search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woe"

    • அன்னவாசல் பகுதியில் குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
    • கூண்டு வைத்து பிடிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் பகுதிகளில் உள்ள புதுத்தெரு 1, 2, 3-ம்வீதி, கோல்டன் நகர், இஸ்மாயில் நகர், குறிஞ்சி நகர், உப்புகாரத்தெரு, பள்ளிவாசல் தெரு, பழைய கடைவீதி உள்ளிட்ட குடியிருப்புகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக உணவு பொருட்களுடன் செல்லும் சிறுவர்களை குரங்குகள் விரட்டி சென்று உணவு பொருட்களை பிடுங்கி விடுகின்றன. மேலும், வீட்டின் உள்ளே புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்கிறது. காய்கறிகள், துணிகளை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பையை ஏற்றி சென்று கொட்டி விட்டு உணவு பொருட்களை எடுத்து வந்த அவலம்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    திருச்சி, 

    தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற போதிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எக்காரணத்தை கொண்டும் அம்மா உணவகங்கள் மூடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உணவருந்தி பசியாறி வருகிறார்கள். இந்த அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்டவை அங்குள்ள மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரப்படுகிறது.இந்த நிலையில் நேற்று நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் எடுத்து சென்றனர். பின்னர் அதனை குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு மீண்டும் வரும் வழியில் அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை அதே குப்பை சேகரிக்கும் வாகனத்தில் எடுத்து வந்தனர். அம்மா உணவகத்தில் அதே துப்புரவு பணியாளர்கள் இறக்கி வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அம்மா உணவகத்திற்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள் சற்றும் சுகாதாரமற்ற முறையில் எடுத்து வரப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை.
    • இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவலம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பெருங்குடி ஊராட்சியில் கடந்த 80 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை உள்ளது.

    இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்தவர் உடலை மழையால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக உள்ள தால் இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கிராமமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராமமக்கள் கூறுகின்றனர்.

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தெப்பகுளத்தில் குப்பைகளை வீசுவதால் மாசு ஏற்படும் அவல நிலையில் உள்ளது.
    • வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் குளத்தை சரிவர பராமரிப்பு செய்து மாசடைந்த நீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமானது பாடலீஸ்வரர் கோவில். இந்த புகழ் மிக்க பாடலீஸ்வரர் தளத்தில் தான் இறைவி தவம் செய்து தன் மணவாளனை கரம்பற்றிய தலம் இத்தலமாகும். மேலும் இந்த கோவிலின் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தான் சிவன் சித்தராக இருந்து விளையாடினார். மேலும் இந்த குளம் சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. மேலும் இந்த குளத்தில் தான் புலிக்கால் முனிவர் அப்பர் அகத்தியர் வியாக்ரபாதத் மன்க்கானமுனிவர் உபமன்னியர் ஆதிராசன் ஆகியோர்களால் பூஜித்து பேரு பெற்ற தலமாகும். அப்படிப்பட்ட இந்தப் பாடலீஸ்வரர் புனித குளம் தற்போது தண்ணீர் படிப்படியாக குறைந்து குளத்தை சரிவர பராமரிக்காமல் குளத்திற்குள் ஆங்காங்கே குப்பைகள் கிடக்கிறது. மேலும் இந்த குளத்தி ல் உள்ள தண்ணீரை சரிவர பராமரிக்காமல் குளம் முழுவதும் மாசு அடைந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

    இதனால் இந்த குளத்தில் உள்ள மீன்களுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் பிஸ்கட் பொறி போன்றவற்றை அப்படியே பிஸ்கட் கவருடன் வீசுகிறார்கள். இதனால் குளம் முழுவதும் மாசடைந்து வருகிறது. மேலும் மக்காத பிளாஸ்டிக் தாள்களையும் குலத்திற்குள் போடுவதால் குளம் முழுவதும் மாசடைந்து துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குளத்தில் வாழும் மீன்கள் அழியும் வகையில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற 1008 சிவதலங்களில் ஒன்றான பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள குளம் மாசடைந்து வருவது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மன வேதனையை ஏற்படுத்துகிறது.

    எனவே உயர் அதிகாரிகள் இதில் கவனத்தை செலுத்தி வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் குளத்தை சரிவர பராமரிப்பு செய்து மாசடைந்த நீரை அப்புறப்படுத்த வேண்டும். தற்போது மழை இல்லாத காரணத்தால் மோட்டார் மூலம் நல்ல நீரை குளத்தில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.

    ×