என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild elephants"

    • வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
    • 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் சுற்றி திரிவது வழக்கம்.

    இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையொட்டிய வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    அவ்வப்போது இந்த யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே சாலைகளில் செல்லும் போதும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையும் அறிவுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று, 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன. அப்போது வாகனங்களின் சப்தத்தை கேட்டதாலும், அதிக மக்கள் இருந்ததாலும் யானைகள் ஓட்டம் பிடிக்க துவங்கின.

    இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு சிலா் அதிக கூச்சலிட்டு யானைகளை புகைப்படம் எடுத்தனா். இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. உப்பட்டியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் அம்ரூஸ்வளைவு அருகே குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. சாலையில் நடந்து சென்றதோடு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

    மேலும் அருகே தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் ஊருக்குள் நுழையாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில மாதங்களாக உலவி வருகிறது. இந்நிலையில் கூடலூர் உதகை நெடுஞ்சாலையில் மேல் கூடலூர் பகுதியில் 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. சில மணி நேரங்களுக்குப் பிறகு யானைகள் தானாகவே சாலையை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் சென்றன. இதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அருகில் சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    • நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.

    கூடலூர்,

    முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 2 காட்டு யானைகள் வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பசுந்தீவனங்களை காட்டு யானைகள் தின்றது. சிறிது நேரத்தில் சாலையில் நின்றவாறு காட்டு யானைகள் விளையாடியது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் இருந்தவாறு கண்டு ரசித்தனர். மேலும் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, சாதாரணமாக சாலையோரம் வனவிலங்குகள் நடந்து செல்லும். ஆனால், திடீரென காட்டு யானைகள் நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.

    • காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன.
    • நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன.

    வனத்தில் இருந்து சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், குரங்கு, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளைநிலங்களில் ஊடுருவி வருகின்றன.

    லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம். லிங்காபுரம்-காந்தவயல் இடையேயுள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் காந்தவயல், உலியூர், மேலூர், ஆளுர் ஆகிய கிராம மக்கள் போக்குவரத்திற்கு பரிசல், மோட்டார் படகில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை லிங்காபுரத்தில் இருந்து பரிசல் செல்லும் இடத்திற்கு செல்லும் சாலையில் 2 காட்டுயானைகள் நடமாடி வந்தன. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் காட்டுயானைகள் வனப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. லிங்காபுரம்-காந்தவயல் சாலையின் இடையே காட்டுயானைகள் நடமாடி வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  

    • வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
    • வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.

    அப்பகுதியிலேயே சில நாள்கள் சுற்றித்திரிந்த யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றன.

    இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள்ரோடு, ரன்னிமேடு இடையே உள்ள தேயிலை தோட்டம், சோலைப் பகுதிகளில் பல்வேறு விதமான பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக அப்பகுதியில் 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகள் சாலைக்கு வராமல் தடுக்க 6 போ் கொண்ட வன ஊழியா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

    இந்நிலையில் நேற்று இரவு ரன்னிமேடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழைகளை சேதப்படுத்தி உள்ளது.

    டபுள் ரோடு அருகே முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்தும், தகரங்களை தட்டியும் விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வருடந்தோறும் உணவு தேடி நீலகிரி மாவட்டம் பகுதிக்கு வருவது வழக்கம் தான்.

    இருப்பினும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்

    • தேயிலை பறிக்க தொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளனர்.
    • பெண் யானை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது.

    வால்பாறை,

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் வால்பாறையில் வனப்பகுதி செழிப்பாக உள்ளது. அதே நேரம் சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால், கேரள வனப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் மளுக்குப்பாறை வனப்பகுதி வழியாக வால்பாறைக்கு இடம் பெயர்ந்து வரத் தொடங்கி உள்ளன.இந்த யானைகள் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

    யானை கூட்டத்தில் ஒரு பகுதி யானை கூட்டம் தாய் மூடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது. அதில் பெண் யானை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது.

    இந்த யானை சுற்றிலும் பிற யானைகள் அரணாக நின்று, பாதுகாப்பளித்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.இதற்கிடையே அந்த வழித்தடத்தில் செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    தாய்மூடி எஸ்டேட் பகுதியில் ஒரு யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. அதில் பெண் யானை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது. பிறந்து சில நாட்களே ஆன குட்டியை பாதுகாக்க யானை கூட்டம் தேயிலை காட்டில் முகாமிட்டுள்ளது.

    எனவே யானை கூட்டம் முகாமிட்டுள்ள பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்லக்கூடாது.

    மேலும் அந்த வழித்தடத்தில் செல்லும் மக்கள் மிக கவனமாக செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.
    • தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் டபுள் ரோடு, ரன்னிமேடு வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த மாதம் 16-ந் தேதி வந்தது.

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் உலிக்கல், சின்னக்கரும்பாலம், கிளன்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி மாறி முகாமிட்டு வருகின்றன.

    இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.

    யானைகளுக்கு பயந்து பெரும்பாலான தேயிலை தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனா்.

    தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் மக்களும் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

    இந்த யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடாமலும், சாலை பகுதிகளுக்குள் வந்துவிடாமலும் தடுப்பதற்காக வனத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

    தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    • 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.
    • தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

    குன்னூர்,

    குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் கடந்த 30 நாட்களாக சமவெளி பகுதிகளில் இருந்து வந்த 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. அவை தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பிலும் உலா வந்தன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்தநிலையில் குன்னூர் நான்சச் தொழிலாளர்கள் குடியிருப்பை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளை பக்காசூரன் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், காட்டு யானைகள் மீண்டும் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    • பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் உள்ளது தோலம்பாளையம் புதூர் கிராமம்.

    இந்த கிராமமானது அடர்ந்த வனத்தையொட்டி உள்ளது. இங்குள்ள மக்கள் தென்னை, வாழை உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    அடர்ந்த வனப்பகுதியையொட்டி இருப்பதால் வனத்தை விட்டு வனவிலங்குகள் வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் 5 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வந்தன. வெகுநேரமாக அங்கு சுற்றிய யானைகள் அந்த பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜூவின் தோட்டத்திற்குள் புகுந்தது.

    10 மணிக்கு புகுந்த யானைகள் கூட்டம் அதிகாலை 5 மணி வரை அங்கேயே நின்றது. அப்போது யானைகள் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது.

    தொடர்ந்து யானைகள் இதுபோன்ற அட்டகாகத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்னை மரங்களை சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேதோட்டத்தில் புகுந்த யானைகள் கூட்டம் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
    • வனத்திற்குள் செல்லாமல் அடம் பிடித்து நின்றது.

    வடவள்ளி

    கோவை தொண்டா முத்தூர் அருகே தாளியூர் பகுதியில் இன்று அதிகாலையில் குட்டிகளுடன் 5 யானைக்கூ ட்டங்கள் வனத்தை விட்டு வெளியே வந்தது. இதனையடுத்து யானைக்கூட்டங்கள் முடுவு வனப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்கு புகுந்தது.

    மேலும் தாளியூர் பள்ளம் வழியாக கருப்பராயன் கோவில் வரை யானை கூட்டம் முகாமிட்டு நின்றது. யானை கூட்டத்தின் சத்தம் கேட்டு அந்த வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் சிலர் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 1 மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை சுடுகாட்டு பள்ளம் வழியாக துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேர போராட்டத்திற்க்கு பிறகு யானை கூட்டத்தை வனத்துறையினர் விரட்டினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டத்தை வனத்திற்கு விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் அடம் பிடித்து நின்றது. யானை கூட்டத்தை கண்ட ஊர் பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் புகை படம் மற்றும் வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

    மேலும் அட்டுகள் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக அங்குள்ள ஜெயபிரகாஷ் தோட்டம், ஓவியக் கல்லூரி ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர்.
    • விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 14-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஏற்கனவே 4 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், தற்போது குட்டிகளுடன் மேலும் யானைகள் வந்துள்ளன. இதனால் அப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதிகாலை நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடும்.

    இந்நிலையில் இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து, நாயக்கனபள்ளி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைகள் சென்றன.

    அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி, ஆழியாளம் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாய பயிர்கள் சேதப்படுத்தியுள்ளன. இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஊழியர்கள், பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சானமாவு வனப்பகுதியில் சுமார் 60 யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளன. அதனால் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனால் விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம். வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆழியாளம் உள்பட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
    • யானை நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்புக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளது.

    இந்நிலையில் கோழிக்கரை பழங்குடியின கிராமம் வழியாக செல்லும் சாலையை மேல்கூப்பு, கீழ்கூப்பு, செம்மநாரை, வாகப்பனை, அட்டடி, கோழித்தொரை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களாக இந்தசாலையை ஓட்டிய தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகா மிட்டுள்ளன. அவ்வப்போது குடியிருப்பையொட்டிய பகுதிகளுக்குள்ளும் வந்து செல்கிறது.

    இதனால் இந்த கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.

    எனவே வனத்துறையினர் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்க்கொண்டு காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×