என் மலர்
நீங்கள் தேடியது "women suicide"
- வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் காரப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகள் பூமிகா (வயது 22 ). இவர் கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பயிற்சிக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடன் தொல்லையால் பெண்கள் தற்கொலை.
- கலெக்டர் அலுவலகங்களிள் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து ஏராளமான நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிதி நிறுவனங்களில் ஏழை மக்கள், விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி வருகிறார்கள்.
இவ்வாறு கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்தால், அவர்களுக்கு ஒரு சில நிதி நிறுவனங்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து, நிதி நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாக புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, சிறிய நிதி நிறுவனங்களுக்கு எதிராக புதிய அவசர சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாநிலத்தில் எங்கெல்லாம் முறையாக அனுமதி பெறாமலும், சட்டவிரோதமாகவும் செயல்படும் நிதி நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக நிதி நிறுவனங்கள் ரவுடிகளை வைத்து மிரட்டி பணத்தை வசூலிக்க கூடாது. மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டுக்கு சென்று பணம் வசூலிக்க கூடாது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும். மக்கள் ஏதேனும் புகார் அளித்தால், அதன்பேரில் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சிறிய நிதி நிறுவனங்களின் தொல்லைகளில் இருந்து மக்களை பாதுகாக்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும்.
அதுபோல் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நிதி நிறுவனங்கள் பற்றி தெரியவந்தால் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி நதியா (வயது 20). சசிகுமார் தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.
நதியாவுக்கு சசிகுமார் தாய் மாமா உறவாகும். இவர்கள் திருமணம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்தின் பிறகு நதியா கணவர் மீது விருப்பம் இல்லாமலும், சரியாக சாப்பிடாமலும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ம் தேதி வீட்டிலிருந்து எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் வசிப்பவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்து விட்டார்.
இது சம்மந்தமாக நதியாவின் தாய் ஓலத் தேவராயன்பேட்டையை சேர்ந்த மஞ்சுளா மருவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து திருமணமாகி 3 மாதத்தில் புதுப்பெண் இறந்ததால் தஞ்சை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பி வைத்தார்.
புதுவை முத்தியால் பேட்டை மாணிக்க முதலி யார் தோட்டம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேலன். மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது மனைவி கஸ்தூரி (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே மது குடிக்கும் பழக்கம் உள்ள வேலன் அடிக்கடி சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
அதுபோல் நேற்றும் வேலன் வேலைக்கு செல் லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை கஸ்தூரி கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து கஸ்தூரி தனது தாய் மல்லிகாவிடம் செல்போனில் பேசினார். பலமுறை கணவன் குடித்து விட்டு தகராறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா தனது உறவினர்களுடன் மகள் வீட்டுக்கு வந்தார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் கஸ்தூரி தூக்கு போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் தூக்கில் இருந்து கஸ்தூரியை மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்தூரி பரிதாப மாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியாங்குப்பம் கோட்டை மேடு சேரன் வீதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (52). கார் டிரைவர். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
சம்பத்குமார் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். என்றாவது ஒரு நாள் டிரைவர் வேலைக்கு சென்றாலும் அந்த பணத்தை வீட்டு செலவுக்கு கொடுப்பதில்லை.
அது போல் சம்பவத்தன்று டிரைவர் வேலைக்கு சென்ற சம்பத்குமார் அந்த பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் அதனை செலவழித்தார். இதனை காயத்ரி கண்டித்தார். இதனால் மனமுடைந்த சம்பத்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) அவர் தின்று விட்டார்.இதில் மயங்கி கிடந்த சம்பத்குமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சம்பத்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன் குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சாந்தி (வயது40) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சாந்தியின் மகனுக்கு சமீபத்தில் மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாந்தி சம்பவத்தன்று மதியம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மேலூர் சொக்கம்பட்டி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவரது மனைவி அழகு. கணவன் -மனைவி இருவரும் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் செல்வத்துக்கு குடிபழக்கம் காரணமாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
மதகடிப்பட்டு அடுத்த தமிழக பகுதியான பூவரசங் குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது பேத்தி அம்சவள்ளி (வயது 26). திருபுவனை தனியார் கம்பெனி ஊழியர்.
இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் மற்றும் குழந்தை இறந்து விட்டதால் கோவிந்தம்மாளும், அம்ச வள்ளியும் திருபுவனையில் தங்கினர்.
அம்சவள்ளி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார். கணவரும், குழந்தையும் இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த அம்சவள்ளி நேற்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதை பார்த்த கோவிந் தம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அம்சவள்ளியை மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அம்சவள்ளி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.
இதுகுறித்து கோவிந் தம்மாள் திருபுவனை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
ஈரோடு வீரப்பன்சத்திரம், எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி சுதா (வயது 41). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
சுதா ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சுதாவின் கணவர் ஜெகநாதன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலையில் சுதா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது அறைக்கு சென்ற சுதா திடீரென விஷம் குடித்து மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகள்கள் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுதாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி சுதா இன்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். சுதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்ற காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews