என் மலர்
நீங்கள் தேடியது "சிங்கப்பூர்"
- இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று.
- இந்தியா-சிங்கப்பூர் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது.
புவனேஸ்வர்:
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், அடுத்த மாதம் (ஜனவரி) ஒடிசாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங், ஒடிசா தலைமைச் செயலகத்தில் முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்தபோது இந்த தகவலை உறுதி செய்தார்.
ஒடிசாவில் நடைபெறும் மாநில முதலீட்டாளர் உச்சிமாநாட்டின் (மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2025) முதல் வெளிநாட்டு பங்குதாரராக சிங்கப்பூர் இணைந்துள்ளது.
இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று. இந்தியாவும் சிங்கப்பூரில் ஐ.டி., வங்கி மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் மூலம் வலுவான முதலீட்டை கொண்டுள்ளது.
இந்தியா-சிங்கப்பூர் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. பரஸ்பர வளர்ச்சி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன.
சிங்கப்பூரும் இந்தியாவும் 60 ஆண்டுகால ராஜதந்திர உறவைக் கொண்டாடுகின்றன. இரு நாடுகளும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன. இந்த நட்புறவு இப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கலாசார பரிமாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு மூலோபாய கூட்டாண்மையாக உருவாகியுள்ளது. இந்த இருதரப்பு உறவை நினைவுகூரும் வகையில், சிங்கப்பூர் அதிபர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.
ஒடிசா முதல்-மந்திரி மாஜி கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றபோது, சிங்கப்பூர் அதிபர் ஒடிசாவிற்கு வருகை தர ஏற்பாடு செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் அதிபர் தனது இந்திய பயணத்தின் போது ஒடிசாவுக்கு வர முடிவு செய்துள்ளார்.
- மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- பிரிஸ்பேனில் அமைக்கப்பட்டுள்ள 4-வது இந்திய தூதரகத்தை ஜெய்சங்கர் திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை முதல் 8-ம் தேதி வரை அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதலில் ஆஸ்திரேலியா செல்லும் அவர், அங்குள்ள பிரிஸ்பேன் நகரில் ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ள 4-வது இந்திய தூதரகத்தை திறந்து வைக்கிறார். அதன்பின், கான்பெர்ரா நகரில் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்குடன் இணைந்து 15-வது வெளியுறவு மந்திரிகளின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
மேலும், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மந்திரி ஜெய்சங்கர், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர், தொழில் துறையினர், ஊடக அமைப்பினர் மற்றும் அந்நாட்டு மந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
இதையடுத்து, 8-ம் தேதி சிங்கப்பூர் செல்லும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் 8-வது ஆசியான் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதன்பின், அந்நாட்டின் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, இந்தியா-சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
- தனியார் நிறுவனங்களுக்கு குறைவான அரசு கட்டுப்பாடுகள் இருப்பதுதான் சுதந்திரமான பொருளாதாரம் ஆகும்.
- பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.
சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை முந்தி ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு குறைவான அரசு கட்டுப்பாடுகள் இருப்பதும், சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட சந்தையின் விலைகள் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் நிர்ணயிப்பதும், குறிப்பாக இதற்குள் அரசின் தலையீடு எதுவும் இல்லாமல் இருப்பது தான் சுதந்திரமான பொருளாதாரம் ஆகும்.
ஃப்ரேசர் நிறுவனம் நடத்திய உலகின் பொருளாதார சுதந்திரம் பற்றிய அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையில் சிங்கப்பூர் 8.55 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் ஹாங்காங் 8.58 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் ஆசியாவின் சிறந்த நிதி நிலையமாக ஹாங்காங் உருவெடுத்துள்ளது.
பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்தும் 4 ஆம் இடத்தில் நியூசிலாந்தும் 5 ஆம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. 3.02 புள்ளிகள் பெற்று வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.
- அரசு முறை பயணமாக புரூணே சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.
- சிங்கப்பூரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்தியா-சிங்கப்பூர் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது, மிகமுக்கிய விவகாரங்களில் கூட்டணியை ஆழப்படுத்துவது மற்றும் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "சிங்கப்பூரில் தரையிறங்கினேன். இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஏராளமான சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன்."
"இந்தியாவின் சீர்திருத்தங்கள் மற்றும் யுவ சக்தி திறமை நம் நாட்டை சிறந்த முதலீட்டு இடமாக மாற்றுகிறது. இதுதவிர நெருங்கிய கலாச்சார உறவுகளையும் எதிர்பார்க்கிறோம்," என பதிவிட்டுள்ளார்.
#WATCH | A woman ties rakhi to Prime Minister Narendra Modi as he arrives at a hotel in Singapore. Members of the Indian diaspora welcomed PM Modi on his arrival in Singapore. pic.twitter.com/ZgiUsOxa46
— ANI (@ANI) September 4, 2024
சிங்கப்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வளம்சாவளியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்கள் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
#WATCH | Prime Minister Narendra Modi tries his hands on a dhol. Members of the Indian diaspora welcomed PM Modi on his arrival in Singapore. pic.twitter.com/JBWG5Bnrzk
— ANI (@ANI) September 4, 2024
மேலும், அவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி அவரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டோல் இசைகருவியை இசைத்து மகிழ்ந்தார்.
- அமைச்சர் துரைமுருகனின் சிங்கப்பூர் பயணம் திடீர் பயணம் அல்ல.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து கொண்டு வருவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 19 நாள் பயணமாக சென்றுள்ள அவர், அவரும் 15-ந் தேதி சென்னை திரும்ப இருக்கிறார்.
இந்த நிலையில், தி.மு.க. பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் நேற்று காலை திடீரென சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
ஏற்கனவே, கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு சூடாக பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய துரைமுருகன், அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமரசத்தால் அமைதியானார். இந்த நிலையில்தான், அவர் தற்போது திடீரென சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, "அமைச்சர் துரைமுருகனின் சிங்கப்பூர் பயணம் திடீர் பயணம் அல்ல. ஏற்கனவே திட்டமிட்டதுதான். மருத்துவ பரிசோதனைக்காக அவர் அங்கு சென்றிருக்கிறார்.
அங்குள்ள இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயராமனிடம் ஆலோசனைக்கு இணங்க ஆண்டுக்கு ஒருமுறை அவரை சென்று சந்தித்து வருகிறார். மற்றபடி ஒன்றும் இல்லை. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்துவிட்டார்" என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் சென்றுள்ள அமைச்சர் துரைமுருகன் வரும் 4-ந்தேதி சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.
- கணவன் கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார்.
- சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
சிங்கப்பூரில் 37 வயதான டான் சியாங்லாங்கிற்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தனது மனைவியை பிரிந்தார் சியாங்லாங். ஆனால் அவர்கள் விவாகரத்து பெறவில்லை.
சிங்கப்பூர் சட்டப்படி திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டும் தான் விவாகரத்து கோரமுடியும். ஆனால் தம்பதியினரில் யாராவது ஒருவரின் மேல் குற்ற வழக்கு இருந்தால் சீக்கிரம் விவாகரத்து பெறமுடியும்.
ஆகையால் கணவன் ஒரு திட்டம் தீட்டியுள்ளான். 500 கிராம் அளவிலான கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார். இவற்றில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்துள்ளது.
பின்னர் போலீசார் அவரது காரை சோதனை செய்த போது போதைப்பொருட்களை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் கஞ்சா வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அப்போது அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போது அவரின் கணவன் கஞ்சா செடிகள் நட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
தனது மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது இவருக்கு சுமார் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பபட்டது.
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பயண தேதி இன்னும் இறுதியாகவில்லை.
- இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக விரைவில் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். இந்தியா-சிங்கப்பூா் அமைச்சா்கள் அளவிலான உயர்மட்ட சந்திப்பு கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது.
இதில், இந்திய தரப்பில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வா்த்தகம்-தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ரெயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் கொண்ட குழு பங்கேற்றது.
இக்கூட்டம் முடிந்தபிறகு சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் கூறும் போது, `அமைச்சா்களின் கூட்டம் ஆக்கபூா்வமானதாக இருந்தது. மேலும் பிரதமா் மோடியின் சிங்கப்பூா் பயணத்துக்கு களமாகவும் அமைந்தது. பிரதமர் மோடி விரைவில் சிங்கப்பூருக்கு வர உள்ளார். அவரது பயண தேதி இன்னும் இறுதியாகவில்லை.
மேம்பட்ட உற்பத்தி, செமி-கண்டக்டா்கள், விமானப் போக்குவரத்து, கடல்வழி இணைப்பு ஆகிய புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதங்களைத் தொடங்கியுள்ளோம்.
சுமாா் 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாடு இப்போது அதன் விமானப் போக்குவரத்து துறையில் ஒரு பெரிய மேம்படுத்தலைத் தொடங்கியுள்ளது. இச்சூழலில் இந்தியாவுடன் நாங்கள் ஒத்துழைப்பில் இருப்பது மிகவும் சிறந்தது' என்றார்.
பிரதமர் மோடி யின் சிங்கப்பூர் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அவரது பயணத்தில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" தற்பொழுது வெளியாகியுள்ளது.
- பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பால் டப்பா பாடியுள்ளார். மக்காமிஷி என்ற வார்த்தைக்கு கெத்து, திமிரு, ஸ்வாக் என்று அர்த்தம். இப்பாடம் ஒரு ஜாலியான வைப் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடலின் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் 'உழைப்பாளர் தினம்' சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
- படம் நிறைவடைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.
சென்ற வாரம் சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் 'உழைப்பாளர் தினம்' சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் தமிழ்நாட்டில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். முதல் பாதியில் காமெடி காதல் என்று பரபரப்புடன் சென்றது. இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் கனமான காட்சிப்படுத்துதலில் சென்ற கதை கிளைமாக்ஸ் இல் யாரும் எதிர்பார்க்காத அழகான திருப்பத்துடன் நிறைவடைந்தது.
படம் நிறைவடைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். அதில் உச்ச பட்சமாக ஒரு வெளிநாட்டு தொழிலாளர், நடிகரும் இணை தயாரிப்பாளருமான 'சிங்கப்பூர்' துரைராஜ் அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு "எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையை எங்களுடைய குடும்பங்களுக்கு கூட தெரியாது, எங்களுடைய கஷ்டம் எங்களுடைய இருக்கட்டும் எதற்கு குடும்பத்திற்கு என்று சொல்ல மாட்டோம். ஆனால், எங்களுடைய வாழ்க்கையை மிக அழகாக காட்சி ஆக்கி அதனை கமர்சியல் உடன் சிரிக்க வைத்து எங்களையும் சிந்திக்க வைத்தது 'உழைப்பாளர் தினம்' படம் என்று ஆனந்த கண்ணீருடன் நன்றி பாராட்டியுள்ளார் .
மற்றொரு வெளிநாட்டு தொழிலாளர் "என்றாவது ஒருநாள் எனது சொந்த ஊரில் வெற்றிகரமாக சென்று நிரந்தரமாக வாழ்வேன் அதற்கு 'உழைப்பாளர் தினம்' படம் தான் எனக்கு உத்வேகம்" என்றார். படம் திரைக்கு வரும் போதும் மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் துபாயில் சிறப்பு காட்சி திரையிட படக் குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர்.
நடிகர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் சென்ற வருடம் வெளியான 'வட்டார வழக்கு' படத்தில் ஆக்ஷனில் மிரட்டி இருந்தார். 'உழைப்பாளர் தினம்' படத்தை நடித்து இயக்கி நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. "வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தொழிலாளர்களும் இந்த உழைப்பாளர் தினம் படத்தைக் கொண்டாடுவார்கள்" என்கிறார் இயக்குனர் மற்றும் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்கும்.
- இந்த பூச்சிகள் கடல் உணவுகள், உப்பு கலந்த முட்டை, நண்டு போன்றவற்றில் சேர்க்கப்படும்.
பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள், புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (எஸ்.எப்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உணவுகள் சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளின் சர்வதேச புகழ்பெற்ற மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்கும். இந்த பூச்சிகள் கடல் உணவுகள், உப்பு கலந்த முட்டை, நண்டு போன்றவற்றில் சேர்க்கப்படும்.
30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்து இந்த வகை உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
- இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார்.
சிங்கப்பூரில் உள்ள கேசினோ ஒன்றில் 4 மில்லயன் டாலர்களை [33 கோடி ரூபாய்] வென்ற நபர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே கேசினோவில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் விளையாடிய அந்த நபர் 4 மில்லியன் டாலர்களை வென்றுள்ளார்.
இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார். பதறிய கேசினோ ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாடற்ற முடியவில்லை. அவரது இறப்புக்கு அதீத அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்ப்பட்டதே காரணம் என்று பின்னர் தெரியவந்துள்ளது.
அந்த நபர் சுருண்டு விழுந்ததும் அவரைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் பதறும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டம் எப்போதாவது சிலருக்கு மட்டுமே வரும் நிலையில் அப்படி ஏற்பட்ட அதிர்ஷ்டமே அந்த நபருக்கு எமனாக முடிந்தது என்பது அபத்தமான உண்மையாக மாறியுள்ளது.
- லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
- மோசமான வானிலையால் ஏற்பட்ட திடீர் குலுக்கலில் ஒருவர் உயிரிழந்தார்.
லண்டன்:
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலையால் கடும் குலுக்கலை எதிர்கொண்டது. நடுவானில் நிலைதடுமாறி குலுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவித்தது.
இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் நடந்த விமான குலுக்கலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறிய காயங்கள் உள்ள பயணிகளுக்கு 10,000 டாலர் வழங்கப்படும். கடுமையான காயங்கள் உள்ளவர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி விவாதிக்கலாம். கடும் காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்ட பயணிகளுக்கு நீண்டகால மருத்துவ பராமரிப்பு தேவை மற்றும் நிதி உதவி கோரும் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய 25,000 டாலர் முன்பணமாக வழங்கப்படும். பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளது.