search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    • தற்கொலைக்கு முயன்ற நபர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்தர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
    • எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்கு அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்றம் அருகே தீ வைத்து கொண்டவரை காப்பாற்றிய போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்தர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எதற்காக அவர் பாராளுமன்றம் அருகே தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    • ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்ற ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
    • இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    உலகம் நவீனமயமாக்கலில் வீறுநடை போடுகிறது. புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. இதில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கிறது. 

    தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சட்டமேதை அம்பேத்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொழில் அதிபர் ரத்தன் டாடா, மற்றும் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இருப்பது போல ஒரு ஏஐ வீடியோவை வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில், கெஜ்ரிவால் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஜன்லோக்பால் மூலமாக ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி அதை தற்போது மறந்துவிட்டது.
    • டெல்லியை லண்டன் போல் ஆக்குவதாக தெரிவித்தார்கள். தற்போது நம்பர் ஒன் மாசு நகரமாக உள்ளது.

    டெல்லி மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி தெரிவித்துவிட்டது.

    இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. இடையில் மும்முனை போட்டி என்பது உறுதியாகிவிட்டது. ஆம் ஆத்மி 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் 2100 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியில் இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது ஆம் ஆத்மி அரசு மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக காற்று மாசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட 12 பாயிண்ட்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொருளாளர் அஜய் மக்கான் கெஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அஜய் மக்கள் கூறியதாவது:-

    டெல்லி முன்னாள் முதல்வரை ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் அது "Farziwal" ஆகத்தான் இருக்கும். நாட்டிலேயே யாரேனும் மோசடி கிங் என்றிருந்தால் அது கெஜ்ரிவால்தான். இதனால்தான் கெஜ்ரிவால் அரசுக்கும் (டெல்லி மாநில அரசு), பா.ஜ.க.வுக்கும் எதிராக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

    ஜன்லோக்பால் என்பதை கையில் எடுத்துக்கொண்டு ஆம் ஆத்மி ஆட்சியை கொண்டு வந்தது. ஆனால் அதை ஏன் நடைமுறை படுத்தவில்லை.

    டெல்லியில் துணைநிலை ஆளுநர் அனுமதிக்கவில்லை என்றால், பஞ்சாப் மாநிலத்தில் கொண்டு வர வேண்டியதுதானே. உங்களை தடுப்பது யார்?. அங்கு முழு மெஜாரிட்டி அரசாகத்தானே உள்ளீர்கள். பின்னர் ஏன் அங்கு கொண்டு வரவில்லை?. இது வெறும் சாக்குபோக்கு. 10 வருடத்திற்கு முன்னதாக ஜன்லோக்பால் மூலமாக ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. தற்போது அதை மறந்து விட்டது.

    டெல்லியை லண்டன் போல் ஆக்குவதாக கூறினார்கள். டெல்லியை நம்பர் ஒன் மாசு நகரமாக உருவாக்கியுள்ளனர்.

    2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை 40 நாட்கள் ஆதரித்ததால்தான் இன்று டெல்லி இந்த அவலநிலையை அடைந்துள்ளது. காங்கிரஸ் இங்கு பலவீனமடைந்துள்ளதாகவும் நினைக்கிறேன். அதை சரிசெய்ய வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    இவ்வாறு அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

    • சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியை மட்டும் தான் டெல்லி மக்கள் பாஜகவிற்கு கொடுத்தார்கள்.
    • ஆம் ஆத்மி தலைவர்களையும் அமைச்சர்களையும் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். மொத்தமுள்ள 70 தொகுகளுக்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

    டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என்றும் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பொய்யான வழக்கில் டெல்லி முதல்வர் அதிஷியை கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புக்கள் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு நான் உட்பட பல மூத்த ஆம் ஆத்மி தலைவர்களையும் அவர்கள் கைது செய்தனர். தேர்தல் பிரசாரத்தில் இருந்து எங்களை திசை திருப்புவதற்கு தான் இதை எல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.

    டெல்லி ஆம் ஆத்மி அரசின் பணிகளை துணை நிலை கவர்னர் மூலம் நிறுத்தி வைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் டெல்லி அரசு செயல்பட்டது. அதனால் ஆம் ஆத்மி தலைவர்களையும் அமைச்சர்களையும் சிறைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதும் ஆம் ஆத்மி அரசு செயல்பட்டது.

    டெல்லியில் பாஜகவிற்கு கவர்னர் மற்றும் 7 எம்.பி.க்கள் மூலம் 'பாதி அரசு' உள்ளது. ஆனால் அவர்கள் சாலை வசதி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், கல்லூரி என எதையுமே உருவாக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியை மட்டும் தான் டெல்லி மக்கள் பாஜகவிற்கு கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் அந்த வேலையை கூட ஒழுங்காக பார்க்கவில்லை. பாஜகவில் டெல்லி முதல்வருக்கான வேட்பாளர் கூட இல்லை" என்று தெரிவித்தார்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த மாத தொடக்கம் முதலே பலமுறை டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இன்று [டிசம்பர் 25] 29வது நாளை எட்டியுள்ளது.

    உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து அவர் 15 கிலோ வரை வரை எடை குறைந்துள்ளார். புற்றுநோயாளியான தலேவால் விடாப்பிடியாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றும் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழன் அன்று (டிசம்பர் 19) அவர் மயங்கி விழுந்தார்.

    இரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், எலக்ட்ரோலைட் சமநிலையின்மையாலும் டல்வாலின் நிலை மோசமாக உள்ளது. அவரது நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆனால் அவர் எந்த வித சிகிச்சையையும் மறுத்து வருகிறார்.

     

     

    விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் அல்லது தனது கடைசி மூச்சு வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் என்ற தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்று விவசாய சங்க உறுப்பினரான அவ்தார் சிங் தெரிவித்துள்ளார் . பட்டினியால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ள அவருக்கு அதிகரித்து வரும் குளிர் காலநிலையும் சவாலாக உள்ளது. 

     முன்னதாக கடந்த டிசம்பர் 2 ஆம் வாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த தலேவால், தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்த பொறுப்பும் அரசின் மீதுதான் விழும் என்று எழுதியிருந்தார்.

     

    தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி வரும் நிலையில் தலேவாலின் உயிரைக் காப்பாற்ற விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் முறையிடுவது என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவருக்கு ஆதராக கனௌரி மற்றும் ஷம்பு எல்லையில் மெழுகுவர்த்தி பேரணி நடந்தது. இதற்கிடையே டிசம்பர் 30-ம் தேதி பஞ்சாப் பந்த் நடத்துவதற்காக, டிசம்பர் 26-ம் தேதி கானௌரி எல்லையில் அனைத்து சமூக, வணிக, கலாச்சார மற்றும் மத அமைப்புகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    • ஒருகாலத்தில் 40 ரூபாயாக இருந்த பூண்டின் விலை தற்போது 400 ரூபாயாக மாறி விட்டது.
    • அதிகரித்து வரும் பணவீக்கம் சாமானிய மக்களின் பட்ஜெட்டை அழித்துவிட்டது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.

    அதன்படி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள கிரி நகர் காய்கறி சந்தைக்கு சென்ற ராகுல் காந்தி விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ஒருகாலத்தில் 40 ரூபாயாக இருந்த பூண்டின் விலை தற்போது 400 ரூபாயாக மாறி விட்டது. அதிகரித்து வரும் பணவீக்கம் சாமானிய மக்களின் பட்ஜெட்டை அழித்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

    • வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • டெல்லி போலீசார், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினருக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினர்.

    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுபோல், டெல்லியில் குடியேறிய வங்காளதேசத்தினரை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் கவர்னர் வி.கே.சக்சேனா கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து, கடந்த 11-ந் தேதி டெல்லி போலீசார், சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினருக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினர்.

    இதற்கிடையே, டெல்லி புறநகர் மாவட்டத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்காளதேசத்தினரை கண்டறியும் ஆவண சரிபார்ப்பு பணி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது.

    உள்ளூர் போலீசார் அடங்கிய தனிப்படையினர், மாவட்ட வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள், சிறப்பு பிரிவினர் ஆகியோர் இந்த சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். வீடு, வீடாக சென்று வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை கேட்டு வாங்கி பரிசோதித்தனர்.

    சிலரது சொந்த ஊருக்கும் சென்று ஆவணங்களை சரிபார்த்தனர். சந்தேகத்துக்குரியவர்களின் உளவு தகவல்களை சேகரித்தனர்.

    12 மணி நேரம் நடந்த இந்த சரிபார்ப்பு பணியில், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற சந்தேகத்தில் 175 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுபோல், கடந்த 13-ந் தேதி, டெல்லி நகரப்பகுதியில் நடந்த பரிசோதனையில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் என்ற சந்தேகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி சதாரா போலீசார் கடந்த 12-ந் தேதி நடத்திய சோதனையில் 32 பேரை அடையாளம் கண்டறிந்தனர். இதன்மூலம், டெல்லியில் இதுவரை 1,500 வங்காளதேசத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    • பெங்களூருவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கன்னடம் பேச முடியவில்லையா?
    • டெல்லி மேரி ஜான்[ டெல்லி எனது அன்பே] என்று பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவின் ஐடி தொழில்நகரமாக கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு விளங்கி வருகிறது. கேரளா முதல் வட மாநிலங்கள் வரை பல்வேறு மாநிலங்களை சேந்த இளைஞர்கள் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாற்றி வருகின்றனர்.

    பெங்களூரில் இருக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் கன்னட மொழி தான் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கன்னடர்களிடையே இருந்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தொடங்கி ஆட்டோ டிரைவர்கள் வரை அதையே வலியறுத்தி வருகின்றனர்.

    இந்த அழுத்தம் சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் உண்டு. இந்நிலையில் கன்னடம் தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள், டெல்லிக்கு வாருங்கள் என Cars24 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [CEO] விக்ரம் சோப்ரா இன்ஜீனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

     

    சர்ச்சையை ஏற்படுத்திய அவரது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பெங்களூருவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கன்னடம் பேச முடியவில்லையா? பரவாயில்லை. ஆ ஜாவோ தில்லி (டெல்லிக்கு வா).

    டெல்லி என்சிஆர் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் திரும்பி வர விரும்பினால், vikram@cars24.com என்ற தளத்தில் எனக்கு எழுதுங்கள் - டெல்லி மேரி ஜான்[ டெல்லி எனது அன்பே] என்று பதிவிட்டுள்ளார்.

    வேலைக்கு ஆள் தேட விக்ரம் சோப்ரா இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளார் என்றும் ஒரு வகையில் பெங்களூரு வாசிகளை, கன்னடர்களை தவறாக சித்தரிக்கும் பதிவாகவும் இது உள்ளதாக இணைய வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Cars24 என்பது பயன் படுத்திய கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் ஆகும்.

    • மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
    • காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது.

    டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்தில் இருந்து 50 வரை இருந்தால் "நல்லது" என்றும் 51 முதல் 100 வரை இருந்தால் "திருப்திகரமானது" என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் "மிதமானது" என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் "மோசமானது" என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் "மிகவும் மோசமானது" என்றும் 400 முதல் 500 வரை இருந்தால் "அபாயகரமானது" என்றும் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், இன்று டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது. அங்கு இன்றைய வெப்பநிலை 7.5 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலையை பொருத்தவரை பகலில் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    • பதிவு மீண்டும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
    • அதிக விலையைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான குளிர்கால விடுமுறை சீசன் நெருங்கி வருவதால், பல வழித்தடங்களில் விமான டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பண்டிகைக் காலங்களில் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பது பேசு பொருளாகி வருகிறது.

    அந்த வகையில், டெல்லியில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு நேரடி விமானத்திற்கு பயண கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது சமீபத்தில் வெளியிட்ட பதிவு மீண்டும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    டெல்லியில் இருந்து கண்ணூருக்கு விமான டிக்கெட்டுகளின் அதிக விலையைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார். ஸ்கிரீன்ஷாட்களின் படி நேரடி விமானங்களுக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ. 21,966 முதல் ரூ. 22,701 வரை குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "டெல்லியிலிருந்து கண்ணூருக்கு இண்டிகோவின் டிக்கெட் விலை 21ஆம் தேதி. நேரடி விமானம் ரூ.22,000! துபாய் செல்வது மலிவானது! இதைத்தான் ஏகபோகம் செய்கிறது" என்று அவர் தனது பதிவில் எழுதினார்.

    • டெல்லியில் காற்று மாசு குறியீடு 445 ஆக உள்ளது.
    • காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது.

    இந்தியா கேட்குளிர்காலம் ஆரம்பமானதில் இருந்து தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    காற்று மாசு குறியீடு டெல்லியில் 445 ஆகவும் நொய்டாவில் 359 ஆகவும் குருகிராமில் 400 ஆகவும் அதிகரித்துள்ளது.

    குதுப் மினார்

    குதுப் மினார்

    காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா கேட்

    இந்தியா கேட்

    இந்நிலையில், டெல்லியில் உள்ள பல்வேறு நினைவுச் சின்னங்கள் புகைமூட்டத்திற்கு முன்பும் பின்பும் எப்படி உள்ளது என்பதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    செங்கோட்டை

    செங்கோட்டை 

     

    • ஜட்டியில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை பறிமுதல்.
    • இந்திய சந்தையில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.68.93 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்தில் இருந்து வந்த இரண்டு பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சோதனையின் போது, பயணிகளின் ஜட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை இருப்பதை கண்டு விமான நிலைய அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.

    பின்னர் அவர்களின் ஜட்டியில் ரகசிய பாக்கெட்டில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய சந்தையில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.68.93 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×