என் மலர்
நீங்கள் தேடியது "நடால்"
- 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
- 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.
3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.
காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் இம்முறை பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஜோகோவிச்சின் வெற்றிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடால் கூறியதாவது:-
இந்த அற்புதமான சாதனைக்கு ஜோகோவிச்சுக்கு பல வாழ்த்துகள்.
23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண், அதை நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதை உங்கள் குடும்பம் மற்றும் குழுவுடன் கொண்டாடுங்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
Many congrats on this amazing achievement @DjokerNole
— Rafa Nadal (@RafaelNadal) June 11, 2023
23 is a number that just a few years back was imposible to think about, and you made it!
Enjoy it with your family and team! ??
- டியாபோ 6-4 , 4-6 , 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
- இகா ஸ்வியாடேக், பிளிஸ்கோவா கால் இறுதிக்கு முன்னேற்றினர்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ்டியாபோவை எதிர் கொண்டார்.
இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். டியாபோ 6-4 , 4-6 , 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். டியாபோ கால்இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ருப்லெவை சந்திக்கிறார்.
9-வது வரிசையில் உள்ள அவர் 6-4 , 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 7-ம் நிலை வீரரான கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எளிதில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் சின்னா (இத்தாலி) வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து ) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜிலி நீமெயரை சந்தித்தார். இகா 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
ஸ்வியாடெக் கால் இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை எதிர் கொள்கிறார். பெகுலா 4-வது சுற்றில் 6-3, 6-2 என்ற கணக்கில் 21-வது வரிசை யில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவை (குரேஷியா) தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) 3-6, 6-3, 6-2 என்ற கணக்கில் டேனிலி கோலின்சை (அமெரிக்கா) தோற்கடித்தார்.
இன்னொரு போட்டியில் 22-வது வரிசையில் உள்ள கரோலின் பிளிஸ்கோவா (செக் குடியரசு) 7-5, 6-7, (5-7), 6-2 என்ற கணக்கில் அசரென்சாவை (பெலாரஸ்) வீழ்த்தினார்.
கால் இறுதி ஆட்டத்தில் ஷபலென்கா-பிளிஸ்கோவா மோதுகின்றனர்.
- நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
- எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.
'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3
நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.
இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
- உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளார்.
- முன்னணி வீரரான ஆன்டி முர்ரே 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், லிதுவேனியா வீரர் பெரான்கிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் 5-ம் நிலை கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார். இதில் 6-2, 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.
அதன்பின் நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டோர். தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் நடால், ‘‘தரவரிசை முக்கியமல்ல, உடல் நலம்தான் முக்கியம்’’ என்று தெரிவித்துள்ளார்.
காயம் குணமாகி கடந்த வாரம் அபு தாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் பங்கேற்றார். தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் தோல்வியைத் தழுவினார்.