என் மலர்
நீங்கள் தேடியது "warrant"
திருச்சி:
கோவை மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவ–டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருவாய்த்து–றையின–ருடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீ–சாரும் ஈடுபட்டு வருகி–றார்கள். இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜூ என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜூவுக்கு கடந்த 6 மாதமாக கோர்ட்டு சார்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர் பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு ஆஜராக கடந்த 11-ந்தேதி திருச்சியில் பணியாற்றி வரும் ராஜூவுக்கு போலீசார் மூலம் நேரில் சென்று அழைப்பாணையை கொடுத்தனர். இருந்தபோதிலும் அவர் நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு சரவணபாபு உத்தரவிட்டார். தற்போது ராஜூ பதவி உயர்வு பெற்று திருச்சி தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
- விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டுள்ளது
- போலீஸ் இன்ஸ்பெக்டருமான சண்முகசுந்தரம் கடந்த ஒராண்டாக 20 வாய்தாக்களுக்கு ஆஜராகவில்லை.
கரூர்:
கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கில் விசாரணை அதிகாரியான அப்போதைய பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டரும், தற்போது சேலம் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருமான சண்முகசுந்தரம் கடந்த ஒராண்டாக 20 வாய்தாக்களுக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் போக்சோ வழக்கில் ஆஜராகாமல் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு கரூர் கூடுதல் அமர்வு நீதிபதி நசீமாபானு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
- ரூ.8 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
- கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மதுரை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை விற்பதற்காக சரவணன், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கடந்த 11.2.2023 அன்று முயற்சி செய்தனர்.
இந்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சரவணன் மதுரை ஐகோர்்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்கையில், இவர் தமிழ்நாடு பழங்கால கலைப் பொக்கி ஷங்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.8 கோடி மதிப்புள்ள 2 அடி மதிப்பிலான நடராஜர் உலோகச் சிலையை தனது வீட்டில் விற்பதற்காக முயற்சி செய்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் கூறுகையில், இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மனுதாரர் சரவணன் 2-வது குற்றவாளி. சிலையை விற்பது தொடர்பாக மனுதாரருக்கு எதுவும் தெரியாது. அப்போது அவர் வீட்டில் இருந்ததால் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்பு டையவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் சரவணன் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
- விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
- கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை:
பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் கடந்த 1992-96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்ட படிப்பு முடித்தேன். இறுதியாக தேர்வு தேர்ச்சி பட்டியலில் எனது பெயர் தேர்வு எண் இல்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க சொன்னார்கள்.
பின்னர் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாததால் உங்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் எழுதி தேர்ச்சி பெற்றேன்.
பின்னர் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை மதிப்பெண் பட்டியல் தரவில்லை. ஆகவே எனது பொறியியல் படிப்பிற்கான அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்த மதிப்பெண் சான்று வழங்க உத்தரவிடுமாறு கடந்த 2020 ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது பொறியியல் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்று கோரி கல்லூரி நிர்வாகத்திடமும் பல்கலைக்கழகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார்.
வழக்கு தாக்கல் செய்தும் உள்ளார். எனவே மனுதாரர் கேட்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும் என கடந்த விசாரணையின் போது நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் செயல்படுத்தி பதிவாளரை நீதிமன்றத்தில் ஜூலை 7 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
- வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி உத்தரவு.
நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதரிாக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பள பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தயாரிப்பாளர் வழங்கவில்லை என அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார்.
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்
- கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்தியாவின் பிரபல தொழிலாலதிபரும் கிங்பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.180 கோடி கடன் மற்றும் தனது நிறுவனத்தின் மூலம் வாங்கிய பல்வேறு கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது. விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவர் மீதான வழக்கு இதுநாள்வரை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவரம்மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எனவே தற்போது மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னரும் பல முறை விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

- சுதந்திர போராட்ட வீரர் வேலு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
- ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு.
தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, 97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாரண்டை செயல்படுத்தி, ஜூலை 8ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.
- பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 4 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் வங்கதேச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச இந்தியாவுக்கு அதிக அழுத்தம் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடி வாரண்ட் பிரப்பிக்கப்பட்டது
- 3முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகவில்லை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் செல்லதுரை (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் மகன் பாஸ்கரன் (39). பெரியசாமி மகன் அருண்குமார். இதில் செல்லதுரைக்கும், பாஸ்கரனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குபதிந்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம்தேதி ஜாமீனில் வெளியே வந்த செல்லதுரையை அவரது வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த போது பாஸ்கரன், அருண்குமார் ஆகியோர் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் பாடுகாயமடைந்த செல்லதுரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்லதுரை கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டார்.
இதுசம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்லதுரை பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக செல்லதுரை வழக்கை பதிவு செய்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா சாட்சியமளிக்க கோர்ட்டில் ஆஜராகுமாறு 3 முறை சம்மன் அனுப்பட்டும் கோர்ட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று (22ம்தேதி) வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளிக்க வராத அப்போதைய அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டரும், தற்போது கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டருமான கலாவிற்கு பிணையில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தும், வரும் ஆகஸ்ட் 1ம்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி மூர்த்தி உத்தரவிட்டார்.
- சாட்சியம் அளிக்க வராத டாக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டன.
- நீதிபதி அதிரடி உத்தரவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி வெள்ளையம்மாள் (வயது 67). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது பெருமத்தூர் வாய்க்கால் பாலம் அருகே இவருக்கு பின்னால் வந்த தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த வெள்ளையம்மாள் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் வெள்ளையம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியமளிக்க கோர்ட்டுக்கு வருமாறு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த தனியார் மருத்துவமனை டாக்டருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் சம்மனை பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் பணி மருத்துவரை கோர்ட்டுக்கு சாட்சியமளிக்க அனுப்பி வைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை குற்றவியல் நீதிபதி, தனியார் மருத்துவமனையின் பணி மருத்துவருக்கு ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும், வரும் 28-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

மும்பை
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்சினை இருப்பது போல மராட்டியம்-ஆந்திரா இடையே கோதாவரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.
2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது கோதாவரியில் மராட்டியத்தில் நான்டெட் மாவட்டம் பாப்லி என்ற இடத்தில் புதிதாக அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தியது.
இதை எதிர்த்து சந்திர பாபுநாயுடு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களுடன் போராட்டம் நடத்தினார். பாப்லி திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஐதராபாத்தில் இருந்து பாப்லிக்கு புறப் பட்டார். இதையடுத்து மராட்டிய எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அவரும் 15 எம்.எல்.ஏ.க் களும் மராட்டியத்துக்குள் நுழைய முயன்றபோது மராட்டிய போலீசார் கைது செய்தனர். புனே ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு மராட்டிய மாநிலம் தர்மாபாத் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வக்கீல் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவைத் தொடர்ந்து தர்மாபாத் மாஜிஸ்திரேட்டு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் கைதான 15 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 16 பேரையும் கைது செய்து வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு என்.ஆர். கப்பியே உத்தர விட்டுள்ளார்.
தற்போது ஆந்திரா பிரிக்கப்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருக்கிறார். வாரண்டு அனுப்பப்பட்ட 15 பேரில் தேவினேனி உமாமகேஸ்வர ராவ், ஆனந்த்பாபு, ஆகியோர் மந்திரிகளாகவும், கமலாகர் என்பவர் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.
16 பேர் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் வன்முறையை தூண்டி விடுதல், ஆயுதங்களுடன் சென்று காயம் ஏற்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி சந்திரபாபு நாயிடுவின் மகனும் மாநில தகவல் தொழில்நுட்ப மந்திரியுமான என்.லோகேஷ் கூறுகையில் இது மராட்டிய பா.ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றாலும் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் தலைவர்கள் திட்டமிட்ட படி கோர்ட்டில் ஆஜர் ஆவார்கள் என்றார்.
சந்திரபாபு நாயுடு தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற் சவ விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பதி வந்து தங்கி உள்ளார். இதனால் அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. #Chandrababunaidu #Godavariprotestcase