என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young woman missing"
- சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார்.
- ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே வருசநாடு உரக்குண்டான் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவரது மனைவி முத்துமாரி(25). இவர்களுக்கு மித்ரா என்ற 4 வயது குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துமாரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் தந்தை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வருசநாடு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான முத்துமாரியை தேடி வருகின்றனர்.
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா(22). சம்பவத்தன்று சின்னமனூருக்கு வேலை தேடி செல்வதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பவித்ராவை தேடி வருகின்றனர்.
- அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
- புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை.
சேலம்:
திருப்பூர் மாவட்டம் குண்ட நாற்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூரிலிருந்து பஸ்சில் பூர்ணிமா ஏறினார். அப்போது அவரை அன்பரசன் அவரது நண்பர் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அன்பரசன் செல்போன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு கார்த்தி மற்றும் பூர்ணிமா ஆகியோரை புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசன் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து மாயமான ஆந்திர மாநில இளம்பெண்ணையும் வாலிபரையும் தேடி வருகிறார்.
- உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் ஹரிணி (18). இவர் திருநெல்வேலி ஜியான் செமினேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பி.டெக் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அவரது பெற்றோர் பொன்னேரி பஜாருக்கு சென்று வருவதாக கூறி சென்றனர். இந்த நிலையில் அவர்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது ஹரிணியை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
- சுனிதாவை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
சென்னை:
சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் பென்சிலையா. இவரது மகள் சுனிதா (வயது18). பிளஸ்-2 முடித்து விட்டு வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வருகிற மே மாதம் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை பென்சிலையா வளரசவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிதாவை தேடி வருகிறார்கள்.
- கஜலட்சுமி பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
- பின்னர் அவர் வீடு திரும்பவில்லை
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகள் கஜலட்சுமி(வயது 19). இவர் பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வழக்கம்போல் நேற்று காலை செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவரை உறவினர்கள் வீடுகள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கஜலட்சுமியின் தாய் புனிதா புகார் அளித்தார். அதன்பேரில் கஜலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
- இளம்பெண் செல்போனில் அடிக்கடி ஆன்லைன் மூலம் பிரீ பையர் விளையாட்டை விளையாடி வந்தார்.
- கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.
கோவை:
கரூரை சேர்ந்தவர் 27 வயது வாலிபர் பொள்ளாச்சி கோமங்கலம் போலீசில் ஒரு புகார் அளித்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், 23 வயது உறவுகார பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் நாங்கள் கரூரில் இருந்து பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை கோமங்கலத்திற்கு வந்தோம்.
இங்கு நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறான். இந்த நிலையில் எனது மனைவி எனது செல்போனில் அடிக்கடி ஆன்லைன் மூலம் பிரீ பையர் விளையாட்டை விளையாடி வந்தார். அதனை நான் கண்டித்தேன்.
ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார். சம்பவத்தன்று நான் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டேன். பின்னர் மாலை நான் வீடு திரும்பியபோது எனது மனைவி வீட்டில் இல்லை.
அதிர்ச்சி அடைந்த நான் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தேன். அப்போது வீட்டின் அருகில் இருந்த மளிகை கடைகாரரிடம் கேட்டபோது அவர் எனது மனைவி பொள்ளாச்சி பஸ் ஏறி சென்றதை பார்த்ததாக கூறினார். அதன் பின்னர் அங்கும் சென்று தேடி பார்த்தேன். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
சந்தேகம் அடைந்த நான் அவர் விளையாடும் பிரீ பையர் விளையாட்டை பரிசோதனை செய்தேன். அதில் எனது மனைவி ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு அதிக மெசேஜ் அனுப்பி அதனை அழித்து வைத்திருந்தார்.
அவர் யார் என்று தெரியவில்லை. அந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே எனது மனைவி அந்த வாலிபருடன் சென்று இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவியை தேடி கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.
- முசிறி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணி–க்கம். இவரது மகள் ஷோபனா (வயது 24).
- சம்பவதன்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
திருச்சி:
முசிறி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணி–க்கம். இவரது மகள் ஷோபனா (வயது 24). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்,
சம்பவதன்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சோபனா கிடைக்கவில்லை.
இது குறித்து மாணிக்கம் முசிறி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், முசிறி சப் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்கு பதிவு செய்து மாயமான சோபனாவை தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகள் ஜெயப்பிரியா (வயது 17). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து ஜெயப்பிரியா தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் ஜெயப்பிரியா அங்கு செல்ல வில்லை. இரவு வரை மகள் வீடு திரும்பாததால் கவலையடைந்த அவரது தந்தை ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயப்பிரியாவை தேடி வருகின்றனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவருக்கும் அருகில் உள்ள தேவிகுளத்தை சேர்ந்த மகாலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 25.5.2018 அன்று திருமணம் நடைபெற்றது.
மகாலட்சுமி புதுவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி தேவி குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவில் வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் பார்த்தபோது அவரை காணவில்லை.
இதுகுறித்து மரக்காணம் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான புதுப்பெண் மகாலட்சுமி எங்கு சென்றார் என விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்