என் மலர்
நீங்கள் தேடியது "துணிப்பை"
- கிழக்கு கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தது
- பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கடலோர மீனவர் பகுதியில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகரித்ததால், அப்பகுதி கடற்கரை, மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உத்தரவின் பெயரில் அங்குள்ள கடைகளை அலுவலர்கள் சோதணையிட்டு எச்சரித்தனர்.
மேலும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வீட்டுக்கு வீடு துணிப்பைகளை வழங்கியது. பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
- ரெகுநாதபுரம் ஊராட்சியில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது.
- இந்த முகாமில் 30 நாட்கள் பயிற்சி நடைபெறும்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் முகாமை தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் இந்திய அரசின் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் காரைக்கால் நிறுவ னம் சார்பில் கிராமப்புற பெண்களுக்கான திறன் வளர்ப்பு திட்டம் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சியில் 32 பெண்கள் கலந்து கொண்டனர். 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். ஓ.என்.ஜி.சி மூலம் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய தையல் மிஷின்கள், அரசு பள்ளிகளுக்கு கட்டங்கள் சீரமைப்பு பணி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்குதல், 2 கிராமங்களுக்கு உயர் மின் கம்பம் அமைத்து கொடுத்தல், ஒரு கிராமத்திற்கு 7 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், காரைக்கால் நிறுவனத்தின் மேலாளர்கள் ரவிக்குமார், விஜயகண்ணன், தங்கமணி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் புல்லாணி (திருப்புல்லாணி), சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் (ரெகுநாதபுரம்), முத்தமிழ் செல்வி பூர்ணவேல் (வாலாந்தரவை), மண்டபம் வட்டார மருத்துவர் சுரேந்தர் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
- பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- இதில், ரூ. 10 நாணயம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக் கொள்ளலாம்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் சரபோஜி சந்தையில் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் தொடங்கப்பட்டது.
மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் அமைக்க ப்பட்ட இந்த எந்திரத்தின் செயல்பாட்டை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
நெகிழி பயன்பாட்டை அகற்றி துணியால் செய்யப்பட்ட மஞ்சள் பையைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்தத் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 10 நாணயம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிா்த்து மீண்டும் மஞ்சள் பை அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கி யும் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.