என் மலர்
நீங்கள் தேடியது "Watchman"
- இரவு காவலாளியின் மண்டை உடைந்தது.
- ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கீழக்கரை
நேபாள நாட்டை சேர்ந்தவர் நரேன் குமார் சஞ்சேல் (வயது 43). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு பகுதியில் இரவு காவலாளியாக (கூர்க்கா) உள்ளார்.
கண்ணாடி வாப்பா தர்கா செல்லும் சாலையில் ரோந்து சென்றார். அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கூர்க்கா நரேன் குமாரை வழிமறித்து மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றனர். இதில் ஏற்பட்ட தகராறில் நரேன்குமாரின் கட்டையால் தாக்கியதில் மண்டை உடைந்தது.
அவர் கூச்சலிட்டதும் அக்கம், பக்கத்தினர் கூர்க்காவை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சதாம் உசேன் (31), முகம்மது கான் (28), பைசல் கான் (32), முகம்மது ஆதம் (30), ஜாவித் (22), அபுபக்கர் சித்திக் (24) ஆகியோர் மீது கீழக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.
கீழக்கரை நகர் பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ளாததால் அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். கீழக்கரை நகரில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ள ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- காவலாளி திடீரென இறந்தார்.
- நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி வீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து(33). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி நெடுகனேந்தலில் நடைபெற்ற மாமனாரின் இல்ல விழாவிற்காக சென்றார். அங்கு உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயமுத்துவின் தந்தை தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அருகே காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (வயது63). இவர் புது ராம்நாடு ரோட்டில் உள்ள வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று வாத நோய் வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சண்முகவள்ளி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாண்டியனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீழே கிடந்த ரூ.5 ஆயிரத்தை காவலாளி போலீசில் ஒப்படைத்தார்.
- குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார்.
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் கதிரேசன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று குழந்தைகள் வார்டு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு ரூ.5 ஆயிரம் பணத்தை யாரோ தவற விட்டு சென்றுள்ளனர். பணத்தை எடுத்த கதிரேசன் அதை உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கதிரேசனின் இந்த செயலை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஒசுவக்காடு பகுதியில் கார் மோதி வாட்ச்மேன் பலியானார்.
- நேற்று காலை 6 மணியளவில் பங்க் எதிரே வேலை முடிந்து சாலையை கடந்தார்.
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஒசுவக்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இரவு நேர வாட்ச்மேனாக பணியாற்று வந்தார். நேற்று காலை 6 மணியளவில் பங்க் எதிரே வேலை முடிந்து சாலையை கடந்தார்.
அப்போது வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் அண்ணா துரை பரிதாபமாக இறந்தார். அப்போது சாலையின் மறுபக்கம் இவரது மகன் சுரேஷ், (30), இந்த சம்பவத்தை கண்டு கதறி அழுதார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டிவந்த சேலத்தை சேர்ந்த டாக்டர் மணிகண்டபிரபுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.







