search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "winner"

    • நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன்.
    • வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர்".

    பிரபல இயக்குனர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், உன்னை தேடி, அன்பே சிவம், வின்னர், கிரி, கலகலப்பு, தீய வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பல, அரண்மனை 2, ஆக்ஷன் , கலகலப்பு 2, உள்ளிட்டவை அவரது குறிப்பிடத்தக்க படங்களாகும்.

    நகைச்சுவையாக படங்கள் இயக்கி ரசிகர்கள் மனங்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்கிய 'அரண்மனை 4' படம் விரைவில் வெளியாக உள்ளது.




    இந்த நிலையில், 'அரண்மனை 4' படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் சுந்தர் .சி பேசியதாவது :-

    ஒரு தயாரிப்பாளர் என்னை ஒரு படம் பண்ணலாம் என அழைத்தார். அப்போது ஹிட்டான தெலுங்கு திரைப்படங்களை 'ரீமேக்' செய்யலாம் என கூறினார். நானும் அந்த தெலுங்கு படத்தை பார்த்தேன். அப்படத்தை பார்த்த போது நான் அதிர்ச்சியடைந்தேன். அதில் என்னுடைய 3 படங்களை காப்பியடித்து அந்த தெலுங்கு படம் எடுக்கப்பட்டுள்ளது.




    "என்னுடைய படங்களை உரிமம் வாங்காமல் 'காப்பி' அடித்து தெலுங்கில் படம் எடுத்தார்கள். அதற்கு பழி தீர்க்கும் வகையில் 4 படங்களை காப்பி அடித்து உருவாக்கிய படம்தான் 'வின்னர்'.

    வின்னர்' படத்தில் கதாநாயகி ஆபத்தில் இருப்பது போல் கத்தியவுடன், காப்பாற்ற நடிகர் பிரஷாந்த் ஓடி வருவார். அப்போது குறுக்கே வடிவேலு 'வந்துட்டேன்' என கத்திகொண்டே ஓடி வந்து அந்த கோலிக்குண்டுகள் இருக்கும் மேட் மீது கால் வைத்து, ஒரு பந்து போல் அங்கும் இங்கும் அடிவாங்கி கீழே விழுவார். இப்படி தான் அந்த காட்சியை நான் மாற்றி அமைத்திருந்தேன்".




    இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பிறகு, சில நாட்கள் கழித்து நான் ஒரு தெலுங்கு படத்தின் காட்சியை பார்த்தேன். அந்த தெலுங்கு படத்தில் 'வின்னர்' படத்தில் வடிவேலு வழுக்கி விழும் காட்சியை அப்படியே காப்பியடித்து வைத்து இருந்தனர்".

    நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன். இது தெரியாமல், வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர்".என தெரிவித்தார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாணவிகளுக்கு பாராட்டு

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்பள்ளிகள்) அந்தோணி அறிவிப்பின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார்பள்ளிகளுக்கு இடையேயான ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி கே. ராகவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவி கே. ராகவியை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்அந்தோணி பாராட்டி சான்றிதழும் சுழற்கோப்பையும் வழங்கி வாழ்த்தினர்.திறனறி தேர்வில் முதலிடம் பெற்று பள்ளி வந்த மாணவியை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, பள்ளி ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, துணை முதல்வர்குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் சித்திரை செல்வி, ரவிக்குமார் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தொடங்கிவைத்தார்.
    • போட்டிகளுக்கு இடையே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69- வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்தியஅளவிலான ஆண்கள், பெண்கள் அணியினர் மின்னொளி கபடி போட்டி 11-ம் தேதி தொடங்கியது.

    நேற்று இரவு 3-வது நாளாக நடந்த ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார்.

    ஆண்கள் பிரிவில் மராட்டிய அணியும், எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக அணியும் விளையாடியது. இதில் மராட்டிய அணி 28 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எஸ்.ஆர்.எம்.அணி 26 புள்ளிகள் பெற்றது.

    மற்றொரு ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் டெல்லி சி.ஆர்.பி.எப். அணியும், குஜராத் இன்கம்டேக்ஸ் அணியும் விளையாடியது. இதில் டெல்லி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. குஜராத் அணி 22 புள்ளிகள் எடுத்தது.போட்டிகள் இன்று அதிகாலை வரை நடந்தது.

    பல்வேறு ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவினர் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகளுக்கு இடையே நடனம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ராமச்சந்திரன், வி.எஸ்.ஆர்.சுபாஷ்.நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
    • பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப்படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ முதல் பரிசினையும், ராஜன் கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி சஞ்சிதா இரண்டாம் பரிசினையும், திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விசுவநாதன் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

    நிகழ்ச்சிக்கு ஆஸ்பயர் அகாடமியின் நிறுவனர் பரணிதரன் தலைமை தாங்கினார். நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார். நாளை அமைப்பின்ஒருங்கி ணைப்பாளர் செகுரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.

    • கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் அறிவுறுத்தலின்படி நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் தலைமை தாங்கினார்.

    விழாவில் தென்பழஞ்சி பகுதி முழுவதும் பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு கோலம் போட்டனர். இதில் காயத்ரி என்பவர் முதல் பரிசான பிரிட்ஜை வென்றார். 2-ம் பரிசாக வாஷிங்மெஷினை அருணா பெற்றார். நதியா என்பவர் 3-ம் பரிசாக மிக்ஸியும், மகாலட்சுமி என்பவர் 4-ம் பரிசான கிரைண்டரையும் பெற்றனர்.

    மேலும் சிறப்பாக கோலம் போட்ட 8 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குக்கர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 2 பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் நான்ஸ்டிக் தவா வழங்கப்பட்டது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான தென்பழஞ்சி சுரேஷ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் விமல் முன்னிலை வகித்தார்.

    தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கிளைசெயலாளர்கள் பரிதி, கருப்பையா, போதுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • படுக்கப்பத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது
    • 16 அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடின.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து சன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு தரப்பிலிருந்து 16 அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடின.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற அணிக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் சார்பில் வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரத்தை சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி வழங்கினார். பரிசுகள் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    இதில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப் பட்டன.

    நிகழ்ச்சியில் படுக்கப் பத்து பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி சரவணன், தொழிலதிபர் ராமநாதன் ஆதித்தன், கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் உள்பட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அனைத்து சமூகத்தினர் பொதுநல அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். கொடுங்கையூர் குப்பைமேடு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு படுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து வருவதால் நவீன தொழில் நுட்பத்தில் குப்பை மேட்டை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.

    பல மைல் துரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் குப்பைமேடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேம்படுத்த அனைத்து முயற்சிகலும் மேற்கொள்ளப்படும் என்றார். வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டிய வெற்றிவேலுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019

    பெரம்பூர் தொகுதி அமமுக வேட்பாளர் பி.வெற்றிவேல் தான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். #LokSabhaElections2019 #AMMK

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். வியாசர்பாடி கக்கன்ஜி நகர் பகுதியில் வீதி வீதியாக வழியாக நடந்து சென்று பரிசு பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

    பெரம்பூர் தொகுதி மக்கள் பாதுகாப்பாக வசிக்க முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத செயல்களில் இருந்து பாதுகாக்கவும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் இருந்து தப்பிக்கவும் மேரகாக்கள் பொருத்தப்படும். பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்று தரப்படும், பாதுகாப்பான குடிநீர், சாலை வசதி அமைத்து தருவதோடு, கழிவு நீரில் இருந்து கொசுக்கள் பெருகி நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் உறுதியளித்தார்.

    வேட்பாளருடன் நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன், மாரிமுத்து உள்ளிட்ட தொண்டர்கள், பெண்கள் அணிவகுத்து சென்றனர். #LokSabhaElections2019 #AMMK

    மாணவப் பருவத்தில் இருந்தே விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகிவிட்டால் வாழ்வில் வெற்றிகள் குவியும். விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியாளராவது எப்படி? என்று பார்ப்போம்...
    யாராவது நம்மை ஏதாவது சொல்லிவிட்டால் `நான் யார் தெரியுமா?’ என்று எகிறுகிறீர்களா, அல்லது “நம்மைப் போய் இப்படிச் சொல்லி விட்டார்களே என்று முடங்கிவிடுகிறீர்களா?” இரண்டுமே விமர்சனங்களை எதிர்கொள்ளும் சரியான அணுகுமுறையல்ல. மாணவப் பருவத்தில் இருந்தே விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகிவிட்டால் வாழ்வில் வெற்றிகள் குவியும். விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியாளராவது எப்படி? என்று பார்ப்போம்...

    மாணவப் பருவம் இனிமையானது. அப்போது கிடைக்கும் பாராட்டுகளும், மகிழ்ச்சியான அனுபவங்களும் வாழ்க்கை முழுவதும் உந்துசக்தி வழங்கக்கூடியது. மலரும் நினைவு களாக எதிரொலிக்கக் கூடியது. அதுபோலவே எதிர்மறையான கேலிகளும், கிண்டலும், மனதை காயப்படுத்தும் விஷயங்களும்கூட வாழ்க்கை முழுவதும் மனதில் வடுவாகப் பதிந்துவிடும். மோசமான விமர்சனங்கள் பலரை வாழ்வில் செயல்பட விடாமலேயே தடுத்திருக்கிறது.

    சக மாணவர்கள், வேடிக்கையாய் செய்யும் விமர்சனங்கள் உங்களை காயப்படுத்துகிறதா? உங்கள் உடையைப் பற்றியும், உருவத்தைப் பற்றியும் அவர்கள் பேசுவது மனதுக்கு சங்கடமாக இருக்கிறதா? ஒரு விஷயம் தெரியாமல் இருக்கும்போது, ‘உனக்கு இது கூட தெரியாதா?’ என்று ஆசிரியரும், மற்றவர்களும் கிண்டல் செய்கிறார்களா?

    தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகப் பெற்றதையோ, பதில்சொல்லும்போதும், எழுதும்போதும் நடந்த தவறுகளை ஆசிரியர்கள் கேலியாக சுட்டிக் காட்டுகிறாரா? மற்ற மாணவ- மாணவிகளுக்கு முன்பு உங்களை அப்படிச் சொல்லியது அவமானமாக தெரிகிறதா?

    இவர்கள்தான் இப்படியென்றால், வீட்டில் பெற்றோரும், மற்றவர்களின் கருத்தை ஆமோதிப்பதுபோல உங்களை மட்டம் தட்டி பேசி, வருத்தப்பட வைக்கிறார்களா? எல்லோரது விமர்சனத்துக்கும் விடையாய் அமைகிறது ஒரு தமிழ் பழமொழி. “வைவார்க்கு இன்பம் இல்லை; பொறுத்தார்க்குத் துன்பம் இல்லை”.

    அவர்களின் விமர்சனத்தில், கருத்துகளில் அர்த்தம் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் தவறுகளை திருத்தி முன்னேற்றம் காணுங்கள். பொருளற்ற விமர்சனங்களால், கேலி கிண்டல்களால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தற்காலிகமானது. அது உங்களின் முன்னேற்றத்தால், நீங்கள் பெற்ற சிறப்பால் அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அது போன்றவர்களின் கேலிகளை அலட்சியம் செய்துவிடுங்கள். அவர்களுக்கு பதில்களால் பதிலடி கொடுக்காமல், முன்னேற்றத்தால் அவர்களிடம் மனம் மாற்றம் ஏற்படச் செய்யுங்கள். ‘வைய வைய வைரக்கல், திட்டத் திட்ட திண்டுக்கல்’ என்னும் பொன்மொழிக்கேற்ப உங்கள் மனதை திடமான வைரமாக வைத்திருந்து ஜொலியுங்கள்.

    உடல் அமைப்பு, ஆடைத் தோற்றம், பெற்றோரின் நிலை போன்ற பல காரணங்களுக்காக உங்களை பட்டப்பெயர் சூட்டி அழைப்பது சிலருக்கு வேடிக்கையாக தோன்றலாம். அதற்காக நீங்கள் கலங்க வேண்டியதில்லை. அவர்களே இன்னும் பண்பட வேண்டியவர்களாவார்கள். அப்படி பேசுபவர்களிடம் எதிர்த்து விவாதிக்க வேண்டாம். சிறு புன்னகையுடன் அலட்சியமாக கடந்துபோனாலே அவர்கள் சோர்வடைந்து போவார்கள்.

    பள்ளிப்பருவத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதுமே இதுபோன்ற விமர்சனங்கள், எதிர் கருத்துகளை எதிர்கொள்ளப் பழக வேண்டும். சொல்லப்போனால், அர்த்தமுள்ள சமூக வாழ்க்கையின் அடித்தளமே எதிர்க்கருத்துதான். சரியோ தவறோ, எதுவாக இருந்தாலும் ஒன்றைப் பற்றிய பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும்.

    உங்களைப் பற்றிய விமர்சனங்கள்தான் உங்கள் செயல்களின் அறுவடை. வெறும் பாராட்டுகளால் மட்டும் திருப்தி அடைபவர்களைவிட, விமர்சனத்தை சரியாக எதிர்கொண்டவர்கள், தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டவர்கள் என்றும் வெற்றியாளர்களாக நிலைப்பார்கள். எனவே பாராட்டுகளில் மயங்க வேண்டாம், விமர் சனங்களால் முடங்க வேண்டாம்.

    நம்மை யாராவது விமர்சனம் செய்யும்போது அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். உண்மையிலேயே நம் மீது தவறு இருந்து, அதை ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தால் அதைக் களைய முன் வரவேண்டும். இது இறங்கி வருவதல்ல; வளர்ச்சிப் பாதையில் மேலே மேலே போவதற்கான வழி.

    ஒரு நேர்மையான விமர்சகர், தனிநபர் தாக்குதலில் இறங்க மாட்டார்; அவருடைய விமர்சனம் ஒருவரின் திறமையை அடையாளம் காட்டுவதாக இருக்கும். ஆசிரியர்களின் விமர்சனங்களை இந்த வகையில் சேருங்கள். விளையாட்டாய் விமர்சிப்பவர்கள் மாறிவிடுவார்கள். நண்பர்களின் கேலிகளை இந்த வகையில் சேருங்கள். போட்டியாளர்களும், எதிராளிகளும் தீய எண்ணத்துடன் விமர்சித்து சீண்டிப் பார்ப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள், உங்கள் வளர்ச்சியினால் பொசுங்கிப் போவார்கள். ஆனால் அதற்கு, அவர்களின் வார்த்தைப் பொறியில் சிக்கி நீங்கள் வாடி, முடங்கிப்போகாமல் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் வெற்றி ரகசியம்!
    அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
    கரூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டப்பிரிவின் சார்பில் முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கரூர் தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை கரூர் மாவட்ட கல்வி அதிகாரி கனகராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. 10, 15, 20 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

    போட்டிகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் ஆர்வத்துடன் இலக்கை நோக்கி சென்றனர்.இந்த போட்டிகளில் மொத்தம் 78 மாணவர்களும், 62 மாணவிகளும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி செய்திருந்தார். 
    ×