என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "weightlifting competition"
- தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தேர்வாகியுள்ளார்.
- கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை உதயநிதி வழங்கினார்.
பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள கஸ்தூரி ராஜாமணியை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்,
இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம்.
தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- 2 பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக அவர் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.
- உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 82 வயது மூதாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி, முதல் முயற்சியிலேயே 5-ம் இடத்தை பெற்று அசத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோருடன் கிட்டம்மாள் வசித்து வருகிறார்.
இவரது பேரன்களான ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தனது பேரன்களை பார்த்து தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கிட்டம்மாள் ஆசைபட்டுள்ளார்.
2 பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக அவர் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதன்பின் உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
கிட்டம்மாளின் ஆர்வத்தைக் கண்டு உடற்பயிற்சியாளர் சதீஷ், கோவையில் கடந்த மே 1-ம் தேதி "Indian fitness federation" சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய கிட்டம்மாள், "பெண்கள் எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும். எனது ஆர்வத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எனது உணவு முறையே காரணம். பேரன்கள் மற்றும் உடற்பயிற்சியாளரின் துணையோடு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றேன். எனது கணவர் ஊட்டசத்து உணவுகளை எனக்கு வாங்கி கொடுத்து வெற்றி பெற ஊக்கமளித்தார்" என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய கிட்டம்மாளின் கணவர் வெட்கட்ராமன், "பெண்கள் சமைத்து தரும் உணவை சாப்பிடுவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என அறிந்து நடப்பதுதான் நல்ல கணவரின் கடமை. தனது மனைவி இன்னும் பல சாதனைகளை படைப்பார்" என்று அவர் தெரிவித்தார்.
- பளுதூக்கும் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள், பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி அணி முதலிடத்தையும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி அணி 2-வது இடத்தையும், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணி 3-வது இடத்தையும், கோவில்பட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது.
பெண்கள் பிரிவில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி அணி முதலிடத்தையும், தெற்கு கள்ளிக்குளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி அணி 2-வது இடத்தையும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணி 3-வது இடத்தையும், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- ஆலங்குளத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றனர்.
- 59 கிலோ எடை பிரிவில் அப்துர் ரகுமான் இரண்டு தங்கம் வென்றார்.
தென்காசி:
ஆலங்குளத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றனர். இதில் ஊட்டச்சத்து நிபுணர் பிரியதர்ஷினி சீனியர் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்துடன் ஸ்ட்ராங் வுமன் பட்டத்தையும் வென்றார். 59 கிலோ எடை பிரிவில் அப்துர் ரகுமான் இரண்டு தங்கம் வென்றார். 83 கிலோ எடை பிரிவில் தங்க மணிகண்டன் இரண்டு தங்கம் வென்றார்.
66 கிலோ மாஸ்டர் 2 எடை பிரிவில் சுப்ரமணியன் இரண்டு தங்கம் வென்றார். 93 கிலோ மாஸ்டர் 3 எடை பிரிவில் மனசாட்சி ராஜேந்திரன், ஜூனியர் பிரிவில் முகமது லால், சீனியர் பிரிவில் கோச் ராம்சங்கர் இரண்டு தங்கப்பதக்கம் வென்றனர். அதே பிரிவில் ஹரிஹர சுப்ரமணியன் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். 105 கிலோ எடை பிரிவில் முத்துராஜா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார். 120 கிலோ எடைப்பிரிவில் செந்தில் ஆறுமுகம் இரண்டு தங்கம் வென்றார். வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த மாதம் மாநில அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு மாவட்ட அளவில் வளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- புதுவை மாநிலம் பளு தூக்கும் அசோசியேஷன் மற்றும் நியூ அர்னால்டு ஜிம் சார்பில் 29 -ம் ஆண்டு மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் மற்றும் நெட்டப்பாக்கம் வட்ட ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் பளு தூக்கும் அசோசியேஷன் மற்றும் நியூ அர்னால்டு ஜிம் சார்பில் 29 -ம் ஆண்டு மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.
தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் மற்றும் நெட்டப்பாக்கம் வட்ட ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன், சப்-இன்ஸ்பெக்டர் வாழ் முனி, செயலாளர் பிரவீன் குமார் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யுவராஜா மற்றும் அசோசியேஷன் குழுவினர் செய்திருந்தனர். பளு தூக்கும் போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட உடற்பயிற்சி கழகத்திலிருந்து 120 ஆண்கள் 66பெண்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை முதலியார் பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றார்.
- பளு தூக்கும் வீராங்கணையான கிருத்திகா கோவையில் கடந்த 17-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார்
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றார்.
பளு தூக்கும் வீராங்கணையான கிருத்திகா கோவையில் கடந்த 17-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார். சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திகா பங்கேற்று 185 கிலோ பளு தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதுபோல் 85 கிலா பெஞ்ச் பிரஸ் போட்டியில் முதலிடம் பெற்று தங்கமும், மற்றொரு போட்டியில் 2-ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ஆசிய இரும்பு பெண்மணி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்று புதுவை திரும்பிய மாணவி கிருத்திகா முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் தந்தை முருகானந்தம், பயிற்சியாளர் பாக்யராஜ் மற்றும் பளு தூக்கும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்