என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Worker casualty"
- ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர்.
- நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வண்ணாத்திப் பாறை காப்புக்காட்டில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகள் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மின்வேலி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என்பவர் அப்பகுதியில் பதுங்கி இருந்தார். வனத்துறையினரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது ஈஸ்வரனுக்கும், வனத்துறையினருக்கும் இடையே நடந்த தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில ஈஸ்வரன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் ரேஞ்சர் முரளிதரன், லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தது தெரியவரவே அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் கேட்காமல் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரன் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தேனி எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு குற்றவாளி மீது எண்கவுண்டர் நடத்துவது போல வனத்துறைக்கு துப்பாக்கியால் சுட அதிகாரம் கொடுத்தது யார்? எனவே இப்பிரச்சினையில் போலீசாரும் எங்களை சமாதானம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தினால்தான் இதில் உண்மை வெளிவரும். அதுவரை பிரேத பரிசோதனை நடத்துவதற்கும் நாங்கள் அனுமதி அளிக்காமல் கையெழுத்திட மறுத்துவிட்டோம் என்றனர்.
இறந்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே அவர் அமைத்த மின்வேலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்பட 2 வழக்குகள் உள்ளன. இவர் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததால்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு 2ம் நாளாக ஈஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.
- திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலபட்டியை சேர்ந்தவர் சந்தானம்(வயது45). இவரது மனைவி இறந்து விட்டார். சொக்கநாதன்பட்டியில் 2 மகள்கள் மனைவியின் சகோதரி பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக சந்தானம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருமங்கலம் குதிரைசாரி குளம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியை சேர்ந்த கிருபா ராஜதுரை என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில் சந்தானம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியி லேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
- போலீசார் விரைந்து வந்து பலராமனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(வயது48). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பலராமன் பள்ளாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவரை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
பலராமனுக்கு மது பழக்கம் உள்ளது. அடிக்கடி அவர் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஆனந்தி கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பலராமன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்து வீட்டில் படுத்தார். பின்னர் அவர் வெளியே செல்லவில்லை.
இந்நிலையில் பலராமன் வீடு பூட்டியே கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் பலராமன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் மதுபோதையில் அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலராமனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர், லாரியை நிறுத்தாமல் கடலூர் நோக்கி ஓட்டி சென்றார்.
- இறந்து கிடந்த கிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 55). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து கடலூர் நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி திடீரென்று மோதியதில் கிருஷ்ணா சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் சக்கரம் கிருஷ்ணாவின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர், லாரியை நிறுத்தாமல் கடலூர் நோக்கி ஓட்டி சென்றார். பொதுமக்கள் லாரியை பின் தொடர்ந்து வழிமறித்து லாரி டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் இறந்து கிடந்த கிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூரில் பரபரப்பாக காணப்பட்டது.
- தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
- பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த திருவாமூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் தர்மசீலன் (வயது 25), கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணிக்கு பண்ருட்டியிலிருந்து சேலம் மெயின் ரோட்டில். தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கொளப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் தர்மசீலன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ரு ட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தர்மசீலன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பகண்டை கூட்டு ரோடு அருகே ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
- கரும்பு சோலை கட்டை தலையில் வைத்துக்கொண்டு திருவேங்கடம் நடந்து சென்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அதே ஊரில் உள்ள பெரியாயி ஓடை கரையில் கரும்பு சோலை கட்டை தலையில் வைத்துக்கொண்டு திருவேங்கடம் நடந்து சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஓடைக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதில் பின் கழுத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திருவேங்கடம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
- ஆனந்தராஜ் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பெரிய கொள்ளியூர் காலனியை சேர்ந்தவர் தனக்கோட்டி(47). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் பெரிய கொள்ளியூர் மதுபான கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனக்கோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த பாக்கம் கிராமத்தைச சேர்ந்த குப்பன் மகன் ஆனந்தராஜ் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வரதப்புனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 41). கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கொளஞ்சி தனது இருசக்கர வாகனத்தில் பாபு என்பவரை உட்கார வைத்துக்கொண்டு அருகில் உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்திற்கு சொந்த வேலை காரணமாக சென்று உள்ளார். பின்னர் வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் வரதப்புனுர் கிராம நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய சிறுவத்தூர்கொளஞ்சி ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைத்தடு மாறி கீழே விழுந்ததில் கொளஞ்சி என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது .
பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவிக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக உயிரிழந்தவரின் சகோதரர் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்