்மையினருடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான தொடர்பு உள்ளது.
- முஸ்லிம்களின் நலனுக்காக பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மாநில அரசு ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
பணக்காரர்கள், ஏழைகளுக்கு உதவுவது குர்ஆன் கற்றுக்கொடுத்த ஒரு நல்ல பண்பு. சிறுபான்மையினருடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான தொடர்பு உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் கீழ் ஐக்கிய மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது.
சிறுபான்மை நிதிக் குழுவை முதன்முறையாக அமைத்தது என்.டி.ஆர், மாநிலத்தில் உருது மொழியை 2-வது மொழியாக அமல்படுத்தினேன்.
முஸ்லிம்களின் நலனுக்காக பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தபோது, ஐதராபாத்தில் ஒரு உருது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு, கர்னூலில் ஒரு உருது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சி முதன்முறையாக இமாம்களுக்கு கவுரவ ஊதியத்தை அமல்படுத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிகிறார்.
- வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழக அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த பல்வேறு நிறுத்தங்களில் 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 655 பக்க அறிக்கை தயாரானது.
இதற்கு கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.
கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி. மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சிறுபான்மையினரின் மத உரிமைகளை பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
- வக்பு வாரியத்துக்குச் சொந்தமாக மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் கொண்ட 8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது
இஸ்லாமியர்களின் சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்காக இயங்கி வரும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.
சமீபத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள 123 சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரியிருந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே மத்திய அரசு தற்போது இந்த அதிகார குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல் உள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் தற்போது வக்பு வாரியத்துக்குச் சொந்தமாக மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் கொண்ட 8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சொத்துக்கள் மீது வக்பு வாரியம் உரிமை கோருவது தற்போது எளிதான ஒன்றாக உள்ளது. எனவே அதைக் கட்டுப்படுத்தும் வகையில் தன்னிச்சையாக எந்த ஒரு சொத்துக்கும் வக்பு வாரியம் உரிமை கோர முடியாதபடி புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதவிர்த்து வக்பு வாரியத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் உட்பட வக்பு வாரிய அதிகார வரையறையில் 40 திருத்தங்களைக் கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க உள்ள நிலையில் இந்த புதிய மசோதா எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையில் இந்த மசோதா மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
- திருப்தியில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்
- வக்பு வாரிய கமிட்டியில் முஸ்லிம் அல்லாத 2 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் சட்டத்திருத்த மசோதா கூறுகிறது.
இஸ்லாமியர்களின் சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்காக இயங்கி வரும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. சொந்தமான நிலங்கள் மீது வக்பு வாரியம் உரிமை கோருவது உள்ளிட்ட அதிகாரங்கள் இந்த மசோதா மூலம் குறைக்கப்பட உள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எனவே இந்த மசோதாவை ஆராய பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல கூட்டங்கள் நடந்தும் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே திருப்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, வக்பு வாரியம் குறித்த கருத்து ஒன்றை தெரிவித்துளார். லட்டு பிரசாம் தயாரிக்க மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்து அடங்கிய நிலையில் திருப்பதி கோவில் தேவஸ்தானத்தை நிர்வகிக்க 24 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்தார். இதன் தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்ற உடனேயேதிருப்தியில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என்ற தடாலடி கருத்தை அவர் வெளியிட்டார். இதற்கிடையே புதிய வக்பு சட்டத்திருத்த மசோதாவில் வக்பு வாரிய கமிட்டியில் முஸ்லிம் அல்லாத 2 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் தேவஸ்தான தலைவரின் கருத்தையும் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஒப்பிட்டு பேசியிருந்தார்.
அதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க முடியாது என்று சூழலை உருவாக்குகிறீர்கள், அப்படி இருக்கும்போது வக்பு வாரியத்தில் மட்டும் ஏன் முஸ்லிம் அல்லாதோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று ஒவைசி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது பேசியுள்ள திருப்பதி அறங்காவலர் பி.ஆர். நாயுடு, இந்த கூற்று அடிப்படையற்றது. வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி, அதை திருப்பதியோடு எப்படி ஒப்பிட முடியும். திருப்பதி திருமலை ஒரு இந்து கோவில், இந்து அல்லாதோர் இங்கு இருக்கக்கூடாது என்பது பல கால கோரிக்கை. இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல, இந்துக்களை தவிர அங்கு யாரும் இருக்கக்கூடாது என்று சனாதன தர்மம் கூறுகிறது. இதை நடைமுறைப்படுத்துவது குறித்து போர்டு மீடிங்கிங்கில் முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
- காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண்.
- தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் எம்.பி.யும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது.,
திராவிட மாடல் நல்லாட்சியின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் மகிழ்கிறேன்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தங்களது மேலான கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.
அங்கு அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டது என்ற வகையில், வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மதுரை சுற்றுவட்டார பகுதி அனைத்து தரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செல்லும் ஒரு சில அரசியல் கட்சியினரினால் தான் அங்கு தேவையற்ற பதற்றமும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அங்கு அமைந்துள்ள கோவில் நிர்வாகத்தினர், இந்து அறநிலையத்துறை, தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், அரசு வருவாய் துறை ஆகியோர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இக்குழுவோடு உரிய ஆலோசனை செய்து, விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்டப்பட வழிவகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண், அதுவும் குறிப்பாக மதுரையை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான மண்.
எனவே இதன் அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமுகமான முடிவை விரைந்து எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.