search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Water Day"

    அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.

    நீர் இன்றி அமையாது உலகு..என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

    இன்று 'உலக தண்ணீர் தினம்'

    உயிர்களின் அடிப்படை தேவையாக தண்ணீர் அமைந்து உள்ளது.உணவு தயாரிப்பது, குளிப்பது, குடிப்பது மற்றும் விவசாய உற்பத்தி, தொழிற்சாலை உற்பத்தி என மனிதனின் அன்றாட வாழ்வில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறதுஒரு நபருக்கு தினமும்  80 லிட்டர் தண்ணீர் சராசரியாக தேவைப்படுகிறது.

    மக்கள் தொகை பெருக்கம்,தொழிற்சாலைகள் அதிகரிப்பு,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.உலகில் பல நாடுகளில் பல லட்சம் மக்கள் சுகாதாரமான குடிநீர், தண்ணீர் இல்லாமல் உள்ளனர்.




    பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மையும் 2.5 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீரும் உள்ளது.டெல்லி, ஐதராபாத், சென்னை, பெங்களூரு உளிட்ட பல்வேறு நகரங்களில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    பருவநிலை மாற்றம், மழைப் பொழிவு குறைவு மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு உருவாகிறது.




    1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐ.நா சபை மாநாட்டில் ' உலக தண்ணீர் தினம்' முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில் 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 - ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த. தினத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சேமிப்பு, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.

    தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவோம்...நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.

    • விருதுநகரில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இந்த பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் அ.ச.ப.சி.சி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

    பூமியில் உள்ள புல், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரி னங்களுக்கும் தண்ணீர் அவசியம். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

    உலகில் 3-ல் 2 பங்கு நீராலானது. இதில் பெரும் பங்கு கடலாகவும், பனிக்கட்டி களாகவும் உள்ளது. நாம் குடிக்கக்கூடிய நன்னீரின் அளவு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். குளங்கள், ஏரிகள், கண்மாய், குட்டைகளை உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

    நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதால், நீர்நிலைகள் மாசடைகின்றன. திடக்கழிவு மேலாண்மையில் அரசு செய்துவரும் நடவடிக்கை களோடு, பொதுமக்களின் பங்களிப்பும் மிக அவசியம். பல உலக நாடுகளில் உள்ள மக்கள் தண்ணீருக்காக ஒரு நாளில் 2 முதல் 3 மணி நேரம் வரை கணிசமான நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே பொதுமக்களும், எதிர்கால சந்ததிகளான மாணவர்களும் நீர் ஆதாரங்களை பெருக்குவதிலும், சிக்கன நடவடிக்கையில் அரசு எடுக்கும் நீர் பாதுகாப்பு சார்ந்த எந்த ஒரு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாத்தும், தண்ணீரை மிக சிக்கன மாகவும் செலவழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைதொடர்ந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் உலக தண்ணீர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முன்னாள் முதல்வர் கே.பழனி முன்னிலை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியை ராஜ ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். எஸ்.மகேஸ்வரன், கே.பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தொடர்ந்து 2-ம் அமர்வில் அன்புசெல்வன் வரவேற்று பேசினார். நமது நம்பியாறு அமைப்பு தலைவர் விஜயராஜன் வாழ்த்தி பேசினார். டாக்டர் விதுபாலன் சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நமது நம்பியாறு அமைப்பின் செயலர் எம்.ஜான் வின்சன்ட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தமிழ் துறை மற்றும் நமது நம்பியாறு அமைப்பு இணைந்து செய்து இருந்தது.

    • கடலாடி யூனியனுக்குட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
    • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உலக தண்ணீர் தினம் கொண்டா டப்பட்டது. இதையொட்டி வாலிநோக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பீர்முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முகமது பனத்வாலா, ஊராட்சி செயலர் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தனர். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது.

    இதே போல் கண்டிலானில் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம் தலைமையிலும் ஏ.புன வாசலில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், காணிக்கூரில் ஊராட்சித் தலைவர் தென்னரசி செல்ல பாண்டியன் தலை மையிலும், பெரியகுளத்தில் ஊராட்சி தலைவர் முத்துமாரி தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.கன்னிராஜபுரத்தில் ஊராட்சி தலைவர் சுப்பிர மணியன் தலைமையிலும், நரிப்பையூரில் ஊராட்சித் தலைவர் நாராயணன் தலைமையிலும், செவல்பட்டியில் ஊராட்சி தலைவர் சொரிமுத்து தலைமையிலும், எஸ். தரைக்குடியில் ஊராட்சி தலைவர் முனியசாமி தலைமையிலும்,

    டி.வேப்பங்குளத்தில் ஊராட்சி தலைவர் முருகன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

    அஞ்சடைநாதபுரத்தில் ஊராட்சி தலைவர் லிங்க ராஜ் தலைமையிலும், டி.கரிசல்குளத்தில் ஊராட்சி தலைவர் அப்பனசாமி தலைமையிலும், எஸ்.கிரந்தையில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், எஸ்.வாகைக்குளத்தில் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி வடமலை தலைமையிலும், பிள்ளையார் குளத்தில் ஊராட்சி தலைவர் வீர பாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

    கடுகு சந்தையில் ஊராட்சித் தலைவர் காளிமுத்து தலைமையிலும், மேல செல்வனூரில் ஊராட்சி தலைவர் மகர ஜோதி கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், கீழ செல்வனூரில் ஊராட்சித் தலைவர் இப்பால் தலைமையிலும், மேல கிடாரத்தில் ஊராட்சி தலைவர் கவிதா தலைமை யிலும், கொத்தங்குளத்தில் ஊராட்சித் தலைவர் கணேசன் தலைமையிலும், சிக்கலில் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன் தலைமையிலும், இதம் பாடலில் ஊராட்சி தலைவர் மங்களசாமி தலைமையிலும், பீ.கிரந்தையில் ஊராட்சி தலைவர் ஆனந்தம்மாள் அற்புதராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

    டி.மாரியூரில் ஊராட்சித் தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் தலைமையிலும், ஏனாதியில் ஊராட்சி தலைவர் பாரதி ராஜா தலைமையிலும், ஒருவானேந்தலில் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் தலைமையிலும் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

    • மருதகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    உலக தண்ணீர் தினத்தையொட்டி தஞ்சாவூர் ஒன்றியம் மருதகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    ஊராட்சித் மன்ற தலைவர் அம்மாசெல்லம் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் உதயன், ஒன்றிய கவுன்சிலர் ராஜகோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் கலந்து கொண்டு பேசியதாவது; -

    உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது.

    ஊராட்சியை எப்போது சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    முடிந்தவரை வீட்டு வரி, சொத்து வரியை இணையவழியில் பெற வேண்டும். பெறப்பட்ட கோரிக்கைகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா,  பூதலுார் தாசில்தார் பெர்ஷியா உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • திருத்துறைப்பூண்டியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தண்ணீர் என்பது தங்கம், வைரத்தை விட மதிப்பு மிக்கது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் 17- வது வார்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கவுன்சிலர் ரமேஷ்குமார் தலைமையிலும், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

    நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து க்கொண்டு பேசும்போது, தண்ணீர் என்பது தங்கம், வைரத்தை விட மதிப்பு மிக்கது. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி தண்ணீருக்கு உண்டு.

    உலகமே தண்ணீருக்கு போரிடும் நிலை வரலாம். நீர்நிலைகள் அனைத்தையும் தூய்மைபடுத்தி தண்ணீரை சேமிக்க வேண்டும். வீணாக தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    பெண்கள் நினைத்தால் மட்டுமே தண்ணீரை பாதுகாக்க முடியும்.எனவே நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    பின்னர் தண்ணீர் சிக்கனம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    நீர் நிலை கரைகளில் மரக்கன்று நடப்பட்டது.

    முன்னதாக தூய்மை பாரத மேற்பார்வையாளர் அம்பிகா வரவேற்றார், மகளிர் ஒருங்கிணைப்பாளர் நதியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பெண்கள் ,சுகாதார பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
    • குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்து இன்றியமையாத தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டு கொண்டார்.

    முன்னதாக செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    இதில் ஊராட்சி துறை சார்பில், பணி மேற்பார்வையாளர் அமுதா கலந்து கொண்டு, குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், நீரினால் பரவும் நோய்கள் பற்றியும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் பாலசண்முகம், கிராம சுகாதார செவிலியர் கலைமணி ஆகியோர் சுகாதாரத் துறை அன்றாடம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறுதான்யம் பயன்படுத்த வேண்டும் என்று தலைப்பிட்டு பேசினார்.

    துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வைத்தார்.

    ஊராட்சி செயலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    அப்போது சிறப்பு (பற்றாளர்) அழைப்பாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கீதா கலந்து கொண்டு பேசினார்.

    தண்ணியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் தண்ணீரை தேவை இல்லாமல் வீணடிக்க கூடாது.

    சுகாதாரமாக இருக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நடைபெற்று வரும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை எடுத்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் சங்கீதா நாராயணன் நன்றி கூறினார்.

    • ஆச்சாள்புரம் அரசு பள்ளியில் உலகதண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • பேரணியில் பொதுமக்களிடம் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் எடுத்து கூறினர்.

    சீர்காழி:

    தண்ணீர் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலம் மாணவிகள் சீர்காழி ஆச்சாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் மாணவிகள் இந்த பேரணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் துரை பேரணிக்கு தலைமை தாங்கினார்.

    பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த பேரணியில் பொதுமக்களிடம் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

    • சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • நாச்சிகுளம் ஊராட்சி தலைவர் சுகுமார் தலைமையில் செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரமங்கலம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. தலைவர் கலியுகநாதன் தலைமை வகித்தார். துணைதலைவர் செல்வி, பற்றாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் தண்ணீர் சிக்கனம், கருவுற்ற தாய்மார்கள் மாதாந்திர தடுப்பூசி, குழந்தை திருமணம், கால்நடை தடுப்பூசி முகாம் உள்ளிட்ட வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதேபோல் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி தலைவர் ஜென்சிராணி, பானாமூப்பன்பட்டி ஊராட்சி தலைவர் மகாராஜன், ஏரவார்பட்டி ஊராட்சி தலைவர் பாண்டி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    வாடிப்பட்டி யூனிய னுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செயலர் ஓய்யணன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சி தலைவர் பவுன் தலைமையில் செயலர் திருசெந்தில் அறிக்கை வாசித்தார். முள்ளிப்பள்ளம் ஊராட்சி தலைவர் பழனிவேல் தலைமையில் துணை தலைவர் ராஜா முன்னிலையில் மனோபாரதி அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமையில் செயலர் முனிராஜ் அறிக்கை வாசித்தார்.கருப்பட்டி ஊராட்சி தலைவர் அம்பிகா தலைமையில் செயலர் முனியாண்டி அறிக்கை வாசித்தார்.

    இரும்பாடி ஊராட்சி ஈஸ்வரி தலைமையில் செயலர் காசி அறிக்கை வாசித்தார். நாச்சிகுளம் ஊராட்சி தலைவர் சுகுமார் தலைமையில் செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார். ரிஷபம் ஊராட்சி தலைவர் சிறுமணி தலைமையில் செயலர் வேலம்மாள் அறிக்கை வாசித்தார். நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமையில் செயலர் ரேவதி அறிக்கை வாசி த்தார். திருவாலவாய நல்லூர் ஊராட்சி தலைவர் சகுபர்சாதிக் தலைமையில் செயலர் வேலன் அறிக்கை வாசித்தார்.

    • உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம்.

    மதுரை

    இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி சந்திர சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் துரைராஜ், ஊராட்சி செயலர் சசிகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தலைவர் லட்சுமி சந்திர சேகர் பேசும்போது கூறிய தாவது:-

    நமது ஊராட்சியில் தண்ணீர் தேவைகளை மக்கள் அறிகிற வண்ணம் ஓவியங்களாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்காங்கே வரைந்து வைத்துள்ளோம். நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம். மக்கள் தண்ணீரை வீணடிக்காமல் தேவையான அளவிற்கு பயன்படுத்த வேண்டும். ஆதி காலத்தில் மக்கள் ஏரி, குளங்களில் நீர் எடுத்து வந்த நிலைமையை நாம் அறிந்திருக்கிறோம், தெரிந்திருக்கிறோம். பின்னர் கிணறு வெட்டி அதில் இருந்து மக்கள் தண்ணீர் எடுத்து தங்கள் தேவைக்கு பயன்படுத்தினர்.

    தற்போது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடங்களிலும் குடிநீர் வசதி செய்ய திட்டங்கள் தீட்டி யுள்ளார். விரைவில் லோயர் கேம்பில் இருந்து முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் வர இருக்கிறது.

    தற்போது வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சிக்கு சிறந்த முறையில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் மூர்த்திக்கும், கலெக்ட ருக்கும், கூடுதல் கலெக்டரு க்கும் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கிராம சபை கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமை தாங்கினார்.
    • பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நடப்பட்டது.

    நெல்லை:

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கீழநத்தம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கீழநத்தம் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் பலவேசம் இசக்கி பாண்டி, சுசீலா, பரமசிவன், உலகநாதன், சுரேஷ், ராமலட்சுமி, பூர்ணிமா, ராஜம்மாள், பாரதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள், மேற்பார்வையாளர் முருகன், ஊராட்சி செயலர் சுபாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் புளியமரம், செம்மரம், வேம்பு ஆகிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பஞ்சாயத்தின் கீழ் வரும் அனைத்து பகுதிகளிலும் சுமார் 300 மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    ×