என் மலர்
நீங்கள் தேடியது "தமிழர்கள்"
- படிக்கும் காலத்தில் ஆயுதமேந்திய இடதுசாரி கிளர்ச்சி இயக்கமான ஜேவிபி[JVP] அமைப்பில் சேர்ந்துள்ளார்.
- 2014 ஜனவரியில் ஜேவிபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
இலங்கை அதிபர் தேர்தல்
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் ஜனதா விம்முக்தி பெரமுனா (JVP) - (NPP) கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன்படி ஜெவிபி தலைவர் அனுர குமார திசாநாயக [55 வயது] இலங்கை அதிபராகிறார். இலங்கையில் நடந்த பொருளாதார நிலையின்மை பிரச்சனைக்குப் பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இது. இந்த தேர்தலில் 23 சதவீத வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் ப்ரேமதாசாவை 42 சதவீத வாக்குகளைப் பெற்று திசாநாயக வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெறும் 16 சதவீத வாக்குகளுடன் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.
ஜேவிபி
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புட்டேகம [Thambuttegama] கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பிறந்தார் அனுர குமார திசாநாயக. இவரது தந்தை தினக் கூலியாக வேலை பார்த்தவர் ஆவார். களனி பல்கலைக்கழகத்தில் [university of Kelaniya] அறிவியலில் பட்டம் பெற்ற திசாநாயக படித்துவந்த சமயத்திலேயே ஏகாதிபத்திய முதலாளித்துவ போக்கை கடைப்பிடித்த அப்போதைய அரசுக்கு எதிராக 1987 -89 காலகட்டத்தில் எழுச்சி பெற்ற ஆயுதமேந்திய கிளர்ச்சி இயக்கமான மார்க்சிய லெனினிய இடதுசாரி ஜேவிபி[JVP] அமைப்பில் சேர்ந்துள்ளார்.
அரசியல்
1995 ஆம் ஆண்டில் சோஷலிஸ்ட் மாணவர்கள் அசோசியசனுக்கு தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திசநாயக அதன்பின்னர் ஜேவிபி அமைப்பின் மத்திய செயற்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1998 இல் ஜேவிபி அமைப்பின் அரசியல் முடிவுகளை எடுக்கும் பொலிட்டிகள் பீரோ குழுவில் சேர்க்கப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட திசநாயக பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய அதிபர் குமாரதுங்கா ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த ஜேவிபி அமைப்பினர் 2002 ஆம் ஆண்டு அவருடைய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் அமைதி பேச்சுவரத்தை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஆதரவை விளக்கிக்கொண்டனர்.
CHEASEFIRE - LTTE
தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சேவின் UPFA கட்சியுடன் கூட்டு வைத்த ஜேவிபி விடுதலைப் புலிகளுடன் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான சீஸ் ஃபயர்[ceasefire] ஒப்பந்தத்தை எதிரித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அந்த தேர்தலில் இவர்களின் கூட்டணி வெற்றி சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்க அதிபரானார். கூட்டணியில் இருந்த ஜேவிபி யை சேர்ந்த அனுர திசநாயகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழிந்து திசநாயாக அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
தலைவர்
தொடர்ந்து அரசியலில் தீவிரத்துடன் இயங்கி வந்த அவர் கடந்த 2014 ஜனவரியில் ஜேவிபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வென்ற அனுர குமார திசநாயக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நிலைத்தன்மை சிதைந்ததால் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து அதன்பின் நடக்கும் தற்போதைய தேர்தலில் அனுர குமார வென்றுள்ளார்.
பொருளாதார நிலையின்மை
இலங்கை அரசில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாக அமைப்பை முற்றிலுமாக மாற்றுவதாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த திசநாயக முந்தைய அரசுகள் பொருளாதாரத்தைக் காப்பாற்றத் தவறியதை சுட்டிக்காட்டி தங்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி மக்களிடம் ஆதரவு கேட்டார். ஜேவிபியின் தேர்தல் அறிக்கையில் இலங்கையின் கல்வி, பொது சேவைகள் மற்றும் மக்கள் வாசிப்பதற்கான குடியிருப்பு தட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை பிரதானமாக முன்னிறுத்தி வாக்குறுதிகள் அமைந்திருந்தது.
வரும் -காலம்
இந்தியாவுக்கு கச்சத்தீவை வழங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் நிலையாக உள்ள ஜேவிபி இடதுசாரி அமைப்பாக இருந்தாலும் தமிழர்கள் பிரச்சனையில் சிங்கள ஆதிக்கத்தின் பக்கம் சார்ந்து ஒரு தலை பட்சமாகவே செயல்பட்டு வருவது ஆகும். எனவே வரும் காலங்களிலும் அனுர திசநாயகவின் முடிவுகளில் அது பிரதிபலிக்கும் என்றே எதிரிபார்க்கப்படுகிறது. ஆனால் தங்களுக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்க்கது.
- குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.
- உடல்கள் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குவைத் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 10 பேர் வேலைக்காக வெளியில் சென்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 15 பேர் தீ விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்த தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் மங்காப் பகுதியின் அருகே உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடலை அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலும் இன்றே அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
- தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
கட்டத்தில் சுமார் 150 பேருக்கும் அதிகமானோர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குவைத் நிறுவனத்தின் துரோகம் மற்றும் மோசடி குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திலும் கடந்த ஜூலை 23-ந் தேதி அவர்கள் புகார் செய்துள்ளனர்.
- 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 இளைஞர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்தின் மூலமாக குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தூய்மைப் பணியாளர்களாக பணிக்கு சென்றனர். அதற்காக சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்திற்கு ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். குவைத் நிறுவனத்தில் அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 (75 குவைத் தினார்) வீதம் இரு ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டு பணி முடிந்த நிலையில், வேலைவாய்ப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுமானால் ரூ.1.25 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று குவைத் நிறுவனம் கட்டாயப்படுத்தியிருக்கிறது.
அவர்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம், அவர்களின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக் கொண்டது. அவர்களின் உடமைகள் அனைத்தையும் தூக்கி வீசிய நிறுவன அதிகாரிகள், அவர்கள் தங்குவதற்காக அளிக்கப்பட்டிருந்த இடத்தையும் மூடிவிட்டனர். அதனால், 20 இளைஞர்களும் கடந்த ஒரு மாதமாக தங்குவதற்கு இடம் இல்லாமலும், உண்ண உணவு கிடைக்காமலும் குவைத்தில் வாடுகின்றனர்.
குவைத் நிறுவனத்தின் துரோகம் மற்றும் மோசடி குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திலும் கடந்த ஜூலை 23-ந் தேதி அவர்கள் புகார் செய்துள்ளனர். ஆனால், அதன்பின் ஒரு மாதம் ஆகியும் இது வரை எந்த நடவடிக்கையையும் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளவில்லை.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட குவைத் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களின் கடவுச்சீட்டு, ஊதிய நிலுவை ஆகியவற்றை பெற்றுக் கொடுத்து, 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பங்களிப்பு தொகை ரூ. 27 லட்சத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மூலம் வழங்கப்பட்டது.
- ரூ.54 லட்சம் செலவில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மேம்பாலத்தில் அரசு பார்வைதிறன் குறைபாடுடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போது மான வகுப்பறை கட்டிடம் இல்லை.
இதையடுத்து புதிதாக நமக்கு நாமே திட்டத்தில் கீழ் 4 வகுப்பறை கள் கட்ட முடிவு செய்ய ப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கான பங்களிப்பு தொகை ரூ. 27 லட்சத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மூலம் வழங்கப்ப ட்டது.
அதன்படி ரூ.54 லட்சம் செலவில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்படி புதிய கட்டிடம் 3 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டதையடுத்து திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பின்னர் பள்ளியில் புதிய கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டை மேயர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் சோபனா மாலதி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கால்நடைகள் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம்.
- கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் போது பாதுகாப்புக்காக வீரர்கள் உடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம்:
வீரம் செறிந்தது தமிழ்மண். பழங்கால தமிழர்கள் வீரத்தை போற்றி புகழ்ந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே முக்கியத் தொழிலாக இருந்தன. ஒருவரின் விளை நிலங்கள் பரப்பு மற்றும் கால்நடைகள் எண்ணிக்கையை வைத்து அவரின் சமுதாய அந்தஸ்து நிர்ணயிக்கப்பட்டது. குறுநிலமன்னர்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள், செல்வந்தர்கள், ஆயிரக்கணக்கில் ஆடுகளும், நூற்றுக்கணக்கில் மாடுகள் மற்றும் எருமைகள் வளர்த்தனர். தற்போது உள்ளதைப் போல மக்கள் தொகை அதிகம் இல்லாததால், அமராவதி ஆற்றங்கரையோரம் பலநூறு ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. அதனால் மடத்துக்குளம் பகுதியில்தொடங்கி கொமரலிங்கம், கல்லாபுரம் அமராவதி வன ச்சரகம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரை மேய்ச்சல் நிலத்தின் எல்லைகள் நீண் டிருந்தன.
இந்தப் பகுதிக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம். கோடைகாலம் மற்றும் வறட்சி ஏற்பட்ட காலங்களில் மலை அடிவார பகுதியில் தண்ணீர் மற்றும் பசுமை உள்ள பகுதியில் பட்டி அமைத்து சில வாரம் தங்கி நன்கு மேய்ந்த பின்பு, கால்நடைகளை திருப்பி அழைத்து வந்துள்ளனர். எல்லைகள் வரையறை இல்லாததால், வனப்பகுதியில் உள்ள விலங்குகள் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை வேட்டையாடின. இதைதடுக்கவும் கால்நடைகளை பாதுகாக்கவும் பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் கத்திவீசுதல், ஈட்டி எறிதல், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பலவகையான தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்தவர்களாக இருந்தனர்.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் போது பாதுகாப்புக்காக வீரர்கள் உடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு மிருகங்கள் தாக்கினால் சண்டையிட்டு அதை கொன்று கால்நடைகளைத் பாதுகாத்தனர். இந்தப் பகுதியில் அதிகளவு புலிகளின் தாக்குதல் இருந்துள்ளது. இதுபோல் புலியுடன் வீரர்கள் போராடிய இடத்தில் நினைவாக கருங்கல்லில் புடைப்பு சிற்பம் உருவாக்கி அதை வணங்குவது தமிழர்கள் வழக்கமாக இருந்துள்ளது. இந்த சிற்பத்திற்கு புலிக்குத்திக்கல் என பெயரிட்டனர்.இந்த கல்லில் வீரன் ஒருவன் புலியுடன் போராடுவது போல சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூரில் புலிக்குத்திக்கல் உள்ளது.இன்றும் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.
- மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழகர்கள் முதற்கட்டமாக இன்று 13 பேர் மீட்கப்படுகின்றனர்.
- வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளனர்.
தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்தனர்.
வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற இந்தியர்கள், தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தராமல் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இதையடுத்து, மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழகர்கள் முதற்கட்டமாக இன்று 13 பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் இன்று தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி, வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளனர்.