search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youths"

    • 6 முதல் 14 வயது வரையுடைய குழந்தைகளின் கல்வி சேர்க்கை அதிகரிப்பு.
    • 5.6 சதவீத இளைஞர்கள் மட்டுமே தொழில் பயிற்சி சார்ந்த படிப்புகளில் சேர்கின்றனர்.

    நாட்டில் மாணவர் சேர்க்கை நிலை குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொண்டு இந்த அசெர் அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்தாண்டுக்கான ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    6 முதல் 14 வயது வரையுடைய குழந்தைகளின் கல்வி சேர்க்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டில் 96.6 சதவீதமாக இருந்த இந்த விகிதம், 2014-ல் 96.7 சதவீதமாகவும், 2018-ல் 97.2 சதவீதமாகவும், 2022-ல் 98.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 

    14 முதல் 18 வயது வரை உடைய இளைஞர்களில் 86.8 சதவீதம் பேர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுகின்றனர். அவர்களில் 55 சதவீதம் பேர் மானுடவியல் (தத்துவம், ஆன்மிகம், மொழியியல், மொழி, வரலாறு, கலை படிப்புகள்) படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். இதற்கு அடுத்தப்படியாக, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளை, இளைஞர்கள்

    'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளை பொருத்தவரை ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கை பெறுகின்றனர்.

    14 முதல் 18 வயது வரையுடைய இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடங்களை அவர்களின் மாநில மொழியில் சரளமாக படிக்க இயலவில்லை.

    மேலும், 5.6 சதவீத இளைஞர்கள் மட்டுமே தொழில் பயிற்சி மற்றும் அது சார்ந்த படிப்புகளில் தற்போது சேர்க்கை பெறுகின்றனர்.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    • சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் 27 -ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக 7 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 2,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெறுகின்றன.

    அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், தாசில்தார்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில், சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

    Voters.eci.gov.in என்கிற இணையதளம், VSP மொபைல் செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து வரும் 2024 ஜனவரி 5ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியல் என்பதால், இந்தாண்டுக்கான வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி முக்கியத்துவம் பெறுகிறது.

    வீடுவீடாக செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக, இறந்தோர் விவரங்கள், பெயர் சேர்ப்பதற்காக புதியவர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    வருகிற 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்படும். வாக்காளர்கள் தவறாமல் வரைவு பட்டியலை பார்வையிடவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், புகைப்பட விவரங்கள், முகவரி, தொகுதி சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். மாறுதல்கள் இருப்பின் சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில், தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்திவருகிறது. இதற்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், தவறாமல், தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
    • பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது,

     பல்லடம், செப்.3-

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி போலீஸ் சோதனை சாவடியில், காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.

    இதையடுத்து அவர்களது மோட்டார் சைக்கிளில் சோதனை இட்டபோது அதில் செல்போன்கள் மற்றும் நகைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது, அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கருப்பன்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன் ராஜா (வயது 21) மற்றும் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியை சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்பவரது மகன் ஜெபராஜ் (வயது 22) என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது, இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 2.1/2பவுன் தங்கச் செயின், 1/4 பவுன் தங்க மோதிரம், மற்றும் 7 செல்போன்கள், மற்றும் கவரிங் நகைகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நிகழ்ச்சியில் கல்வித்துறையில் முன்னேற்றம், இலவச சட்ட முகாம்கள் உள்ளிட்ட அம்சம்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் தேரடி வீதியில் இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இளைஞர்கள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாநிலத் தலைவரும், நிறுவன தலைவருமான மணக்கரை பேச்சிமுத்து தலைமை தாங்கினார்.

    மாநில இளைஞரணி செயலாளர் கல்லூர் கார்த்திக் பாண்டியன், வக்கீல் பிரிவு செயலாளர் முத்து, மாநில கொள்கை பரப்பு செயலாளர் கென்னடி, தென் மண்டல செயலாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பூல்பாண்டியன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் இளைஞ ர்களுக்கு எவ்வாறு படிக்க வேண்டும்?. கல்வித்துறையில் முன்னேற்றம், இலவச சட்ட முகாம்கள் உள்ளிட்ட அம்சம்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் வக்கீல் மகேஷ், கவுரவ சட்ட ஆலோசகரும், மதுரை உயர்நீதிமன்ற வக்கீலுமான ஆனந்த முருகன், மாநில மகளிர் அணி செயலாளர் ரேணுகா தேவி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஈஸ்வரி, நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் விக்கி, மாவட்ட துணைச் செயலாளர் காசிபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் நெல்லை சட்ட ஆலோசகர் முருகன், தூத்துக்குடி இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயலாளர்கள் முத்துராமலிங்கம் (மதுரை), கோபிநாத் (சிவகங்கை), நெல்லை வக்கீல் அணி செயலாளர் அருணாச்சலம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ஐகோர்ட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்திருந்தனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. பலமுறை போலீசார் நடவடிக்கை எடுத்தும் இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை .

    இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை சோதனை சாவடியில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    இதையடுத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்யம் பத்ரா என்பவரது மகன் பிஸ்வாம்பர் பத்ரா(23) மற்றும் ஹோட்டாக்கர்மி என்பவரது மகன் ரஞ்சன் கர்மி(31) என தெரியவந்தது.

    2 பேரும் திருப்பூர் அருகே உள்ள இடுவம்பாளையம் பகுதியில் தங்கி கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் “பைக்” ரேசில் இளைஞர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்'களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக்ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

    • மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடிச்சென்றனர்.
    • போலீசார் 3 பேரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர் வடகரை அருகே உள்ள சுந்தர பாண்டிய புரத்தில் சுடலை மாடன் சுவாமி கோவில் மற்றும் திருச்சிற்றம்பலம் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் மர்ம நபர்கள் சிலர் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடிச்சென்றனர். இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இதற்கிடையே அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக சில்லரை காசுகளை மாற்று வதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கிருந்த 3 பேரும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகை குமார்(வயது 27), சின்ன வைரவன் தெருவை சேர்ந்த மேத்தா என்ற கருவாலி (18), முஸ்லிம் தெருவை சேர்ந்த மாடசாமி (21) என்பதும், அவர்கள் கோவில் உண்டியல்களில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆனந்த்க்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்ததால் தினமும் மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
    • இதனால் மன வருத்தம் அடைந்த ஆனந்த் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்ததை எடுத்துக் குடித்துவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் சமீர்வியாஸ் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 39). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்ததால் மது தினமும் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளனர்.

    இதனை அவரது தாயார் ஜான்சி கண்டித்துள்ளார். இதனால் மேலும் மன வருத்தம் அடைந்த ஆனந்த் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்ததை எடுத்துக் குடித்துவிட்டார். இதனை பார்த்த ஜான்சி உடனே மகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்த் உயிரிழந்தார். இது குறித்து தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்

    தூத்துக்குடி பாத்திமா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவர் தற்போது திரேஸ்புரம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது மகன் அஜய்(21) தனது தந்தையுடன் சேர்ந்து கடல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இது குறித்து தூத்துக்குடி வட பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யப்பன் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றார்.
    • சி.சி.டி.வி. யில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அய்யப்பன். இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றார்.

    சம்பவத்தன்று சுமார் 50 வாகனங்களை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.அதனை வைத்து போலீசார் 2 வாலிபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது.
    • 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே நாய் குரைத்துள்ளது.

    இதனை கண்ட அந்த கிராம இளைஞர்கள் சந்தேகத்துடன் வந்து பார்த்தவுடன் 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் குருவார்பட்டி மற்றும் கோடாங்கிபட்டி இளைஞர்கள் சேர்ந்து கயிறு மூலம் மானை மீட்டு ஆட்டோ மூலம் விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் குருமலை காப்பு காட்டில் மானை விட்டனர்.

    • தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீவித்யன்
    • நேற்று இரவு இவர் வேலை முடிந்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ஸ்ரீவித்யன் (வயது26). வெல்டர்.

    நேற்று இரவு இவர் வேலை முடிந்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்ட பின்னர் தூங்க சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு பழனிச்சாமி கழிவறைக்கு சென்று திறந்து பார்க்கும் போது அங்கு ஸ்ரீவித்யன் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் நிலையில் இருந்துள்ளார்.

    மற்றொரு சம்பவம்

    அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (34) வெல்டர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. நேற்று முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப்போட்ட நிலையில் காணப்பட்டார்.

    அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் முருகேசன் உயிரிழந்தார்.

    இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி மடத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 2 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மடத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 2 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மடத்தூர் பி அன்ட் டி காலனி பகுதியில் 2 வாலிபர்கள் மது போதையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.

    இதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த செல்லையா என்ற திருமணி சிங் (வயது22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடியவர் பி அன்ட் டி காலனியை சேர்ந்த குட்டி (22) என்பதும் தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர். 

    ×