என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "World Yoga Day"
- சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
- விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மேலும் ஈஷாவின் சார்பில் டி.என்.ஏ.யு. வில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக யோக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இலவச யோக வகுப்புகளை மிகப்பெரிய அளவில் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது.
ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
அதேபோல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருடன் வேளாண் பல்கலைகழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
மேலும் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரெயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, ஐ.என்.எஸ். அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், சி.ஆர்.பி.எப். மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன.
இந்த இலவச யோகா வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோகா பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
- 30, 50, சுற்று பிரிவில் கலந்து கொள்பவர்களுக்கு காலை உணவும் , 108, 200 சுற்று பிரிவில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும்.
- போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு டீ சர்ட், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்.
சென்னை :
உலக யோகா தினம் ஜூன் 21-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் 16-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நேரு உள்விளையாட்டு அரங்கில் யோகாத்தான் தொடர் சூரிய நமஸ்காரம் என்ற நிகழ்ச்சியை சேரா யோகமந்திரம் என்ற அமைப்பினர் நடத்த உள்ளனர்.
2019-ம் ஆண்டும் இந்த அமைப்பினர் இதே போன்ற நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8 வயது முதல் 50 வயது மேற்பட்டவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய பயிற்சி பெற்றவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனங்கள் 30, 50, 108, 200 சுற்றுகள் என்ற பிரிவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான பெயரை பதிவு செய்யும் நடைமுறை தற்போது நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொலைபேசி வாயிலாகவோ, நேரடியாகவோ வந்து போட்டிக்கான கட்டணத்தை செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் பெயரை பதிவு செய்ய ஜூன் 12-ம் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் +919840112000, 9841525694 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் மூலமும் பெயரை பதிவு செய்யலாம்..
30,50,108 சுற்று சூரிய நமஸ்காரத்திற்கு ரூ.999-ம், 200 சுற்று சூரிய நமஸ்காரத்திற்கு ரூ.1500-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் 30,50,108 சுற்று சூரிய நமஸ்காரத்திற்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. 200 சுற்று சூரிய நமஸ்காரத்திற்கு சான்றிதழ், தங்கப்பதக்கம் மற்றும் டிராஃபியும்(கோப்பை) வழங்கப்படுகிறது.
ஜூன் 16-ம்தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டிக்கான 30 சுற்று சூரிய நமஸ்காரம் காலை 8.30 மணிக்கும், 50 சுற்றுகள் 9.10 மணிக்கும், 108, 200 சுற்றுகள் 10.10 மணிக்கும் தொடங்குகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு டீ சர்ட், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்.
30, 50, சுற்று பிரிவில் கலந்து கொள்பவர்களுக்கு காலை உணவும் , 108, 200 சுற்று பிரிவில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும்.
மேலும் www.serayogatherapy.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் உங்கள் பெயரை முன்பதிவு செய்யலாம்.
- வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.
- பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார்.
நெல்லை:
வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார். தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் முருகவேல் நாம் தினமும் யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி யோகாவின் சிறப்பினை எடுத்துரைத்தார்.
இதில் உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் மற்றும் பூச்சியம்மாள் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.
- திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.
- பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் 3-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றிய மையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து சிறப்புப் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் சூரிய நமஸ்காரம், விருட்சாசனம், வஜ்ராசனம், வீரபத்ராசனம், உஸ்தாசனம், யோகமுத்ரா போன்ற பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
பின்னர் பள்ளியின் பின்னர் பேசிய முதல்வர் எலிசபெத் யோகாசனத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து தொடர்ந்து மாணவர்கள் யோகாசனம் செய்துவர அறிவுறுத்தினர்.
- மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்:
உலக யோகா தினம் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செஞ்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் அஜித்தா ரமேஷ் யோகா குறித்து விளக்கம் அளித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
- நீதிபதிகள் பங்கேற்பு
- தியான பயிற்சியில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை:
உலக யோகா தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை பார் அசோசியேசன் தலைவர் நித்யானந்தம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா, மாஜிஸ்திரேட் நவீன் துரை பாபு ஆகியோர் கலந்து கொண்டு தியானம் மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
யோகா மாஸ்டர் வஜ்ஜிரவேல், பயிற்சியாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் தியானம் பயிற்சி அளித்தனர்.
இதில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சங்கர் உள்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பார் அசோசியேசன் செயலாளர் ஜான் சாலமன்ராஜா நன்றி கூறினார்.
இதே போல் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் நடத்திய யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் கபில்தேவ், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் அசோக்குமார் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், பத்மாசனம், தனுராசனம், வஜ்ஜிராசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.
- விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
- கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மாணவியை பாராட்டி பொன்னாடை போத்தி பரிசு வழங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம், அருணாச்சலம் ஆன்மீக அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறார்கள் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உலகயோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
133 ஆசனங்கள்
இதில் 9 வயது சிறுமி ரவீனா, 133 திருக்குறள் அதிகாரங்களை கூற 133 ஆசனங்களைச் செய்து அசத்தி னார். நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா கழக நிறுவனர் சுரேஷ் குமார் வரவேற்றார்.
அருணாச்சல ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மைக்ரோ பாயிண்ட் கல்வி மைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங், வக்கீல் கருப்பசாமி, தொழிலதிபர் நடராஜன், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பரிசு வழங்கல்
விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மாணவியை பாராட்டி பொன்னாடை போத்தி பரிசு வழங்கினார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக ரம்யா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக விடிவெள்ளி அறக்கட்டளை நிறுவனர் ஷீலா ஜாஸ்மின் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் தொழிலதிபர் ராமராஜ் நன்றி கூறினார்.
- திருவெண்ணைநல்லூர் போன் நேரு பள்ளியில் உலக யோகா தினம் நடைபெற்றது.
- யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் மாணவ-மாணவிகளிடம் யோகா பயிற்சி செய்து காண்பித்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் போன்நேரு மேல்நிலைப் பள்ளி மற்றும் விழுப்புரம் கோ சேவா சார்பில் பள்ளிவளாகத்தில் உலக யோகா தினம் நடைபெற்றது .பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் தொழிலதிபர் தருண், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் அவசியம் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக கூறினார். யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் மாணவ-மாணவிகளிடம் யோகா பயிற்சி செய்து காண்பித்தார். இதில் பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வாசுதேவன் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
- விழுப்புரத்தில் வின்னர் போலீஸ் அகாடமி சார்பில் உலக யோகா தினம் நடைெபற்றது,
- பொதுமக்களுக்கு யோகா பயிற்சியின் நன்மைகளும் பயிற்சி முறைகள் கையேடுகளும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டன,
விழுப்புரம்:
உலக யோகா தினத்தையொட்டி விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆவின் எதிரே உள்ள வின்னர் போலீஸ் போலீஸ் அகடமிக்-விழுப்புரம் சாலாமேடு மனவளக்கலைசார்பில் வின்னர் போலீஸ் அகடமிக் நிறுவனத் தலைவரும் முதல்வரும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான ராமராஜன் தலைமையில் உலக யோகா தினம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில்சாலாமேடு மனவளக்கலை நிர்வாகிகள், உறுப்பினர்கள்,வின்னர் போலீஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும்போலீஸ் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சியின் நன்மைகளும் பயிற்சி முறைகள் கையேடுகளும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டன மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இயற்கை உணவுகளும் இயற்கை பானங்களும் வழங்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்