என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water flow"

    • கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவிரி ஆற்றின் ஒரு கரையிலும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் காவிரி ஆற்றின் மறுக்கரையிலும் அமைந்துள்ளது.
    • இந்த போக்குவரத்து மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவார்கள்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவிரி ஆற்றின் ஒரு கரையிலும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் காவிரி ஆற்றின் மறுக்கரையிலும் அமைந்துள்ளது. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டையூர் மற்றும் பண்ணவாடி பரிசல் துறை பகுதிகளில் இருந்து தர்மபுரி மாவட்டம் நாகமரை பெண்ணாகரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு பரிசல் மற்றும் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    இந்த போக்குவரத்து மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவார்கள். தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து திடீர் திடீரென அதிகரித்து வருகிறது.

    இதனால் கோட்டையூர் மற்றும் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் இருந்து இயக்கப்பட்ட விசைப்படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்திற்கு தர்மபுரி மாவட்டம் நாகமரை, பென்னாகரம், பூச்சியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தற்போது சாலை போக்குவரத்து மூலம் மேட்டூர், தர்மபுரி வழியாக சென்று வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் சுமார் 2000 க்கு மேற்பட்ட மீனவர்கள் மேட்டூர் மீனவ கூட்டுறவு சங்கம் மூலம் உரிமம் பெற்று மீன்பிடிப்புத் தொழில் நடத்தி வருகிறார்கள். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க இயலாத நிலமை ஏற்பட்டுள்ளது. மேலும் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளதால் மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதாகி உள்ளது. இதனால் மீன்பிடிப்புத் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . 

    • மதுரை மாவட்ட கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • சில இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழை காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது. முக்கிய சாலைகள் மற்றும் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. சில இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள். பி.பி. குளம், தபால்தந்தி நகர், செல்லூர், ஜெய்ஹிந்துபுரம், ஆரப்பாளையம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் அந்த பகுதிகளை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரும்பாலான கண்மா ய்களுக்கு அதிக அளவில் தண்ணீர் வருவதால் முழுமையாக நிரம்பி வருகிறது. அந்த பகுதிகளில் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    சோழவந்தான், அலங்காநல்லூர், கள்ளந்திரி, கடச்சனே ந்தல்,மேலூர், குலமங்கலம் பகுதிகளில் நெல் நடவு பணிகளும் தீவிர மடைந்துள்ளன. இந்த மழையால் காய்கறி விவசாயமும் அதிகரித்துள்ளது.

    மதுரை மார்க்கெ ட்டுகளில் காய்கறி வரத்து அதிகரித்து விலையும் கணிசமாக குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 140 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி அதிக மகசூல் காரணமாக தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    அதுபோல நாட்டு காய்கறிகளான கத்திரி க்காய், வெண்டை, சீனி அவரை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளன.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை 566 மில்லி மீட்டர் மழை கொட்டியது. ஒவ்வொரு பகுதியிலும் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    சிட்டம்பட்டி-32, கள்ளந்திரி-49, தனியாமங்கலம்-22, மேலூர்-30, சாத்தையாறு அணை- 56, வாடிப்பட்டி -56, திருமங்கலம்-6, உசிலம்பட்டி -13, மதுரை வடக்கு -17, தல்லாகுளம் -19, விரகனூர் -11, விமான நிலையம்- 11, இடையபட்டி -41, சோழவந்தான் -16, மேட்டுப்பட்டி-46, கள்ளிக்குடி -22.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது.
    • டேனிஷ் பேட்டை சரபங்கா ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகமாகி உள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் ஏற்காடு மலை சரிவில் ஏற்பட்ட மழை நீர் அனைத்தும் டேனிஷ் பேட்டை சரபங்கா ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகமாகி உள்ளது. பலத்த மழையின் காரணமாக சந்தப்பேட்டை, தீவட்டிப்பட்டி மற்றும் பல இடங்களில் தாழ்வான பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது.
    • டேனிஷ் பேட்டை சரபங்கா ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகமாகி உள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் ஏற்காடு மலை சரிவில் ஏற்பட்ட மழை நீர் அனைத்தும் டேனிஷ் பேட்டை சரபங்கா ஆற்றில் கலந்து நீர்வரத்து அதிகமாகி உள்ளது. பலத்த மழையின் காரணமாக சந்தப்பேட்டை, தீவட்டிப்பட்டி மற்றும் பல இடங்களில் தாழ்வான பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.

    • 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீன் அளவும் குறைந்தது. இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.14 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று வினாடிக்கு 1,072 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை அணை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×