என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youth dies"
- கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக மாரிசாமி இறங்கியுள்ளார்.
- நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் எல்லப்பா ளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் மாரிசாமி (33). தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் சம்பவத் தன்று வெள்ளங்கோவில் காமராஜ் நகர் பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக மாரிசாமி இறங்கியுள்ளார்.
மாரிசாமிக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்த மாரிசாமியின் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாரிசாமியின் உடல் நல்லா ம்பட்டி மணக்காட்டுப்புதூர் பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் கரை ஒதுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் மாரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை கேட், விநாயகா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விஜயகுமார் (29) பி.எஸ்சி. அக்ரி படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது வெல்டிங் பட்டறை வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொண்டிபாளையம்-சிங்கம்பேட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
மேட்டூர் மெயின் ரோட்டில் இணைய முயன்ற போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விஜயகுமார் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் வெங்கடேசன் (வயது 39) இவர் நேற்று சொந்த வேலை காரணமாக தனது மனைவி நிவாஷினி மற்றும் குழந்தை பிரகதீஸ்வரன் ஆகியோருடன் எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது தியாகை பெரியநாயகி அம்மன் கோவில் அருகே சென்றபோது தனக்கு முன்னாள் சென்ற டிராக்டரை முந்தி சென்றார். அப்போது டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நிவாஷினி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர்.
- லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ்(28) தொழிலாளி. பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் அவர்கள் சிரமப்படுவதை பார்த்த அவர் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வீட்டிலிருந்து மின்ஒயரை தெருவுக்கு எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனே லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகிதாஸ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துர்கேஷ் யாதவ் செலக்கரச்சலில் கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
- சுல்தான்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
ஜார்கண்ட் மாநிலம் ஜராகிப்ஸ் தண்டை பகுதியை சேர்ந்தவர் துர்கேஷ் யாதவ்(20). இவர் சூலூர் அடுத்த செலக்கரச்சல் பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் வேலை பார்தது வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து தங்கி இருக்கும் அறைக்கு அவர் செலக்ரச்சல் அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த துர்கேஷ் யாதவ்வை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துர்கேஷ் யாதவ் உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
அரியானவை சேர்ந்தவர் குறிஜித் சய்யது (வயது 45). தொழிலாளி. இவர் ஹரியானவில் இருந்து கண்டெயினர் லாரியில் மாட்டு தீவனங்களை ஏற்றி கோவை வந்தார். பின்னர் கோவையில் தீவனங்களை இறக்கிவிட்டு அரியான திரும்பினார். அப்போது லாரி வடக்கிபாளையம் சூலக்கல் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது லாரியின் மேலே மின்சார வயர் உரசியது. அதனை குறிஜித் சய்யது மரக்கட்டையால் நகர்த்தினார்.
அதில் வயர் தவறி அவர் மீது பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடக்கிபா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
- விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராம் மகன் தங்கமாயி (26). இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்றிரவு உறவினரை பார்ப்பதற்காக காளப்பன்பட்டிக்கு மானூத்து வழியாக இதே ஊரைச் சேர்ந்த நண்பர் உக்கிரபாண்டி மகன் தினேசுடன்(25) பைக்கில் சென்றார். மானூத்து அருகே சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளின்றி தங்கமாயி பரிதாபமாக இறந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- முந்திரி தோப்பில் வாலிபர் நிர்வாணமாக தூக்கில் தொங்கினார்
- கொலையா-தற்கொலையா? என விசாரணை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக தொங்கினார்.
அவர் அணிந்திருந்த பேண்ட்டால் கழுத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எப்படி இங்கு வந்தார், எப்படி இறந்தார், அவரை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெயர், முகவரி ஏதுவும் தெரியாததால் போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் இறந்தவர் உடலை வைத்து விசாரித்து வருகின்றனர்.
- கோவிலை வாலிபர் சூறையாடினார்.
- கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராம மக்களால் சமீபத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு தேர் செய்யும் பணிக்காக பொருட்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வாங்கி, அதனை பெயிண்டு அடித்து வைத்திருந்தனர். அதேபோல் சாமியை ஊர்வலமாக கொண்டு செல்லும் சகடையும் இருந்தது. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கோவில் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்ற ஒரு வாலிபர், சகடை மற்றும் தேர் கட்டுவதற்காக வைத்திருந்த விலை உயர்ந்த மரங்கள் ஆகியவற்றையும், சாமிக்கு பயன்படுத்தும் சேலைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் கோவில் சுவற்றில் இருந்த கேமராக்களை அடித்து உடைத்ததோடு, மின்சாதன பொருளையும் அடித்து உடைத்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் சுற்றுச்சுவரை ஏறி குதித்து அருகில் இருந்த டாஸ்மாக் கடை பகுதிக்கு தப்பி ஓடினார். ஆனால் விரட்டிச்சென்ற கிராம மக்கள், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இது பற்றி செந்துறை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி, அந்த வாலிபரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாலிபர் கஞ்சா மற்றும் குடிபோதையில் இந்த செயலை செய்தாரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு இந்த செயலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலை வாலிபர் சூறையாடிய சம்பவத்தை அறிந்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா்.
- உதகை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஊட்டி
ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(23). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் நாகராஜ் தனது நண்பா்கள் 2 பேருடன் ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க ஊட்டிக்கு வந்தார். 3 பேரும் ஒரு தனியாா்ஓட்டலில் அறை எடுத்து தங்கினா். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாகராஜ் கூறியதைத் தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரை அருகிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் 3 பேரும் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பினா். இந்நிலையில் வரும் வழியில் நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவருடைய நண்பா்கள் அவரை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து உதகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
- வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- இருசக்கர வாகனம் மீது கார் மோதியது
கரூர்:
கரூர் மாவட்டம், பாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் மகாலிங்கம் (வயது 25) இவர், சம்பவத்தன்று இரவு, வெள்ளியணை சாலை, வெங்ககல்பட்டி பாலத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த மகாலிங்கத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக மகாலிங்கம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரி வடிகாலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்
- தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்
அரியலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி (வயது 36), கொத்தனார். இவருக்கு சிறுவயதிலிருந்து வலிப்பு நோய் உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சின்னமணி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டையடித்து விட்டு நண்பர் தங்கராஜ் வீட்டில் தங்கி உள்ளார். நேற்று காலை உடையான் ஏரி வடிகாலுக்கு சென்ற சின்னமணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு ஒரு அடி ஆழமே உள்ள தண்ணீரில் குப்புற விழுந்தார். இதில், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்