என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Work Stoppage"
- சிமெண்ட் விலை ‘திடீர்’ உயர்வால் கட்டுமான பணிகள் முடங்கியது.
- எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்என ஒப்பந்தாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி
கட்டுமான தொழிலில் அத்தியாவசியமாக இருப்பது சிமெண்ட். பல்வேறு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் பெருகியதால் போட்டா போட்டி ஏற்பட்டு சிமெண்ட்விலை குறைந்தது. மேலும் அரசு சார்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் சிமெண்ட் விற்பனை யெ்யப்பட்டது. இங்கு சிமெண்ட் மூடைகள் சலுகை விலையில் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசு மூலம் நடைபெறும் கட்டிட பணிகளுக்கும் இந்த சிமெண்ட் மூடைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.இதன் மூலம் பலர் வேலைவாய்ப்பு பெற்றனர்.இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சிமெண்ட் விலை திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூடை ரூ.350-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.450-க்கு விற்னை செய்யப்படுகிறது. இதனால் கட்டிட ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசிடம் ஒப்பந்தப்புள்ளி பெற்று பொது கட்டிடங்களை கட்டி வருபவர்களுக்கு சிமெண்ட் விலைஉயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஒப்பந்ததாரர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்குள் கட்டிடங்களை கட்ட வேண்டும். ஆனால் தற்போது சிமெண்ட் விலை ஏற்றத்தால் கூடுதலாக செலவாகும் தொகையை பெறமுடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் சிமெண்ட் விலை உயர்வால் தாங்கள் கட்டிட வரும் புதிய வீடுகளின் வேலைகள் தொய்வடைந்துள்ளன. மேலும் கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்என ஒப்பந்தாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2 ஆண்டுகள் முடியும் தருவாயில் இன்னும் கட்டிட பணி முழுமை பெறாமலும், பயன்பாட்டிற்கு வராமலும் தொய்வான நிலையில் உள்ளது.
- ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் இதுபோன்று பல்வேறு மக்களின் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் தேக்கம் அடைந்து வருகிறது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் சுடுகாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியில் மின் மயானம் அமைப்பதற்கு ஆண்டிபட்டி பேரூராட்சி அடிப்படை வசதி திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இந்நிலையில் 2 ஆண்டுகள் முடியும் தருவாயில் இன்னும் கட்டிட பணி முழுமை பெறாமலும், பயன்பாட்டிற்கு வராமலும் தொய்வான நிலையில் உள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன் தேனி மாவட்ட கலெக்டர் மின் மயான கட்டிட பணியை ஆய்வு செய்த நிலையிலும் கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் இன்னும் காலதாமதம் ஏற்படுவதாக தெரிகிறது.
மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் இதுபோன்று பல்வேறு மக்களின் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
- குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.
தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.
சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாரிகள் ஆய்வு
- குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தரமானதாக கட்ட வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இந்த பணிகள் தரமாக செய்யப்படுகிறதா என அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி, பொறியாளர்கள் சிவக்குமார், பிரியா, பணிமேற்பார்வையாளர் அபிராமி ஆகியோர் அணைக்கட்டு ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து கெங்கநல்லூரில் நடைப்பெற்று வரும் நிழற்கூடம் கட்டும் பணி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணியையும் பார்வையிட்டனர்.
அப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கட்டிடம் சேதம் அடைந்தது. இதனால் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
அங்கு சுமார் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் பள்ளி கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.
புகாரின் அடிப்படையில் செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவது தெரிந்தது.
பின்னர் பள்ளி கட்டிட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம் என பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் பள்ளி கட்டிடத்தை மாற்று இடத்தில் அளவீடு செய்து முதலில் இருந்து துவங்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது 60 சதவீதம் கட்டுமான பணிகள் நிறைவுற்றிருந்த நிலையில் பள்ளி கட்டிடத்தை தரமற்ற முறையில் கட்டியதாக அதிகாரிகள் கட்டிடப் பணியை நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கட்டிடப்பணியை தரமானதாக கட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
- வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.
- 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக ரூ.8 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் காலத்தின் உயரம் அதிகமாக வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அரசு பிறகு சுமார் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் உயரம் மீண்டும் குறைந்த அளவே கட்டப்படுவதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் நடைபெற்று வந்த வேலையை நிறுத்தி சுமார் 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் சமூக ஆர்வலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பாலம் கட்டும் உரிமையாளரிடம் பேசி 15 அடி உயரத்திற்கு பாலத்தை கட்ட ஏற்பாடு செய்வதாக கூறி சமூக தீர்வை ஏற்படுத்தி பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்