என் மலர்
நீங்கள் தேடியது "WhatsApp"
- விருதுநகர் மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸ்-அப் மூலம் குறை தீர்க்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
- குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு சேவைகளில், மாவட்டத்திற்கு தேவை யான முக்கியமான அரசு சேவைகளின் தகவல்கள், இணையதள முகவரிகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அறிந்து பயன்பெறும் வகையில், இந்தியாவிலேயே முதன்மு றையாக விருதுநகர் மாவட்டத்தில் ''விரு'' (VIRU) தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை பொதுமக்களுக்கு தேவையான அரசு தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 94884 00438 என்ற எண்ணிற்கு "HI" என்று அனுப்புவதன் மூலம் இந்த சேவையுடன் தொடர்பு கொண்டால், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சேவைகளான உங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை தேட, புதிய வாக்காளராக பதிவு செய்ய, வாக்காளர் பட்டியலில் நீக்கம், இடமா ற்றம், திருத்தம் செய்ய, நகல் வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி பதிவு செய்ய என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.
மேலும் மின்னணு வாக்காளர் அட்டையினை பதிவிறக்கம் செய்ய, உங்களுடைய வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தெரிந்து கொள்ள, முதல்வரின் தனிப்பிரிவு-முதல்வரின் முகவரி, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் நிலவு டமை ஆவணங்கள் -பட்டா, சிட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம், இணையவழி சான்றிதழ் சேவைகள், முக்கிய உதவி எண்கள், அறிவிப்புகள், திட்டங்கள், செய்தி வெளியீடு, தமிழக அரசுத்துறைகளின் சமூக வலைதள பக்கங்கள், இணையதள முகவரிகள் என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.
அந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான சேவையின் ஆங்கில வரிசை எழுத்தை உள்ளீடு செய்து தேர்ந்தெடுத்து பயன் பெறலாம். இந்த சேவையை பொதுமக்கள் 24 மணி நேரமும், எந்த இடத்தில் இருந்தும் தங்கள் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை எண்ணை விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பயனாளிகள் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்துள்ளனர். இந்த சேவையில் பொதுமக்கள் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிப்பதற்கும், அதற்கேற்றவாறு சேவை களை வழங்குவதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தரப்பட்ட பொதுமக்கள் இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் கடந்த மாதம் 37 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
- இது அக்டோபர் மாதத்தை விட 60 சதவீதம் அதிகம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், ஒவ்வொரு மாதமும் தங்களது பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றன.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
புகார்களைப் பெறுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 9 லட்சத்து 90 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் முடக்கப்பட்ட வாட்ஸ் ஆப் கணக்குகளை விட 60 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த அக்டோபரில் மொத்தம் 23.24 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியதும், அதில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் 8.11 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- வேலைக்கு செல்லாத 3 பேரும் எப்படி புதிய மோட்டார் சைக்கிளை வாங்கினார்கள் என்ற சந்தேகம் இருந்தது.
- வீட்டில் பணத்தை திருடிய வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிச்சாமி(50).
பழ வியாபாரியான இவர் கடந்த 23-ந் தேதி இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மினி வேனில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிக்கு பழ வியாபாரத்திற்கு சென்றார். வியாபாரத்தை முடித்து விட்டு 24-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணம் ரூ.1லட்சத்து 2 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து முனிச்சாமி பாலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் முனிச்சாமி வீட்டின் அருகே வசிக்கும் வெள்ளைச்சாமி (வயது19), சேது (20), கேசவன் (21) ஆகியோர் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி உள்ளனர். அதனை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்சில் வைத்தனர். அதனை பார்த்த முனிச்சாமிக்கு, வேலைக்கு செல்லாத 3 பேரும் எப்படி புதிய மோட்டார் சைக்கிளை வாங்கினார்கள் என்ற சந்தேகம் இருந்தது.
தனது வீட்டில் நடந்த திருட்டில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம்? என கருதி பாலமேடு போலீசில் முனிச்சாமி புகார் தெரிவித்தார். அதன்பேரில் பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் வெள்ளைச்சாமி, சேது, கேசவன் ஆகிய 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில், இவர்கள் சம்பவத்தன்று முனிச்சாமி வீட்டில் பணத்தை திருடியதும், அதன் மூலம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
பழ வியாபாரியின் வீட்டில் பணத்தை திருடிய வாலிபர்கள், அதன் மூலம் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிள் படத்தை வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததால் மாட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாட்ஸ்அப் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- முதற்கட்டமாக புது அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் ஸ்டேட்டஸ்-ஐ ரிபோர்ட் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த வசதி கணினி அல்லது லேப்டாப் சாதனங்களில் டெஸ்க்டாப் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. தற்போது போலியான குறுந்தகவல்களை ரிபோர்ட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கிறது.
எனினும், தற்போதைய அப்டேட் செயலியை மேலும் பாதுகாப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. புது அப்டேட் மூலம் பயனர்கள் எதிர்கொள்ளும் போலி அல்லது சர்ச்சைக்குரிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை ரிபோர்ட் செய்யலாம். ஸ்டேட்டஸ் பகுதியில் உள்ள புது மெனுவில் ரிபோர்ட் செய்வதற்கான ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ரிபோர்ட் செய்யப்படும் ஸ்டேட்டஸ் பற்றிய விவரங்கள் வாட்ஸ்அப்-க்கு அனுப்பப்படும்.

அழைப்புகள், குறுந்தகவல், மீடியா, லொகேஷன் ஷேரிங், ஸ்டேட்டஸ் அப்டேட் போன்றே ரிபோர்ட் செய்யப்படும் குறுந்தகவல்களும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு என்க்ரிப்ட் செய்யப்படும் குறுந்தகவல்களை யாராலும் பார்க்க முடியாது. தற்போது இந்த அம்சம் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷனஷில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த அம்சம் எதிர்கால அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
சமீபத்திய தகவல்களின் படி வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனில் புது ஸ்கிரீன் லாக் வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் கடவுச்சொல் வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு செயலியை திறக்க பயனர்கள் பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.
Photo Courtesy: wabetainfo.com
- வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் மெசேஜ்களை ஒரு முறை பார்த்ததும் அழிந்து போக செய்யும் வசதி உள்ளது.
- தற்போது வாட்ஸ்அப்-இல் Kept Messages பெயரில் புது வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது.
L செயலியில் மறைந்து போக செய்யும் குறுந்தகவல்களை பயனர்கள் சேமித்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான வசதியை வழங்கும் புது அம்சம் "Kept Messages" பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் disappearing messages மூலம் வரும் குறுந்தகவல்களை பயனர்கள் தற்காலிகமாக சேமித்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. அதன்படி disappearing messages வடிவில் வரும் குறுந்தகவல்களை சாதாரனமானவை போன்றே வைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல் மற்ற மெசேஜ்களை விட தனித்து காண்பிக்கப்படுகிறது. disappearing messages மூலம் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் தானாக அழிக்கப்பட்டு விடும். இந்த அம்சம் வாட்ஸ்அப் இணைக்கப்பட்டு இருக்கும் அனைத்து சாதனங்களிலும் குறிப்பிட்ட குறுந்தகவலை அழித்துவிடும். இந்த நிலையில், வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் புது வசதி disappearing messages-களை சேமித்துக் கொள்ள வழி செய்கிறது.

இவ்வாறு Kept Messages ஆக சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல் தானாக அழிக்கப்படாது. இவை மற்ற குறுந்தகவல்களை போன்றே சாட் பாக்ஸ்-இல் தோன்றும். பயனர் விரும்பும்பட்சத்தில் இவற்றை un-keep செய்யக்கோரும் போது தான் அழிக்கப்படும். சேமித்து வைக்கப்படும் குறுந்தகவல்களில் தனியே புக்மார்க் ஐகான் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் தற்போது ஆரம்ப கால சோதனை கட்டத்தில் உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் எப்போது பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் அப்டேட்களில் இந்த அம்சம் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Photo Courtesy: WABetaInfo
- நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
- வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள் ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
மேலும் நுகர்வோர் வசதிக்காக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களில் பிரத்தியேகமாக உள்ள வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தந்த நுகர்வோர், தங்கள் பகுதிக்கு கொடுக்கப்பட்ட செல் போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.
நாகை - 9445853931, வெளிப்பாளையம்-9445853933, நாகூர் - 9445853934, திருமருகல்-9445853931, கங்களாஞ்சேரி- 9445853935, சிக்கல்-9445853940, வேளாங்கண்ணி- 9445853938, கீழ்வேளூர் -– 9448583936, திருக்குவளை- –9445853937, திருப்பூண்டி- –9445853939, வேதாரண்யம்-–9445853941, வாய்மேடு-9445853942, கரியா பட்டினம்- –9445853943, விழுந்தமாவடி- –9445853944 ஆகிய செல்போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து மின் நுகர்வோர் இந்த சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்தி ஆதார் எண்களை இணைத்து வருகிற 31-ந் தேதிக்குள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக டிசம்பரில் 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டது.
- கடந்த செப்டம்பரில் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது.
புதுடெல்லி:
வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதில் 13,89,000 வாடஸ் அப் கணக்குகளை எந்தவித முன்னறிவிப்பு இன்றி முடக்கி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.
ஏற்கனவே, கடந்த செப்டம்பரில் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது நினைவிருக்கலாம்.
- ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ரெயில் பயணிகளுக்கு உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறது.
- ரெயில் பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அமலாக உள்ளது.
புதுடெல்லி:
ரெயில் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறது. இதற்காக தனி இணைய தளம் மற்றும் செல்போன் செயலி உள்ளது. இந்த வரிசையில் வாட்ஸ்அப் மூலமும் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரெயில்வே அறிமுகம் செய்கிறது. இதை 2 கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட வழித்தடங்களில் ஏற்கனவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து தடங்களிலும் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அமல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரெயில்களில் இ-கேட்டரிங் சேவைகளுக்கான வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மற்ற ரெயில்களிலும் இது அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட் மீடியா ஃபைல் ஷேரிங்கை எளிமையாக்கி இருக்கிறது.
- வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியிலும் ஏராள மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக கூடுதல் வசதிகள் வழங்கப்படுகின்றன.
வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் 100 மீடியா ஃபைல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் 30 மீடியா ஃபைல்களை மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.4.3 வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய அம்சம் தற்போது வழங்கப்பட்டு உள்ளது.
புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய செயலியினுள் ஒரே சமயத்தில் 30-க்கும் மேற்பட்ட மீடியா ஃபைல்களை தேர்வு செய்து முயற்சிக்கலாம். 30-க்கும் மேற்பட்ட ஃபைல்களை தேர்வு செய்ய முடியும் பட்சத்தில் உங்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை இந்த அம்சம் வழங்கப்படவில்லை எனில், உங்களால் 30-க்கும் அதிக ஃபைல்களை தேர்வு செய்ய இயலாது. அந்த வகையில், கிடைக்காதவர்கள் இந்த வசதியை பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

தற்போது 100 மீடியா ஃபைல்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டு இருப்பதை கொண்டு, ஒரே புகைப்படம் அல்லது வீடியோவை பலமுறை தேர்வு செய்ய முடியாது. தற்போது டெஸ்டிங்கில் இருப்பதால், இந்த அம்சம் விரைவில் அனுவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வெளியிடப்படலாம். எனினும், சரியான வெளியீட்டு காலம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
பீட்டா டெஸ்டிங் ஒருபுறம் இருக்க, வாட்ஸ்அப் தனது ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் பகுதியில் சில புதிய அம்சங்களை அறிவித்து இருக்கிறது. இந்த அம்சங்களை கொண்டு வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு புதிய வழிகளில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
பிரைவேட் ஆடியன்ஸ்:
பெயருக்கு ஏற்றார்போல் இந்த அம்சம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை யார் பார்க்க வேண்டும் என்பதை குறிக்கும். இது முழுக்க முழுக்க புதிய அம்சம் இல்லை என்ற போதிலும், இது பிரத்யேக அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும். சமீபத்தில் தேர்வு செய்தபடி யார்யாருக்கு ஸ்டேட்டஸ் காண்பிக்கப்பட வேண்டும் என்ற காண்டாக்ட்களின் பட்டியல் சேமிக்கப்பட்டு, அடுத்த அப்டேட்டிற்கு தானாக பயன்படுத்தப்படும்.
வாய்ஸ் ஸ்டேட்டஸ்:
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சமாக 30 நொடிகளுக்கு வாய்ஸ் நோட்களை தங்களின் ஸ்டேட்டஸ்-ஆக வைத்துக் கொள்ளலாம். மிகமுக்கிய தனிப்பட்ட வகையில் அப்டேட்களை தெரிவிக்கும் மற்றொரு வழிமுறை இது என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ்:
இந்த அம்சம் கொண்டு ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஸ்வைப் அப் செய்து அதிகபட்சம் எட்டு எமோஜிக்களை பயன்படுத்தி தங்களின் கருத்தை தெரிவிக்க முடியும். இது இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே செயல்படுகிறது.
ஸ்டேட்டஸ் ப்ரோஃபைல் ரிங்ஸ்:
சாட் லிஸ்ட், க்ரூப் பட்டியல் மற்றும் காண்டாக்ட்களில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பார்க்கும் வழிமுறையை இது எளிமையாக்கி விடும். குறிப்பிட்ட காண்டாக்ட் ஸ்டேட்டஸ் வைத்திருப்பின், அந்த பயனரின் ப்ரோஃபைல் படத்தை சுற்றி ரிங் ஒன்று காணப்படும். இதை கொண்டு அவர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
லின்க் பிரீவியூஸ்:
ஸ்டேட்டஸ்களில் ஒருவழியாக லின்க் பிரீவியூ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் எப்போது லின்க்-களை ஸ்டேட்டஸ் ஆக வைத்தாலும், அந்த லின்க்-இன் பிரீவியூ காண்பிக்கப்படும். இதை கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் குறிப்பிட்ட லின்க்-ஐ திறந்து பார்க்காமலேயே அந்த லின்க்-இல் எதுபோன்ற தரவு உள்ளது என்பதை சற்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைத்து விடும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.
Photo Courtesy: WABetaInfo
- வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்களின் தரம் கம்ப்ரெஸ் செய்வதால் குறைந்துவிடுகிறது.
- விரைவில், இந்த நிலை மாறி படங்களை அதன் ஒரிஜினல் தரத்தில் அனுப்பலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு விரைவில் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த வசதியை கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜினல் தரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். எதிர்கால அப்டேட்களில் இதுபோன்ற வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் தான், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இந்த வசதி வழங்கப்படுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற சோஷியல்-ஷேரிங் செயலிகளை எதிர்கொள்ளும் வகையில், வாட்ஸ்அப் புதிய வசதியை வழங்க இருக்கிறது. முதற்கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வெப் வெர்ஷன்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வசதியை கொண்டு பயனர்கள் புகைப்படங்களை அதன் ஒரிஜினல் ரெசல்யூஷனில் ஷேர் செய்ய முடியும்.

இவ்வாறு செய்வதால், புகைப்படங்களை அச்சடிக்க அனுப்பும் போதும் அதன் தரம் குறையாமல் இருக்கும். எனினும், அப்லோடு நேரத்தை குறைக்கவும், அதிக ஸ்பேஸ் எடுக்கப்படுவதை தவிர்க்கவும், தற்போது இருக்கும் கம்ப்ரெஸ்டு வெர்ஷன் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது. செயலியின் புதிய அப்டேட்களில் இந்த வசதி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.2.11 அப்டேட்டில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் ஏராளமான புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளை இந்த ஆண்டு வழங்க திட்டமிட்டு வருகிறது. டெலிகிராம், டிஸ்கார்டு மற்றும் சிக்னல் போன்ற போட்டி நிறுவன செயலிகளை எதிர்கொள்ளும் நோக்கில் வாட்ஸ்அப் புதிய வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
Photo Courtesy: WABetaInfo
- உலகம் முழுக்க தகவல் பரிமாற்றத்தில் ChatGPT பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ChatGPT பயனர்கள் கேள்விக்கு அசத்தலாக பதில் அளித்து வருகிறது.
வாட்ஸ்அப் உலகின் அதிக பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கும் போதிலும், பெரும்பாலானோர் டெக்ஸ்ட் செய்வதை அதிகம் விரும்புவதில்லை. இவ்வாறு டெக்ஸ்ட் செய்ய பிடிக்காதவர்களுக்கு ChatGPT இனி உதவும். வாட்ஸ்அப்-இல் பயனர்கள் கிட்ஹப் மூலம் ChatGPT பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப்-இல் கிட்ஹப் இண்டகிரேட் செய்த பின் ChatGPT வாட்ஸ்அப் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க துவங்கி விடும்.
ChatGPT-இன் உரையாடல் திறன், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பயனர் கேல்விகளுக்கு பதில் அளிப்பதில் கூகுள் செய்யாததை கூட ChatGPT செய்து அசத்துகிறது. இதே போன்று இந்த ஏஐ டூல் குறுந்தகவல்களை கையாளுகிறது. ChatGPT அளிக்கும் பதில்கள் மனிதர்கள் அனுப்புவதை போன்றே இருப்பதால், யார் பதில் அனுப்புகின்றனர் என்தை கண்டறிவது வித்தியாசமான விஷயம் ஆகும்.
வாட்ஸ்-இல் ChatGPT-ஐ இண்டகிரேட் செய்ய டேனியல் கிராஸ் எனும் டெவலப்பர் பைத்தான் ஸ்க்ரிப்ட்-ஐ உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்க்ரிப்ட் கொண்டு நண்பர்களுக்கு வாட்ஸ்அப்-இல் பதில் அனுப்ப ChatGPT-ஐ பயன்படுத்தலாம். பைத்தான் ஸ்க்ரிப்ட்-ஐ பயன்படுத்த பயனர்கள் வலைத்தளத்தில் தேவையான ஃபைல்கள் அடங்கிய language library-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
டவுன்லோட் செய்தபின் "WhatsApp-gpt-main" ஃபைலை திறந்து "server.py" டாக்குமெண்ட்-ஐ இயக்க வேண்டும். இவ்வாறு செய்த பின் வாட்ஸ்அப் செயலியில் ChatGPT செட்டப் செய்யப்பட்டு விடும். சர்வர் ரன் ஆகும் போது "Is" என டைப் செய்து எண்டர் க்ளிக் செய்து, "python.server.py"-யை க்ளிக் செய்ய வேண்டும்.
இது பயனரின் மொபைல் நம்பரை OpenAI சாட் பக்கத்தில் செட்டப் செய்து விடும். இதைத் தொடர்ந்து பயனர் தான் மனிதன் என்பதை உறுதிப்படுத்த "Confirm I am a human" பாக்ஸ்-ஐ க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின், வாட்ஸ்அப் அக்கவுண்டில் OpenAI ChatGPT இடம்பெற்று இருப்பதை பார்க்கலாம். இனி ChatGPT மூலம் சாட் செய்ய துவங்கலாம்.
- கடந்த ஜனவரியில் 29 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
- முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10.38 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. மாதம் தோறும் பயனாளர் பாதுகாப்பு அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
மத்திய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் கூடுதலான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், ஒவ்வொரு மாதமும் தங்களது பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கையாக வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரையில் 29 லட்சத்து 18 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், பயனாளர்களிடம் இருந்து எந்தவித புகார்களும் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அதனை பெற்றுக்கொண்டு எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கை, சமூக தளம் தவறாக பயன்படுத்தப்படாமல் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கை கொண்டிருக்கும்.