search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Board"

    • அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர்.
    • கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி ஆணை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தொ.மு.ச.பேரவையின் உட்பிரிவுகளின் ஒன்றான , தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர், ஓட்டுநர் விஜய் என்ற இளைஞர் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி திவ்யாவிடம் அரசின் உதவித்தொகை ரூ.2 லட்சத்தை தொ.மு.ச. பேர வையின் அகில இந்திய பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் வழங்கினார்.தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி வழங்கும் வகையில், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் பணி ஆணையையும் வழங்கினார்.

    இது குறித்து தொ.மு.ச. பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. அளித்த பேட்டியில்:-

    கருணாநிதியால் உருவாக்கப்பட்ட அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர். நல வாரியத்தை தொடக்கி தொழிலாளர்களின் குடும்பங்களை காத்தவர் கருணாநிதி என்றார்.

    இந்நிகழ்வில் கரந்தை பகுதி தி.மு.க செயலாளர் கார்த்திகேயன், தொ.மு.ச.மா வட்ட கவுன்சில் செயலாளர் சேவியர், உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சாக்ரட்டீஸ், லாரன்ஸ், காதர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
    • ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்.

     பல்லடம் :

    தமிழக நான்கு சக்கர மற்றும் கனரக வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. பல்லடம் பகுதி சங்கத் தலைவர் சக்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் முனியப்பன், செயலாளர் ஹேன்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வாகனம் பழுது பார்ப்போருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். பல்லடத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜா, துணைச்செயலாளர்கள் முருகன், சுபாகர், மாவட்ட பிரதிநிதி மாரிராஜா, மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
    • புதுவையில் எங்களுக்கான அங்கீகார த்திற்காகவும், குறைகளை தீர்ப்பதற்காகவும் தனி நலவாரியத்தை அரசு உடனடியாக அமைத்துத்தர வேண்டும்.

    புதுச்சேரி:

    சர்வதேச திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது.

    புதுவை அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    பின்னர் திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஷீத்தல் நாயக் கூறும்போது, தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் உள்ளது. வடமாநிலங்களிலும் இதேபோல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுவையில் எங்களுக்கான அங்கீகார த்திற்காகவும், குறைகளை தீர்ப்பதற்காகவும் தனி நலவாரியத்தை அரசு உடனடியாக அமைத்துத்தர வேண்டும்.

    புதுவை திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு வீடு, மாத உதவித்தொகை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
    • ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் வருகிற ஆண்டிற்கான உயிர்வாழ் சான்றினை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கீழ்கண்ட விவரங்களுடன் பதிவேற்றம் செய்யுமாறும், உயிர்வாழ் சான்றினை தாக்கல் செய்வதற்கு யாரும் நேரில் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆதார் அட்டையினை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். (தவறான ஆதார் எண் உள்ளீடு செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்). வாரியம் மற்றும் தொழிலின் தன்மை சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.

    ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்கு ஐ.எப்.எஸ்.சி. கோடு, எம்.ஐ.சி.ஆர்.கோடு ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரிய ஓய்வூதியதாரர்கள், அவர்களது சாதியை சரியாக குறிப்பிட வேண்டும்.

    புதிய குடும்ப அட்டை எண் மற்றும் அசல் அட்டை ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆயுள் சான்றுக்கு ஆதாரமாக ஓய்வூதிய ஆணை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர் அவரது ஆதார் அட்டையினை கையில் பிடித்துக் கொண்டிருப்பது போல் நேரடி போட்டோ எடுக்கப்பட வேண்டும்.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு நெல்லை, தென்காசியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும்.
    • மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது தென்னை நல வாரியம் அமைக்கப்பட்டது. தற்போது ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனையாகிறது.அதற்கு பதிலாக தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.

    தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும். காங்கயம் தென்னை வர்த்தக நகராக உள்ளது. தென்னைக்கு இங்கு நிரந்தர கண்காட்சி மையம் அமைக்க வேண்டும். மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

    ×