search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth jail"

    • திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோவில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு வாலிபர் பக்தர்களை மிரட்டியுள்ளார்.
    • பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர்மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் திவ்யராஜ் (வயது 22). இவர் திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோவில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு பக்தர்களை மிரட்டியுள்ளார்.

    தகவலறிந்த திருக்கழுகுன்றம் போலீசார் திவ்யராஜை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது போலீசாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர்மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    பைக் மோதி முதியவர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி (62). கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் காசி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த நூங்கம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சத்தியராஜிடம் (23) விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர் விபத்து ஏற்படுத்திய சத்தியராஜிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து சத்தியராஜை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
    விருத்தாசலம் அருகே நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா பெரியகோட்டிமூளை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 26). இவரது நண்பர் விஜயேந்திரன். இவருக்கு 16 வயதில் காதலி ஒருவர் உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி வாலிபர் சத்தியமூர்த்தி தனது நண்பனின் காதலியிடம் விஜயேந்திரன் கோவையில் வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை பார்க்க வரும்படி அழைத்தார்.

    அதற்கு அந்த இளம்பெண் மறுத்து விட்டார். உடனே சத்தியமூர்த்தி வராவிட்டால் போலீஸ் வழக்கு பதிவாகிவிடும் என மிரட்டினார். இதனைத்தொடர்ந்து அந்த இளம்பெண் சத்தியமூர்த்தியுடன் கோவைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று அங்கு வைத்து ஒரு வாரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் தன் மகளை காணவில்லை என சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் ஸ்ரீமுஷ்ணம் பஸ்நிலையத்தில் சத்தியமூர்த்தி அந்த இளம்பெண்ணுடன் பஸ்சில் வந்து இறங்கினார். உடனே அங்கு நின்ற போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதீமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியது. சத்தியமூர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சத்தியமூர்த்திக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

    இந்தவழக்கில் அரசு சார்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
    கொலை வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சாந்தி (வயது 20). இவர், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மனோகரனுக்கும் (33) இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அந்த சமயத்தில் சாந்தியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் தேனிமலையை சேர்ந்த முருகன் (35), மனோகரனை தட்டி கேட்டு உள்ளார்.

    அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மனோகரன், முருகனை தள்ளியுள்ளார்.

    இதில் கீழே விழுந்த முருகன் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்தார். அதில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள மனோகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #jewelrycase #court

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கன்னங்குறிச்சி ஜட்ஜ் ரோடு, நடராஜன் நகரை சேர்ந்தவர் வெங்கட். இவரது மனைவி அனுஷா (வயது 24). இவர் 27-5-2013 அன்று கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அனுஷா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி அனுஷாவிடம் நகையை திருடிய சேலம் பொன்னம்மாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் சி.ஜே.எம். கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    நீதிபதி திருஞாணம் வழக்கை விசாரித்து மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். #jewelrycase #court

    பெண்ணை அரிவாளால் வெட்டி 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கரூர்:

    தென்னிலை அருகே உள்ள கிடைக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஈஸ்வரி(வயது 45). இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தென்னிலையில் இருந்து கிடைக்காரன்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை கீழே தள்ளி ஈஸ்வரியை அரிவாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு, அவர் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, செம்பட்டியை சேர்ந்த ராயத்அலி என்பவருடைய மகன் ஹம்ஷாஉசேன்(22) மற்றும் ஒரு சிறுவன் என 2 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த கரூர் மகிளா கோர்ட்டு நீதிபதி சசிகலா, பெண்ணை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக ஹம்ஷாஉசேனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தங்க சங்கிலியை பறித்ததற்காக 3 மாதங்களும், ரூ.500 அபராதமும் கட்ட தீர்ப்பு அளித்தார். மேலும் அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் அவனது வழக்கு கரூர் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×