என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young man killed"
- திருச்சியில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
- கொலை செய்து விட்டு தப்பி ஓடிய டிரைவர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்கிற சக்திகுமார் (வயது 34). இவருக்கு திருமணமாகி மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 1 வயதில் மகன் உள்ளார். எனவே சக்திகுமார் தனது மகனுடன் வசித்து வந்தார்.
திருவெறும்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவர் கக்கன் காலனி பகுதியில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணை இரவில் சந்திப்பதற்காக அடிக்கடி முத்துப்பாண்டி காந்திநகர் பகுதிக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதை பார்த்த சக்திகுமார் அந்த பெண்ணிடம் சென்று உங்களின் கள்ளக்காதல் விவகாரத்தை உங்களின் உறவினர்களிடம் சொல்லிவிடுவேன்.
சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என் ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
இதுபற்றி அந்த பெண் தனது கள்ளக்காதலன் முத்துப்பாண்டியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று அதிகாலையில் முத்துப்பாண்டி கக்கன் காலனிக்கு அந்த பெண்ணை சந்திப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது அதிக மது போதையில் இருந்த சக்திகுமார், முத்துப்பாண்டியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடை்ந்த முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திகுமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த சக்திகுமார் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய டிரைவர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் திருவெறும்பூர் பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.
அம்பத்தூரை அடுத்த ஓரகடம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 27). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது தம்பி மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த போது எதிரில் வந்த அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவருக் கொருவர் தாக்கிக் கொண்டனர்.
வீட்டிற்கு வந்த மணிகண்டன் தனது அண்ணன் மகேசிடம் தான் தாக்கப்பட்டது குறித்து கூறினார். இதையடுத்து மகேஷ் தனது தம்பியை அடித்து குறித்து பாலசந்தரிடம் தட்டிக்கேட்டார்.
அப்போது பாலச்சந்தர் நண்பர்களை போன் செய்து வரவழைத்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் மகேசை கடுமையாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த மகேசை சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து பாலச்சந்தர் அவரது நண்பர்கள் சசி, சதீஷ், தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #puzalprison
காடையாம்பட்டி
ஈரோடு மாவட்டம் பவானி, மேட்டுநாகவம் பாளையம் அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் காந்தி நகர், 1-வது வீதியை சேர்ந்தவர் சற்குணதாஸ் (வயது 46). இவர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையையொட்டி சற்குணதாஸ் நேற்று மாலை டிக்கெட் எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் சேலம் அருகே உள்ள தின்னப்பட்டி ரெயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் ரெயில் வந்தபோது படிக்கட்டில் இருந்து சற்குணதாஸ் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வைத்திருந்த ஆதார் அடையாள அட்டையை கைப்பற்றி, ஈரோட்டில் உள்ள அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜ், கட்டிட காண்டிராக்டர். இவருடைய மகன் செல்லப்பாண்டி. சுந்தரராஜ் முதல் மனைவியை பிரிந்து 2வது மனைவியுடன் வசித்து வருகிறார்.
கடந்த மே மாதம் 21-ந்தேதி செல்லப்பாண்டி தனது நண்பர் மைதீன்பாட்சா (வயது24)வுடன் தந்தை சுந்தரராஜை சந்தித்து பணம் கேட்டார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்லப்பாண்டியும், மைதீன் பாட்சாவும் தன்னை தாக்கியதாக விருதுநகர் கிழக்கு போலீசில் சுந்தரராஜ் புகார் செய்தார்.
இந்த வழக்கில் மைதீன் பாட்சா உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மைதீன்பாட்சா தனது நண்பர் அஜித்துடன் அல்லம்பட்டி காமராஜர் புறவழிச்சாலையில் நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சுந்தரராஜ் வாகனத்தில் வந்தார். அவர் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் மைதீன் பாட்சாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டார். பலத்த காயம் அடைந்த மைதீன்பாட்சா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் மைதீன் பாட்சாவின் தந்தை சேக்அப்துல்லா புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சுந்தரராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்