என் மலர்
நீங்கள் தேடியது "சிவகாசி"
- ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
- புகாரின் பேரில் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மாரனேரியில் பெப்சி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து பட்டாசு ஆலை விதி மீறி இயங்கியதாக கருதி கடந்த மார்ச் 1-ந்தேதி தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேறு ஆலைகளுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் ஆலை செயல்படுவது போல் தினமும் பலர் அந்த ஆலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோத மாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாசில் தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் அதிரடியாக ஆய்வு செய்த னர்.
இந்த ஆய்வில் 50 தொழி லாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறி யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் 'சீல்' வைத்தனர். மேலும் மாரனேரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய பயிற்சி பெற்ற போர்மேன்களை மட்டுமே பணியில் அமர்த்தி உரிய விதிமுறைகளை பின்பற்றி அவரது மேற்பார்வையில் மருந்து கலவை செய்ய வேண்டும் என்று கலெக்டர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதில் முரண்பாடு இருந்தால் ஆலை மீதும், அந்த போர்மேன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார்.
- இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
முருகனை கந்தன், கடம்பன், வேலன், வேலாயுதம் என பல்வேறு பெயர்களால் அழைப்பர். ஆனால் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் உள்ள முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார். இங்கே 'வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி' என்ற பெயரில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி தினமும் இங்கு யாகம் நடைபெறுவதும் இத்தலத்திற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.
தல வரலாறு
150 ஆண்டுகளுக்கு முன்பு துலுக்கன் குறிச்சி கிராமத்தில் தேரியப்பர்-வீரம் மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர். வேலாயுதம். இவர் தினமும் தனது அன்றாட விவசாயப் பணிகளைத் தொடங்கும் முன், அதிகாலையில் வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்தி லிங்கபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அத்துடன் இவர் மூலிகைகளைக் கொண்டு வைத்தியமும் செய்து வந்தார். அருள்வாக்கும் சொல்லி வந்தார்.
ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, முருகனை தரிசிக்க சென்றபோது, வைப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமலும், இறைவனை தரிசிக்க முடியாமலும் வருத்தத்துடன் இல்லத்திற்கு வந்து விட்டார். முருகனை தரிசிக்க முடியாத மனவேதனையில் எந்த பணியும் செய்யாமல் வீட்டில் இருந்தார். முருகனின் திருநாமத்தை கூறியபடி கண் அயர்ந்தார்.
அப்போது கனவில் இறைவன் தோன்றி. ''என்னைக் காண நீ வெகுதூரம் வர வேண்டாம். நானே உன்னைத் தேடி உன் இருப்பிடம் வந்துவிட்டேன். நீ ஆசையாக பராமரித்து வந்த வாழை மர தோட்டத்தில். ஒரே ஒரு வாழை மரத்தில் மட்டும் குலை தள்ளி இருக்கும். அதில் தான் நான் குடிகொண்டு உள்ளேன்" எனக் கூறி விட்டு மறைந்தார்.
மறுநாள் அதிகாலையில் வேலாயுதம் நீராடி விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கிச்சென்றார். அங்கே இறைவன் கனவில் சொன்னபடியே ஒரு வாழை மரம் மட்டும் குலை தள்ளி இருந்தது. அன்று முதல் தினமும் அதிகாலை நீராடி விட்டு முருகன் குடிகொண்டிருக்கும் வாழை மரத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்த செய்தி அக்கம்பக்கம் முழுவதும் பரவியது. இதையடுத்து பொதுமக் களும் அந்த வாழை மரத்தை வழிபட்டு வந்தனர்.
நாட்கள் பல சென்றன. ஒரு நாள் செவல்பட்டி ஜமீன்தாரின் பணியாட்கள் வாழைத்தோட்டம் நோக்கி வந்தனர். அவர்கள் "அரண்மனையின் பிரதான கணக்குப் பிள்ளையாக இருப்பவரின் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மணப்பந்தலில் வைக்க குலை தள்ளிய வாழை வேண்டும். வேறு எங்கும் வாழை கிடைக்கவில்லை. ஆதலால் ஜமீன்தார் தங்களிடம் உள்ள வாழை மரத்தை வெட்டி எடுத்து வரும்படி உத்தர விட்டுள்ளார். எனவே இந்த குலை வாழையை தர வேண்டும்" என கேட்டனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வேலாயுதம். இது சாதாரண வாழை அல்ல. இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில். அதனால் தர முடியாது" என்று மறுத்தார்.
இதுபற்றி அறிந்த ஜமீன்தார். நானே நேரில் செல்கிறேன்' என்று கூற, மணமகனோ தான் செல்வதாகக் கூறிச் சென்றான். அவனிடமும், வாழை மரத்தை தர முடியாது என்று வேலாயுதம் மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன், அந்த மரத்தை வெட்ட அதில் இருந்து ரத்தம் வெளியேறியது. மேலும் அங்கு தோன்றிய நாகம் ஒன்று. மணமகனை தீண்டியது. இதையறிந்த ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் தோட்டத்திற்கு விரைந்து வந்து, தங்களின் பிழையை மன்னித்து விடும்படியும், மணமகனின் உயிரை காப்பாற்றும் படியும் வேண்டினர்.
இதையடுத்து வேலாயுதம் தன் கையில் இருந்த பிரம்பை, மணமகனின் மீது வைத்து 'முருகா..முருகா.. முருகா.. என்று மூன்று முறை சொல்லவும், அவர் நல்லபடியாக உயிர் பிழைத்தார் என்று இந்த ஆலயத்திற்கு தலவரலாறு சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில் வழிபட்டால், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்குவதுடன், விஷக்கடி உள்ளிட்ட பல நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. குலம் தழைக்க வாழை மரத்தையே உதாரணமாக சொல்வர். ஆனால் இங்கு இறைவனே வாழை மரமாக இருந்து அருள்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் வெம்பக்கோட்டை அருகே துலுக்கன் குறிச்சியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- சிவகாசியில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் பட்டாசு ஆலைகள் இயங்க தொடங்கின.
- தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் 1,070 பட்டாசு ஆலை கள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழி லாளர்களும், உப தொழில் கள் மூலம் மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்ற னர்.
ரூ.6 ஆயிரம் கோடி
ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டமே என்றா லும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக் கும் ஓய்வறியா மனிதர் களை கொண்ட ஊர் சிவ காசியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி விற் பனை இலக்கை சிவகாசி பட்டாசு தொழில் சந்தைபடுத்தியுள்ளது.
கடைசி நேர பட்டாசு வெடி விபத்துகள், அதிகாரி களின் ஆய்வுகள் பட்டாசு விற்பனையை பாதித்த போதிலும் அதையும் தாண்டி பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாக விற்ப னையாளர்கள் தெரிவித்த னர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பட்டாசு ஆலைகளில் கடந்த 11-ந்தேதி உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக பட்டாசு ஆலைக ளில் மராமத்து பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்ட னர்.
ஆயத்த பணிகள்
பட்டாசு அறைகளுக்கு வெள்ளை அடிப்பது, செடி கொடிகளை அகற்றுவது, ஆலையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகள் முழுவீச் சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பட்டாசு ஆலைகளில் பூஜை கள் போட்டு உற்பத்தி பணி களை தொடங்கியது.
இதில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற் பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகளுக்கான வட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந் தும் பெறப்பட்ட ஆர்டர் களை கொண்டு பட்டாசு உற்பத்தி பணிகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் செய்திருந்தனர். பட்டாசு ஆலைகள் மீ்ண்டும் திறக்கப் பட்டதால் பட்டாசு ஆலை யில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.
- சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். லட்சுமி நாராயண புரம் ஊராட்சி பாறைப் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள சமை யலறை கூடம், கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80.90 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சாலை, ரூ.8.44 லட்சம் மதிப்பில் மயானத்தில் காத்திருப்போர் கூடம் கட்டிடப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி யில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.3.49 லட்சம் மதிப்பில் கிருஷ்ணாபுரம் ஊரணி தூர்வரப்பட்டு குளியல் தொட்டி அமைக்கும் பணி, ரங்க பாளையம் ஊராட்சியில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ.33.24 லட்சம் மதிப்பில் நாகரத்தினம்மாள் நகர் தெருவில் அமைக்கப் பட்டுள்ள சிமெண்ட் தளம்,
மங்கலம் ஊராட்சி கோபாலன்பட்டி கிரா மத்தில் ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சிமெண்ட் தளம் ஆகிய வற்றை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், உதவி பொறியா ளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சிவகாசியில் மாநகராட்சி புதிய கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வரு கிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமையில் அமைச் சர்கள் நேரு, சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது அமைச்சர் கள் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்க ளுக்கு எளிதிலும், விரை வாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவி களை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரம மின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதித்திட்டங் களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதி களுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த புதிய கட்டிட பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் அரசு நிர்ண யம் செய்யப்பட்டுள்ள காலக்கட்டத்திற்குள் விரைந்து முடித்து, பயன் பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின்போது தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் அசோகன், சீனிவாசன், தங்கபாண்டி யன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சிவகாசி மாநக ராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் விவேகன் ராஜ், மாமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி, வத்திராயிருப்பு யூனியன்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரிச்சநத்தம் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கி யை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் நியாயவிலை கடையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.31.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதே கிராமத்தில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக ளையும், கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.24.900 லட்சம் மதிப்பீட்டில், வரத்து கால்வாயில் உறிஞ்சி குழி அமைக்கப்பட்ட பணியை யும், 100 நாள் வேலை திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.மூவரை வென்றான் ஊராட்சி இந்திரா காலனியில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும், வடுகப்பட்டி ஊராட்சி களத்தூர் கிராமத்தில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.995 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும், குன்னூர் ஊராட்சியில்
15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.1.570 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.25 ஆயிரம் மதிப்பில் கால்நடை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்ட பணியையும், ரூ.30 ஆயிரம் மதிப்பில் வட்டார நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, வேளா ண்மைத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் உமா மகே சுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- பட்டாசு வெடித்த போது தீப்பொறி சாரத்தின் மீதுபட்டு தீப்பிடித்தது.
சிவகாசி:
சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்கு துணிகளால் ராஜகோபுரம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பேன்சி ரக பட்டாசு வெடித்தப் போது அதில் இருந்து வெளிவந்த தீப்பொறி கோயில் சாரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்கில் பட்டு தீப்பிடித்தது.
இதில் கோயில் உச்சிபகுதி முழுவதும் சாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களுடன் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து சிவகாசி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- சிவகாசி அம்மா உணவகத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- உணவு சாப்பிட வரும் ஏழைகள், முதியவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
சிவகாசி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம். ஏழை-எளிய மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
அம்மா உணவகங்களில் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும்,லெமன் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், விற்கப்படுகிறது. காலை இட்லி, பூரி, மலிவு விலையில் விற்ப்படுகிறது.
சிவகாசி மாநாகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் தினமும் மதியம் 1 மணிக்கு லெமன் சாதம், தயிர் சாதம் காலியாகி விடுகிறது. சாம்பார் சாதம் 1.30 மணியளவில் காலியாகி விடுகிறது. ஆனால் மாலை 3 மணி வரை உணவுகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது.
ஆனால் சிவகாசி மாநக ராட்சி நடத்தும் அம்மா உணவகம் 2 மணிக்கு பிறகு மூடப்பட்டு விடுவதால் உணவு சாப்பிட வரும் ஏழைகள், முதியவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
எனவே தேவையான அளவு உணவு சமைத்து தினமும் 2.30 மணி வரையிலாவது உணவு வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வருமா?.
- “தமிழ்ச்சோலை” புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
- பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடந்தது.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில் "தமிழ்ச்சோலை" புத்தக வெளியீட்டுவிழா பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடந்தது.
இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல் பிரதியை சிறப்பு விருந்தினரான சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் தனபால் பெற்றுக் கொண்டு பேசினார். மாணவர்களிடையே கற்றல் ஈடுபாட்டை பெருக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும், சிறந்த படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே "தமிழ்ச்சோலை" இதழ் ஆகும்.
விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் வாகேசுவரி வரவேற்றார். கல்லூரியின் கல்விசார் இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியை சித்ராதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப் பேராசிரியர்ரமேஷ் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியைகள் முத்துமாரி,சுதந்திராதேவி, ஜோதி ஆகியோரது முன்னிலையில் தமிழ்த்துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
- பட்டாசு உரிமையாளர்களுடன் நீரி அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
- தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
சிவகாசி
தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் கூறியதாவது:-
பட்டாசு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பசுமை பட்டாசு தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பசுமை பட்டாசு குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி நீரி அமைப்பு பசுமை பட்டாசு குறித்து ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி யாளர்கள் பலர் நீரியுடன் பசுமை பட்டாசு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பசுமை பட்டாசு தயாரிக்க தொடங்கினர்.
தொடர்ந்து நீரி பசுமை பட்டாசு குறித்த பார்முலாவை இணைய தளத்தில் வெளியிட்டது. அந்த பார்முலாவை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பட்டாசு தயாரித்து வருகிறார்கள். பின்னர் பட்டாசு உற்பத்தியாளர்கள் நீரி பார்முலா படி தயாரித்த பட்டாசுகளை நீரிக்கு சோதனைக்காக அனுப்பி அதற்கான சான்று மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை பட்டாசு ஆலைகள் பின்பற்றுகிறதா? என சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன.
இந்த ஆலை உரிமையாளர்கள் பசுமை பட்டாசு தயாரிக்க இதுவரை நீரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் முகாமில் அவர்கள் நீரி யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
இந்த முகாம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இந்த முகாமிற்கு நீரி அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு 8 பேர் சிவகாசி வருகிறார்கள்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நீரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிவகாசி:
சிவகாசி ஷாபாஸ்கான் பள்ளிவாசல் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜஹாங்கீர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
இப்தார் நோன்பு விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கும், உலகம் அமைதியாக வாழ வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும், புறமும் தூய்மை அடைகிறது. தூய்மை அடைவதன் மூலம் இறை பற்றும், அன்பும் மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத் தோங்குகிறது.
இதன்மூலம் இறைவன் அருளை நாம் பெற முடிகிறது. இப்தார் நோன்பு திறப்பு கொடையையும், அன்பையும் பறைசாற்றுகிறது. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனிதநேயம் இருக்கும். எங்கு மனிதநேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும். அறம் தழைக்கும். ஏழ்மை விலகும். நன்மை பெருகும்.
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசலில் நான் 30ஆண்டுகளாக இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றேன். இந்த பள்ளிவாசல் புதுப்பிக்கும் கட்டிடத்திற்கு ஏற்கனவே நிதி உதவி வழங்கியுள்ளேன். தொடர்ந்து நிதி உதவி வழங்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமுத்திரம், ஜீவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதுரகிரி, நகர செயலாளர் பாண்டியராஜன் அ.தி.மு.க. நகர செயலாளர் அசன் பதூரூதீன், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.