search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.ஐ தொழிநுட்பம்"

    • வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது.
    • இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

    உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்று கூறிவந்த நிலை வழக்கொழிந்து தற்போது உலகம் செயற்கைத் நுண்ணறிவான ஏ.ஐ மயமாக மாறி வருகிறது என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் இணங்கத் தொடங்கியுள்ளது. இந்த இணக்கம் ஒரு படி மேலே சென்று மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஏ.ஐ மாறும் என்ற அச்சமும் பரவி வருகிறது.

    போலியான DEEP FAKE புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடங்கி மனிதர்களின் வேலையை பறிப்பது வரை இந்த 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஏ.ஐ மாறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏ.ஐ மூலம் இயங்கும் சாட் பாட்கள் [CHAT BOT] மனிதர்களின் கட்டளை இன்றியே பொய் சொல்லத் தொடங்கியுள்ளது.

     

    வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது. அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று சேல்ஸ் பிரிவில் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ரோபோ கால் சர்வீஸ் மூலம் பிளான்ட் என்று அதிநவீன ஏ.ஐ சாட் பாட்டை பணியமர்த்தியுள்ளனர்.

     

    இந்த சாட் பாட் வாடிக்கையாளர்களிடம் மனிதரைகளைப் போலவே பேசுமாம். இந்நிலையில் நிறுவனத்தின் முன்னாள் நின்றுகொண்டு விஷயம் தெரிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவே, போனை அட்டென்ட் செய்த சாட் பாட் பெண்ணைப் போலவே அவரிடம் பேசியுள்ளது.தான் ஒரு சாட் பாட் தான் என தனது குரலில் காட்டிக்கொள்ளவில்லை.

     

    தான் உயிருள்ள மனிதன் தான் என நம்பவைக்க நிறுவனத்துக்குள் வேலை நேர இரைச்சல் இருப்பது போன்ற சத்தங்களை உருவாக்கி அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியுள்ளது சாட் பாட். ஆனால் ஏ.ஐ சாட்பாட்டை உருவாக்கிய நிறுவனம் இது எதையும் புரோக்ராம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.ஐ ஆகவே இவ்வாறு ஏமாற்ற கற்றுக்கொண்டுள்ளது.

     

    இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு ஏ.ஐ சாட் பாட் களுடன் உரையாடி வல்லுநர்கள் நடத்திய செய்து ஏஐ தொழில்நுட்ப பாட்கள் மனிதர்களின் கட்டளை இல்லாமலேயே இந்த செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மனித குலத்துக்கு வருங்காலங்களில் ஏஐ மூலம் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றுஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

     

    ×