என் மலர்
நீங்கள் தேடியது "சிக்கியது"
- லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 மணி நேரம் விசாரணை
- போலீசார் மடக்கி பிடித்தனர்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர் அப்போது சார் பதிவாளர் பொறுப்பு அன்வர்அலி வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
கொட்டாரத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அன்வர்அலியை மந்தாரம்புதூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்வர் அலியிடம் லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அவரிடம் இருந்து ரூ.41 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 1 மணி வரை நீடித்தது.நேற்று ஒரே நாளில் 30 பத்திர பதிவுகள் நடந்துள்ளது. அதில் ஏதாவது பணம் பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் பணம் வாங்கிய தற்கான சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 15 நாட்களாக தான் சார்பதிவாளர் பொறுப்பு பணியை அன்வர்அலி கவனித்து வருகிறார். இந்த நிலையில் அவர் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி யிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்வர்அலி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீ சார் பரிந்துரை செய்துள்ளனர். எனவே அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் கிராம நிர்வாக அதிகாரி ஒருவரிடம் இருந்து ரூ.17,743 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சார்பதி வாளர் அலுவ லகத்திலும் பணம் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
- அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
சேலம்:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காட்பாடி முதல் சேலம் வரை சோதனை செய்தனர்.
அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த பேக்கில் 4 பண்டல்களில் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதை ரெயிலில் கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் விசாரணை
- கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே அக்கரை கடைத்தெருவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 2 உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து இருந்தனர். அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இது குறித்து தலைவர் கபிரியல் ரவி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். அப்போது கோவிலில் 2 கைரேகைகள் சிக்கியது.
அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்த்து வரு கிறார்கள். மேலும் கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஆலயங்களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வரு கிறார்கள். எனவே அதே கொள்ளையர்கள் இங்கும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது
- துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.
விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.
ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பியது.
விசைப்படகு மீனவர்கள் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மறுநாள் சுனாமி நினைவு நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு ஆலய வழிபாடுகளிலும் கலந்து கொண்டு நேற்று முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.
ஒரு சில படகுகள் சுனாமி நினைவு நாள் முடிந்ததும் மீன் பிடிக்க சென்றன. இதில் ஒரு படகு இன்று காலை கரை திரும்பியது. இந்த படகில் திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட இந்த மீனை கரை சேர்க்க முடியாததால் மீனவர்கள் 8 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். ஏல முடிவில் இந்த மீன் ரூ.61 ஆயிரத்திற்கு விலைபோனது. இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வன ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்
- குரங்குகளை வன ஊழியர்கள் களியல் காட்டுப் பகுதிக்கு கொண்டு விட்டனர்.
நாகர்கோவில்:
பத்நாபபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
இந்த குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்தது. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இதையடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வனத்துறை ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
வேளிமலை வன சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இடத்தை பார்வையிட்டனர்.பின்னர் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த கூண்டில் ஒரே நேரத்தில் 45 குரங்குகள் சிக்கியது. நேற்று ஒரே நாளில் 45 குரங்குகள் சிக்கியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதையடுத்து பிடிபட்ட குரங்குகளை வன ஊழியர்கள் களியல் காட்டுப்பகுதிக்கு கொண்டு விட்டனர். 45 குரங்குகள் ஒரே இடத்தில் பிடிபட்டதையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
- சேலம் அப்சரா இறக்கத்தில் இருந்து குகை நோக்கி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆட்டோ விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் மாணவர்கள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
சேலம்:
சேலம் அப்சரா இறக்கத்தில் இருந்து குகை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று பள்ளி மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.
அப்போது ஆட்டோவின் முன்பு சென்று கொண்டி ருந்த மோட்டார் சைக்கிளின் குறுக்கே குடிபோதையில் தள்ளாடிய படி ஒருவர் திடீரென வந்தார். இத னால் தடுமாறிய மோட்டார் சைக்கிளில் சென்றவர் அவர் மீது மோதி கிேழ விழுந்தார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டு ஆட்டோைவ நிறுத்த முயன்றார். ஆனால் நிலை தடுமாறிய ஆட்டோ அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
உடனடியாக அவர்கள் மாற்று வண்டியில் ஏற்றி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- சேலம் கொண்டலாம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலில் சிக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அதில் 600 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் ஒரு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ப்வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் 600 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. மேலும் வாகனத்தில் இருந்த கொண்டலாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், பால சவுந்தர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலையில் வாங்கி மாவாக அரைத்து அதனை ஓட்டல்களில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது . இதையடுத்து அவர்களை கைது செய்து அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
- கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
- ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் போலீசார் வடக்கு பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வடக்கு பேட்டை மார்க்கெட் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ஒவ்வொரு கடையாக சோதனை செய்தனர். அப்போது ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும்படியாக சிறிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது சத்தியமங்கலம் வடக்குப்பட்டி பகுதியை சேர்ந்த ஆசாராம் (32)என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவருக்கு உதவியாக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் அதே பகுதியில் உள்ள மற்றொரு கடைக்கு போலீசார் சென்றபோது கடையின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். போலீசை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார்.
அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி(48) என்பதும், பையை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ ஹான்ஸ், புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இவருக்கு உதவியாக இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேட்டன் என்பவரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.