search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Helps"

    • விழாவில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் நாங்குநேரி நகர செயலாளர் சங்கர் முத்துடையார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தொடக்க விழாவையொட்டி அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என அறிக்கையில் தச்சை கணேசராஜா கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில், வண்ணார்பேட்டை கொக்கிர குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கும், அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெய லலிதா உருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தொடக்க விழாவையொட்டி அவரவர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றியும், அலங்கரித்து வைக்கப்பட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ரூ. 5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
    • கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட 628 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    நலத்திட்ட உதவிகள்

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலதிட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த 25 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்திற் கான காசோலை களையும், ஒரு பயனாளிக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 9 ஆயிரத்திற்கான காசோலையினையும், 7 பேருக்கு ரூ. 9 ஆயிரம் கல்வி உதவித் தொகைக் கான காசோலைகளையும், ஒருவருக்கு ரூ. 1 லட்சம் விபத்து மரணம் நிதி உதவி தொகை என மொத்தம் ரூ. 5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றத்திற னாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 628 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • மேல திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி ஆகிய பஞ்சாயத்துக்களில் ‘மக்கள் களம்’நிகழ்ச்சி நடந்தது.
    • கடந்த காலங்களில் சத்துணவில் முட்டை வழங்குகிற திட்டத்தை தந்தவர் கலைஞர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி ஆகிய பஞ்சாயத்துக்களில் 'மக்கள் களம்' என்ற மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்தில் நா. முத்தையாபுரத்திலும், பிச்சிவிளை பஞ்சாயத்தில் பிச்சிவிளையிலும், காயாமொழி பஞ்சாயத்தில் குமாரசாமிபுரத்திலும் நடந்தது.

    கனிமொழி எம்.பி.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    மேலும் பெண்களுக்கு தையல் எந்திரம், சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மருத்துவ பெட்டகங்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ரூ. 60 லட்சத்து 5 ஆயிரத்து 712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மொத்த 44 பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பொதுமக்களாகிய நீங்கள் எந்தவொரு மனு அளிப்பதற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் கலெக்டர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினராகிய நான் (கனிமொழி எம்.பி.), அரசு அலுவலர்கள் உங்கள் கிராமத்திற்கே வந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கான முயற்சி தான் மக்கள்களம் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இலவச பஸ் பயணம்

    தமிழ்நாடு அரசு தான் பெண்களுக்கு டவுன் பஸ்களில் கட்டணம் இல்லாமல் பஸ் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுடைய உழைப்பை மதிக்கக் கூடிய வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. சாலைவசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான திட்டப்பணி கள் நடந்து வருகிறது.

    இவ்வாறு கனிமொழி பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    கடந்த காலங்களில் சத்துணவில் முட்டை வழங்குகிற திட்டத்தை தந்தவர் கலைஞர். தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார் என்று பேசினார்.

    மாலையில், கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமலி நகரில் உள்ள மீனவர்கள் 12 பேர் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆன்றோ, பொங்கலரசி, பஞ்சாயத்து தலைவர்கள் மகாராஜன் (மேல திருச்செந்தூர்), ராஜேஸ்வரன் (காயாமொழி), காயாமொழி சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசில் நூகு, மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.
    • முன்னாள் எம்.பி. ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    காங்கிரஸ் தென்காசி மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். வடக்கு வட்டார செயலாளர் நெட்டூர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார்.

    விழாவில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வந்த கல்வி கடன் திட்டம் மற்றும் உணவுப்பொருள் பாதுகாப்பு திட்டத்தின் அவசியத்தையும், அதன் பயனையும் எடுத்துக்கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் ஆலங்குளம் நகர துணை தலைவர் லெனின், ஜெயம், ஜவுளிக்கடை செல்வராஜ், மகாராஜா சிங் , கடங்கநேரி ஆராய்ச்சி மணி, இனிகோ, வெள்ளத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
    • கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக ஆய்வு கூட்டம் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு 50 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஒரு பயனாளிக்கு ரூ.2.05 லட்சம் விபத்து மரண உதவி தொகை, 11 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் இயற்கை மரண உதவி தொகை உள்ளிட்டவை அடங்கும்.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு பெற்ற கட்டுமான

    தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கால தாமதமின்றி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது பதிவுப்பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பி ரசன்னா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலாவுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சுரேஷ், உதவி துணை தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா மாவட்ட முதல் துணை ஆளுநர் அய்யாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சீனியர் மேலாளரான ஒயிட் பீல்டு ஆர்தர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளர்களாக முத்துப்பாண்டியன், லோகா கிருஷ்ணசாமி, பொருளாளராக ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அனைவரும் உறுதிமொழியுடன் பதவி ஏற்று கொண்டனர்.

    தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலா என்பவருக்கு தையல் எந்திரமும், சிவராமகிருஷ்ணனுக்கு மருத்துவ உதவி தொகையும், முக்காணி அவிஸ்டன், மேலஆத்தூர் அருள்ராஜ், ஆத்தூர் சாக்ஷினி ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன. லையன் பிரகாஷ், சுப்பிரமணியன், பொன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை நீதிமன்றம் எதிரே, நெல்லை சந்தி விநாயகர் கோவில் அருகே ச.ம.க. சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
    • அத்திமேட்டில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 70-வது பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது.

    மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி முன்னிலை வகித்தார். இதே போல் பாளை செந்தில்நகரில் பாளை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராகவன் மற்றும் பாளை பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து முதியவர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது. நெல்லை நீதிமன்றம் எதிரே, நெல்லை சந்தி விநாயகர் கோவில் அருகே ச.ம.க. சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் டவுன் அத்திமேட்டில் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மந்திர மூர்த்தி ஏற்பாட்டில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைசெயலாளர்கள் வெங்கடேஷ், சின்னத்துரை, மாவட்ட பொருளாளர் சரத்ஆனந்த், பாளை பகுதி துணை செயலாளர்கள் நாராயணன், பொன்ராஜ், மாவட்ட மாணவரணி ராஜ்கண்ணன், துணை செயலாளர் மூர்த்தி, இளைஞரணி செயலா ளர்கள் வினோத், அந்தோணி, தகவல் தொழில் நுட்ப அணி மகாராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மணி, பவுல் ஆதித்தன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, வக்கீல் அணி இசக்கிமுத்து, மகளிர் அணி லட்சுமி, உமா, பிரியா, மாவட்ட செயலாளர் பூமணி, முத்துலட்சுமி, லட்சுமி, பேச்சிமுத்து, கல்யாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.
    • பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர்.

    நெல்லை:

    தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டா டப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான இந்நாளில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.

    மேலப்பாளையம்

    மாவட்டத்தில் திசையன்விளை, ஆத்தங்கரை பள்ளிவாசல், களக்காடு, ஏர்வாடி, பத்தமடை, பேட்டை உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசல்களிலும், திறந்தவெளி திடல்களிலும் நடந்த தொழுகையில் சிறுவர்-சிறுமியர்கள் உள்பட குடும்பத்தினருடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

    நெல்லை மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மதினா பள்ளி திடலில் நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரையாற்றினார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பக்ரீத் வாழ்த்து செய்தி கூறினார். அப்போது அவர், தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்த நாளில் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திட நாட்டு மக்களுக்கு எதிரான சக்திகளை வீழ்த்த சபதமேற்போம் என்றார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கனி, செய்தி தொடர்பாளர் பக்கீர் முகமது லெப்பை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்துல் வகாப் எம்.எல்.ஏ.

    மேலப்பாளையம் ஜின்னாதிடலில் நடைபெற்ற தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் முகம்மது அலி தெரு, எம்.என்.பி பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், வி.மா. பள்ளிவாசல், நயினார்குளம் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    டவுன்-பேட்டை

    டவுன் லாலுகாபுரத்தில் மாவட்ட பேச்சாளர் சித்திக் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் டவுன் ஜாபர் கலந்து கொண்டார்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை சார்பில் பேட்டை மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் பாசித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை தலைவர் சேக் அப்துல் காதர், செயலாளர் பீர் முஹம்மது, பொருளாளர் அகமது மீரான், துணைச்செயலாளர் அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் முஹம்மது கான், மருத்துவ அணி திப்புசுல்தான் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    வாழ்த்துக்களை பரிமாறினர்

    பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சியை குர்பானியாக வழங்கினர். பிரியாணி போன்ற உணவு பொட்டலங்களும் வழங்கினர். இதனையொட்டி பள்ளிவாசல்கள், திடல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
    • விழாவில் சிவபத்மநாபன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர்வடகரையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் முத்து வரவேற்று பேசினார். பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து தொகுத்து வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, சாமிதுரை, நாலாயிரம் பாப்பா, சண்முகவேல், ராமச்சந்திரன், விஜயகுமார், செல்வின் அப்பாதுரை, பட்டு முத்து, சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாநில பேச்சாளர் சரத் பாலா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், வெங்கடேசன், கென்னடி, கலா, பண்டாரம், வெள்ளத்துரை, அருணா சந்திரன், முத்துக்குமார், ஞான முருகன், அணைந்த பெருமாள், ஸ்டீபன் சத்யராஜ், முல்லை கண்ணன், பாலசுப்பிரமணியன், சேர்ந்தமரம் முருகன், டான் கணேசன், ரத்னசாமி, வெள்ளத்துரை பாண்டியன், அருணா, ஞானசீலன், வடகரை ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்கசிஸ் நன்றி கூறினார்.

    • பொதுக்கூட்டத்திற்கு தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், பெரிய பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ராஜேந்திரன், முத்துப்பாண்டி, ஒன்றிய, நகர செய லாளர்கள், நிர்வாகிகள், பேச்சாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் செய்திருந்தார்.

    • கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
    • இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 439 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இக்கூட்டத்தில், இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஈம சடங்கிற்கான செலவு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 16 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்திற்கான காசோலைகளும், ஒரு பயனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான காது ஒலி கருவியும், இரண்டு பயனாளிகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான பாதுகாவலர் நியமன சான்று என மொத்தம் 19 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் ரூ.2லட்சத்து 80,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 439 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து மனு தாரர்களுக்கு உரிய பதிலை விரைவாக அளிக்கு மாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மா வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி கமிஷனர் (கலால்) நடராஜன் (பொறுப்பு), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×