search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் இளம்பெண் மாயம்
    X

    கோவையில் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் இளம்பெண் மாயம்

    • இளம்பெண் செல்போனில் அடிக்கடி ஆன்லைன் மூலம் பிரீ பையர் விளையாட்டை விளையாடி வந்தார்.
    • கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கரூரை சேர்ந்தவர் 27 வயது வாலிபர் பொள்ளாச்சி கோமங்கலம் போலீசில் ஒரு புகார் அளித்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், 23 வயது உறவுகார பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் நாங்கள் கரூரில் இருந்து பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை கோமங்கலத்திற்கு வந்தோம்.

    இங்கு நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறான். இந்த நிலையில் எனது மனைவி எனது செல்போனில் அடிக்கடி ஆன்லைன் மூலம் பிரீ பையர் விளையாட்டை விளையாடி வந்தார். அதனை நான் கண்டித்தேன்.

    ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார். சம்பவத்தன்று நான் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டேன். பின்னர் மாலை நான் வீடு திரும்பியபோது எனது மனைவி வீட்டில் இல்லை.

    அதிர்ச்சி அடைந்த நான் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தேன். அப்போது வீட்டின் அருகில் இருந்த மளிகை கடைகாரரிடம் கேட்டபோது அவர் எனது மனைவி பொள்ளாச்சி பஸ் ஏறி சென்றதை பார்த்ததாக கூறினார். அதன் பின்னர் அங்கும் சென்று தேடி பார்த்தேன். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    சந்தேகம் அடைந்த நான் அவர் விளையாடும் பிரீ பையர் விளையாட்டை பரிசோதனை செய்தேன். அதில் எனது மனைவி ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு அதிக மெசேஜ் அனுப்பி அதனை அழித்து வைத்திருந்தார்.

    அவர் யார் என்று தெரியவில்லை. அந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே எனது மனைவி அந்த வாலிபருடன் சென்று இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவியை தேடி கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

    இதையடுத்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×