search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wine"

    • து அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.
    • ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது.

    உலகெங்கிலும் உள்ள மது பிரியர்களுக்கு விருப்பப்படும் பானமாக ஒயின் உள்ளது. மது அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான எமிலி ரே என்ற மாடல் தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால செய்யப்பட்ட ஒயின் சுவையை பலர் விரும்புவதாகக் கூறியுள்ளார். எமிலி கால் மாடலாக புகழ் பெற்றவர். எமிலி வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி அதில் மது மது தயாரிக்கிறார். சொந்தமாக ஒரு ஒயின் பிராண்டை ஆரம்பித்து அதற்கு சிம்ப் ஒயின் என்றும் பெயரிட்டுள்ளார்.

     இந்நிலையில் கூட்டு ஒயின் திட்டத்திற்காக ரெனிகேட் அர்பன் வைனரி என்ற லண்டனை தளத்தை ஒயின் தயாரிக்கும் மாடல் எமிலி தொடர்பு கொண்டார். அவர் சமீபத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மதுவை அறிமுகத்தியுள்ளார். திராட்சைகளை தனது கால்களால் நசுக்கி தயாரிக்கப்படுகிறது. அந்த ஒயின் ஒரு பாட்டிலின் விலை சுமார் 100 பவுண்டுகள் (தோராயமாக ரூ. 10,662). என்று தெரிவித்துள்ளார்.

    "ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது, அதைத்தான் கால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

    • இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது
    • இந்நிலையில் விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்

    தற்பொழுது விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார்.விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து இருக்கிறார். பரத் தனசேகர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ரோமியோ படத்தின் ட்ரெயிலரில் வரக்கூடிய ஒரு காட்சியை குறிப்பிட்டு ஏன் அந்த முதலிரவு காட்சியில் மது குடித்தீர்கள் என செய்தியாளர் கேள்வி கேட்டார்.

    அதற்கு விஜய் ஆண்டனி " மது என்பதில் ஆண், பெண் என வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று. முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்து வந்துள்ளது. அது காலத்திற்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொண்டது. சாராயம் என்ற பெயரில் முன் குடித்துக் கொண்டு இருந்தோம் இப்பொழுது கம்பனி பெயர்களால் உபயோகிக்கிறோம்.

     இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பொது மன்னிப்பு கேட்காவிட்டால் விஜய் ஆண்டனி வீட்டிற்கு முன்னால் ஆர்பாட்டம் நட்த்துவோம் என அறிக்கை வெளியிட்டனர்.

    இந்நிலையில் விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அன்பார்ந்த கிறிஸ்துவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே. திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான்.தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார். என்று கூறி இருந்தேன்.

    ஒரு பத்திரிக்கயாளர் நண்பர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதை , நான் பேசியதை இணைத்து தவராக அர்த்தப்படுத்தியதால் அது தவறாக எண்ணி உங்களைப் போல சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு, அப்பாற்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது. என மனமார்ந்த மன்னிப்பை தெரிவித்து இருக்கிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார், மிருணாளினி கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
    • ஆதாரம் இல்லாமல் இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை போதை வஸ்த்துவிற்காக பயன்படுத்தினார் என்று எப்படி கூறலாம்

    இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், , பாடலாசிரியரென பன்முகத்தன்மையுடைவர் விஜய் ஆண்டனி. 'நான்' என்ற படத்தில் கதாநாயகனாக திரையுலகப் பயணத்தை துவக்கினார். 'நான்' படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும் , புகழையும் அவருக்கு பெற்றுக் கொடுத்தது.

    2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் 'பிச்சைக்காரன்' படத்தில் நடித்தார். இத்திரைபடம் வசூலில் மிரட்டியது. பட்டித்தொட்டி எங்கும் 'பிச்சைக்காரன்' படம் சேர்ந்தது. விஜய் ஆண்டனி திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக பிச்சைக்காரன் இருக்கும் எனலாம். 

    தற்பொழுது விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார்/ மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார்.விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து இருக்கிறார். பரத் தனசேகர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  ரோமியோ படத்தின் ட்ரெயிலரில் வரக்கூடிய ஒரு காட்சியை குறிப்பிட்டு ஏன் அந்த முதலிரவு காட்சியில் மது குடித்தீர்கள் என செய்தியாளர் கேள்வி கேட்டார்.

    அதற்கு விஜய் ஆண்டனி " மது என்பதில் ஆண், பெண் என வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று. முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்து வந்துள்ளது. அது காலத்திற்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொண்டது. சாராயம் என்ற பெயரில் முன் குடித்துக் கொண்டு இருந்தோம் இப்பொழுது கம்பனி பெயர்களால் உபயோகிக்கிறோம்.

    புராணத்தில் இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார். ராஜ ராஜ சோழன் காலத்தில் சோமபானம் குடித்து கொண்டு இருந்தார்கள் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இயேசு கிறிஸ்துவையும், கிறிஸ்துவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார். அதனால் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரின் வீட்டிற்கு முன்பு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிக்கை விட்டுள்ளனர்.



     




     


    • இந்திய மதுபான வர்த்தக சந்தை 33 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடையது
    • அம்ருத் விஸ்கி 183 சதவீதம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது

    மதுபான வகைகளில் உலகளவில் பெரும்பாலான ஆசிய நாடுகளில் பீர் விரும்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் வைன் சுவைப்பதையே அதிகளவில் மதுப்பிரியர்கள் விரும்புகின்றனர்.

    ஆனால், இந்தியர்கள் விஸ்கி பிரியர்கள்.

    மதுபான வர்த்தகத்தில் $33 பில்லியன் மதிப்புடைய சந்தையாக அதிக விஸ்கி சுவைப்பவர்கள் நாடாக இருந்த இந்தியா தற்போது அதிகளவில் விஸ்கி தயாரிக்கும் நாடாக உருவெடுத்துள்ளது.

    இந்திய தலைநகர் புது டெல்லியை சேர்ந்த பிக்காடிலி வடிசாலையில் (Piccadily distillery) தயாராகும் சிங்கிள் மால்ட் வகை "இண்ட்ரி" (Indri) விஸ்கி, உலகிலேயே சிறந்த விஸ்கி என முதலிடத்தை பிடித்துள்ளது.

    உலகளவில் முன்னணியில் உள்ள பிரான்சின் பெர்னாட் ரிகார்ட் (Pernod Ricard) நிறுவனத்தின் க்ளென்லிவெட் (Glenlivet), இங்கிலாந்தின் டியாஜியோ (Diageo) நிறுவனத்தின் டாலிஸ்கர் (Talisker) ஆகிய மதுபான வகைகள் இந்தியாவின் இண்ட்ரி, அம்ருத் (Amrut) மற்றும் ராம்புர் (Rampur) போன்ற உள்ளூர் விஸ்கி மதுவகைகளுடன் போட்டி போட முடியாமல் திணறுகின்றன.

    தங்கள் உபயோகத்திற்கும், கேளிக்கை விருந்து பரிமாற்றங்கள் மற்றும் பிறருக்கு பரிசளிக்கவும் பெரும்பாலான இந்தியர்கள், இந்த உள்ளூர் தயாரிப்புகளையே விரும்ப தொடங்கி உள்ளனர்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உலகின் தலைசிறந்த விஸ்கிகளுக்கான பரிசு (Whiskies of the World) போட்டியில், ஸ்காட்லேண்டு மற்றும் அமெரிக்காவின் பல பிராண்டுகளை பின்னுக்கு தள்ளி "பெஸ்ட் இன் ஷோ" (Best in Show) பரிசை இண்ட்ரி (தீபாவளி எடிஷன்) வென்று முதலிடம் பிடித்தது.

    விற்பனையில் முன்னணியில் இருந்த க்ளென்லிவெட், இந்திய பிராண்டான அம்ருத் விஸ்கியின் 183 சதவீத வளர்ச்சியால் சரிவை சந்தித்திருக்கிறது.

    வரும் 2025 காலகட்டத்தில் பிக்காடிலி நிறுவனம் தனது உற்பத்தியை 66 சதவீதம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் சித்தார்த்த ஷர்மா தெரிவித்தார்.

    விற்பனையில் முன்னணியில் உள்ள இந்த மது தயாரிப்பு நிறுவனங்கள் விலையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு பாட்டில் இண்ட்ரி $37, அம்ருத் $42 மற்றும் ராம்புர் $66 என அயல்நாட்டு மதுபானங்களுக்கு ஈடாக விற்பனை ஆகிறது.

    • மதுவை ஒழிக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி விடுத்துள்ளார்.
    • நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழல் ஒழிப்பு யுத்தம் குறித்த பொதுக் கூட்டம் நடந்தது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சிபுரிந்து வரும் தி.மு.க. கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வரப்படும் என வாக்குறுதி களை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது. மேலும் மதுவால் தமிழகமே தள்ளாடுகிறது. ஒரு புறத்தில் டாஸ்மாக்கை அடைத்து விட்டு மறுபுறம் திறக்கப் பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகும் மதுவை ஒழிக்க தயங்குவது ஏன்?. நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.

    அப்போது மீண்டும் தி.மு.க.வினர் வாக்குகள் கேட்டு உங்களி டம் வரும்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையான மதுவிலக்கு குறித்து பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

    மது ஒழிப்பு பிரச்சினை யில் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக் கும் சேர்த்தே புதிய தமிழகம் போராடுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடையை வருகிற அக்டோபர் 2-ந் தேதிக்குள் மூட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×