என் மலர்
நீங்கள் தேடியது "கலெக்டர்கள்"
- பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது.
- ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது.
கோவை:
தொடர் மழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூழாங்கல்லாறு, அப்பர் நீராறு, கீழ் நீராறு, காடாம்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர் மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வரை மிக கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக நீரோடைகளில் தண்ணீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
நீலகிரியில் அதிவேகமாக காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க தமிழகத்தின் வேறு மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும்.
மேலும் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கூடலூருக்கு அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற கனரக சரக்கு வாகனங்கள் ஒரு வாரத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
புதுடெல்லி:
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் சிக்கியது.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என உத்தரவிட்டது.
சம்மனுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கு முக்கியமானது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதால் குறிப்பிட்ட தேதியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டிப்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் நடவடிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்கள் ஆஜராகும் பட்சத்தில் தேர்தல் பணி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி வருகிற 25-ந்தேதி மணல் கொள்ளை வழக்கு சம்பந்தமாக கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மாகாந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இைதயொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மாகாந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பங்கேற்று அணி வகுப்பு மரியாதையை ஏற்று 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும அவர் பல்வேறு அரசு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். தொடர்ந்து 1800 மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும் அவர் சமாதான புறாவையும் பறக்க விடுவதுடன் பல்வே று துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்க உள்ளார்.
இதற்காக முதற்கட்டமாக மைதானம் முழுவதும் சமன்படுத்தப்பட்டுள்ளது.பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களுக்கான இடத்தில் சாமியானா பந்தல்ேபாடப்பட்டுள்ளது. ேமலும் விழாவில் கலந்து கொள்பவர்களுக்காக குடிநீர், கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒத்திகை நிகழ்ச்சி
கொடியேற்றும் கம்பமும் சீரமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான நேற்று சுதந்திரதினவிழா ஒத்திகை நடந்தது. அதன்படி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்ற படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலனும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடந்தது. இதில் 8 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடி ஒத்திகையில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி காந்தி மைதானம் முழுவதும் போலீ ஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை நாமக்கல் நல்லி பாளையம் அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா கொடியேற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் அவர் நல உதவிகளையும் வழங்குகிறார். இதையொட்டி அந்த மைதானம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுதந்திர தினவிழாவையொட்டி மக்கள் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
குறிப்பாக சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பதுகாப்பு போடப்பட்டுள்ளன. இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வாழப்படி, ஓமலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவில், மலைக்கோட்டை உள்பட முக்கிய இடங்களிலும் புறநகரில் திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளி பாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மற்றும் நாமக்கல் வழியாக வடமாநிலங்களில் இருந்து செல்லும் ரெயில்களில் மோப்ப நாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் மூலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும்டி ரெயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக வரும் நபர்களையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காரைக்கால் மாவட்த்திலுள்ள பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை4.30 மணி முதல் திடீரென பனிமூட்டம் போல் புகைமூட்டம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும் சுவாசக் கோளாறினால் அவதி அடைந்தனர்.
- இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஆகியோர் புகை குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்,
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டம் மேல வாஞ்சூர், கீழவாஞ்சூர், நிரவி, திரு.பட்டினம், காரைக்கால் வடக்கு, தெற்கு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், திட்டச்சேரி திருமருகல் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை4.30 மணி முதல் திடீரென பனிமூட்டம் போல் புகைமூட்டம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும் சுவாசக் கோளாறினால் அவதி அடைந்தனர். மேலும் புகை மூட்டம், கடற்கரைப் பகுதியை ஒட்டிய பகுதியிலிருந்து வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஆகியோர் புகை குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதனை அடுத்து நாகப்பட்டினம் தீயணைப்பு துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் உள்ள பழைய இரும்பு உருக்கும் தொழிற்சா லையிலிருந்து வெளியேறிய புகையினால், பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிரு ப்பதாக தகவல் வந்தன. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்மண்டலம் காரணமாக காற்று சுழற்சி இல்லாத காரணத்தி னால், புகை நாகை, காரைக்கால் மாவட்டங்க ளில் பனி போல் சூழ்ந்துள்ள தும் தெரியவந்தது. இதனையடு த்து காரை க்காலில் இயங்கிய இரும்பு உருக்கும் பணியை நிறுத்த நாகப்ப ட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவி ட்டனர். அதன் பேரில், இரும்பு உருக்கும் பணி நிறுத்தப்ப ட்டாலும் அதிலிருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டு இருக்கிறது. புகைமூட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையி ல்லை என காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட கலெக்ட ர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.
சேலம்:
தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவிதா வேலூர் மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், கோவை (வடக்கு) வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், அப்பொறுப்பில் இருந்த சதீஷ்குமார், சென்னை- கன்னியாகுமரி தொழிற்நுட்ப திட்ட மறு குடியமர்வு அலுவலரா–கவும், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.