என் மலர்
நீங்கள் தேடியது "நக்சலைட்டுகள்"
- தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்பது, அவர்களது வாயில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்
- பழங்குடியின பெண்களைப் பலாத்காரம் செய்வது, குற்றவாளிகளை ஆதரிப்பது உள்ளிட்வற்றை செய்து வருகிறார்கள்.
பாஜக பயங்கரவாதிகளின் கட்சி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் நகர்ப்புற நக்ஸலைட்டுகளால் நடத்தப்படும் கட்சி என பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வரும் நிலையில் மல்லிகார்ஜுன கார்கே அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கார்கே பேசியதாவது, முற்போக்கு சிந்தனை உள்ளவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று அழைப்பது மோடியின் வழக்கமாக உள்ளது. ஆனால் பாஜகவே ஒரு பயங்கரவாத கட்சிதான்.
தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்பது, அவர்களது வாயில் சிறுநீர் கழிப்பது, பழங்குடியின பெண்களைப் பலாத்காரம் செய்வது, இந்த குற்றவாளிகளைஆதரிப்பது என செயல்படும் அவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் சொல்ல மோடிக்கு எந்த வகையான உரிமையும் கிடையாது.
பாஜகவின் அரசு உள்ள இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு குறிப்பாக பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் நடந்து வருகிறது. ஆனால் வன்முறைக்கு எதிராக உபதேசம் மட்டும் செய்கிறார்களே ஒழிய கட்சியில் உள்ள அத்தகையோர்களை கட்டுப்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
- 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி வேட்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (7-ந்தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய மாநில அரசுகளின் ஆயுதபடை உயர் போலீஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்கிறார்கள்.
கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. நக்சலைட்டுகளின் பாதிப்பு 86 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக குறைந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- போலீசார் சிந்தவாகு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
சத்தீஸ்கர்:
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பாதுகாப்புப்படை வீரர்களின் உதவியுடன் தனிப்படை போலீசார் சிந்தவாகு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.
இதில் 2 நக்சலைட்டுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
- சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
- தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள்.
மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 153 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டம் அடுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களும், 4 மாவட்ட போலீசாரும் இணைந்து நக்சல்வேட்டையில் ஈடுபட்டனர்.
நக்சலைட்டுகளும், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
- நக்சல் தடுப்பு வேட்டையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
- நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை.
சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் கங்களூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
- பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
- இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.
ராஞ்சி, மே. 4-
பிரதமர் மோடி இன்று காலை ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
2014-ம் ஆண்டு உங்கள் வாக்கு மூலம் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றினீர்கள். ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திராவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.
எனவே பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். அவர்களது மகன்கள் கெட்ட சகவாசத்தால் ஆயுதம் ஏந்திக் காடுகளை நோக்கி ஓடினார்கள். ஜார்கண்ட மாநிலம் நக்சலைட்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பா.ஜ.க. ஆட்சியால் உங்களது ஒவ்வொரு வாக்கும் இளம் பிள்ளைகளை காப்பாற்றியது. அவர்களின் தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது. இதுதான் ஒரு வாக்கின் பலம். உங்கள் ஒரு வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்ட உங்கள் ஒரு வாக்கு பங்களித்தது.
உங்களின் வாக்கு பயங்கரவாதத்தை தடுப்பதில் எங்களுக்கு உதவியது. பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகமாக இருந்தது. தற்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் சென்று கதறி அழுதது. இப்போது பாகிஸ்தான் உலகம் முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறது. சர்ஜிக்கல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் பாகிஸ்தானை உலுக்கியது.
துல்லிய தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் வலுவான இந்தியா தற்போது வலுவான அரசாங்கத்தை மட்டுமே விரும்புகிறது.
ஏழைகளுக்கு காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை. அவர்களது தலைமுறைக்காக ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தனர்.
காங்கிரசும், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சியும் அவர்களது பிள்ளைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் உங்களது பிள்ளைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நான் மக்கள் பணி செய்வதற்காக பிறந்தவன்.
கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருக்கும் என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை. ஊழல் நிறைந்த ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்காக பெரும் சொத்து குவித்துள்ளனர்.
ஆனால் எனது வாரிசுகள் நீங்கள் அனைவரும்தான். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் என் வாரிசுகள். வளர்ச்சியான பாரதத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக கொடுக்க விரும்புகிறேன். என் குடும்பமும், கோடிக்கணக்கான குடும்பங்களும் சந்திக்க நேர்ந்ததை (வறுமை) நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் வாழ்ந்தேன். ஒரு ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை அறிவேன். கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை.
நான் பயனாளிகளை சந்திக்கும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். ஏழ்மையையும், போராட்டத்தையும் கண்டவர்களால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும். தனது தாய் அடுப்பில் புகையால் இருமுவதைக் காணாதவரால் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியாது.
மோடியின் கண்ணீரில் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) தனது மகிழ்ச்சியைத் தேடுகிறார். வறுமை பற்றி காங்கிரசுக்கு என்றைக்குமே தெரியாது. காங்கிரஸ் இளவரசர் தான் பணக்காரராக இருப்பதற்காக பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் வறுமையில் வாழ்வதை நான் விரும்பவில்லை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவதில் காங்கிரசின் எந்த வடிவமைப்பையும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
- நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில தினங்களில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள நாராயணன்பூரி, கன்கேர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 2 பெண் உள்பட 7 நக்சலைட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அங்கிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகள் வேட்டை நடந்து வருகிறது.
- போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
- சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் ராஜேஷ்சிங்ராஜ்புத் மற்றும் அணில்குமார்சாம்ராட் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மராட்டிய மாநில எல்லையையொட்டி உள்ள போலீஸ் நிலைய முகாமுக்கு சென்று கொண்டு இருந்தனர்.அவர்கள் துப்பாக்கி எதுவும் எடுத்துசெல்லவில்லை.
அப்போது நக்சலைட்டு கும்பல் போலீஸ்காரர்களை சுற்றி வளைத்தது.இதனால் போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . அவர்கள் சுதாரிப்பதற்குள் நக்சலைட்டுகள் 2 பேரையும் நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இதில் சம்பவ இடத்திலேயே ஒரு போலீஸ்காரர் உயிர் இழந்தார்.மற்றொருவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார்.
போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.