என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தவேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு
- மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- அனைத்து ஊராட்சிகளிலும் அன்று கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை:
குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டம்
கூட்டப்படுகிறது.
இந்நிலையில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வரும் 22-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்பு வளாகத்தில் நடத்தக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.